சனி, 25 பிப்ரவரி, 2017

உரோமம் என்ற சொல்

உரோமம் என்ற சொல்லைப் பற்றிச் சிறிது அளவளாவுவோம்.

பண்டைமக்கள், உடலின் தோலுக்கு ஆங்கு வளரும் மயிர், பாதுகாப்பு
அளிப்பதாகக் கருதினர்.  அவர்கள் அறிவியலாளர் அல்லர். ஆனால்
அவர்களின் கருத்தின்படி சொற்களை அவர்கள் அமைத்தனர்.

தோலின் மூலமே நாம் உற்று அறிகிறோம்.  உறுதல் என்பது தொட்டறிவு ஆகும். இது ஊறு எனவும் படும்.  உறு> ஊறு. முதனிலை ( என்றால்
சொல்லில் நிற்கும் முதலெழுத்து "உ" )  இங்கு நெடிலாக ஊறு என்று
மாறுவது.  உறு என்பதனோடு நின்றுவிடின் முதனிலை திரியாது நின்றது
என்போம்.

ஓம்புதல் என்பது காத்தல். இதன் அடிச்சொல் காத்தல் என்று பொருள்தரும் ஓம். இதுவே பல மந்திரங்களிலும் பயின்று வழங்குவதாகும்.

உறு + ஓம் + அம் (விகுதி).  = உறோமம் > உரோமம் ஆகிறது.

"உறும் உறுப்பாகிய தோலினைக் காக்கும் மயிர்" என்று வரையறவு
செய்யவேண்டும்.

இதை எழுதியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. கள்ளமென்பொருள்
அதனை அழித்துவிட்டது.


வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

BIRD : பற > பறடு > பெர்டு.!!

பக்கியும் பட்சியும்.

இச்சொல் வடிவங்கள் பற்றி உரையாடுவோம்.

ஒரு குருவிக்கு முன், பின், வலம், இடம் என்று நான்கு பக்கங்கள்
இருந்தாலும், சிறப்பாக விரிந்த பக்கங்கள் இடமும் வலமுமே ஆகும்.
இப்பக்கங்களில் இறக்கைகள் உள்ளன. பக்கங்கள் உடைமையின் அவை
பக்கிகள் ஆயின. இச்சொல் பின் பட்சி என்று திரிந்தது.

எனவே, பக்கி > பட்சி ஆகும்.

இனிப் புள் என்பது பறப்பது என்னும் பொருள்தரும்.  புள் என்பதில்
ஒரு சி விகுதி சேர்த்தால், புள்+ சி = புட்சி ஆகும். இச்சொல்லும்
திரிந்து, பட்சி ஆகும்.

ஆக:  புட்சி > பட்சி.

உகரம் அகரமாகும் இடங்கள் உள. எடுத்துக்காட்டு: குட்டை > கட்டை;
குட்டையன் = கட்டையன்.

 பட்சி என்பது இருவகையிலும் அமைவது.

இப்போது பேர்டு என்ற ஆங்கிலச்சொல்லைப் பாருங்கள்.
பறத்தல்:  பற > பறடு >  பெர்டு.  எப்படி?

தமிழ் பல மொழிகட்குத் தாயாகும் மொழி என்க.

அறிந்து மகிழ்க .

ரோகம்

உறு:   நோய் உறு.
அதாவது உறுவது நோய். வாத பித்த சிலேத்துமங்கள் குறைவது மிகுவது.

உறுவது ஓங்கினால்  ( கூடினால் )  அது : ஓங்கு > ஓகு. இது
இடைக்குறை.  ஓகு >ஓகம்.

உறு+ ஓகம் = உறோகம்.  அல்லது உரோகம் >  ரோகம்.

 சொல்: நோய். குறிப்பது

தமிழினின்று புனையப்பட்டது.

உறுவது  ஓங்குதல் :   உறு  ஓகம்   ;  உறு  - முதல்நிலைத் தொழிற்பெயர்;.  இது நோயைக் குறிக்கிறது.   ஓகம் :  மிகுதல்..    உ றோ க ம்  வல்லின றோ -வை மாற்றுக.   உரோகம்  தலையை வெட்டுக:  ரோகம் .

2009 இடுகை  அழிக்கப் பட்டது  கள்ள மென்பொருளால்.