புதன், 22 பிப்ரவரி, 2017

கோள் இராசி

நாளும் கோளும் என்பதோர் இணைமொழி. இதில் கோள் என்பதையும்
இராசி என்பதையும் அறிவோம்.

கோள் என்பது பெரும்பாலும் ஒளியைப் பிற கிரகத்தினிடமிருந்து பெறும்
ஒன்று.  கொள்ளுதலாவது ஒளியைக் கொள்வது அல்லது பெறுவது.
கோளம் என்ற சொல்லும் கோள்+ அம் என்று பிரிவதால், அது உருண்டை
வடிவிலானது  என்பதும் பெறப்படும். இப்படி இதன் பொருள் இரட்டுறலாக  (இரு பிறப்பினதாக) இருத்தல் தமிழ் சொல்லமைப்புத்
திறத்தைக் காட்டுவதாகும்.

இராசி என்பது இரு+ ஆசு + இ எனப்பிரியும். இது தலையிழந்து ராசி
என்று வரும். நிரம்ப என்பது ரொம்ப என்றும்  உரட்டி என்பது   ரொட்டி என்றும் திரிந்து ரொட்டி (சற்றுப் பொருளும் திரிந்து)  என்றும்  வருதல் போல. இவை
பல சொற்கள் தலையிழத்தலைக்  காட்டும். எருமையூர் என்பது மையூராகி
அதன்பின் மைசூர் என்றானதை சில ஆண்டுகட்குமுன் விளக்கியிருக்க‌
எதிர்க்க முடியாதவர்கள் கள்ள மென்பொருள்மூலம் எம் இடுகைகளை
அழித்தனர். இதுவும் தலையிழப்பே. அரு என்பது ரேர் என்று ஆங்கிலத்தில் திரிவது வரை செல்லலாம். அது நிற்க:

ஆசு என்பது பற்றி நிற்றல் என்பதாகும். இ விகுதி. ஒரு கோள் அல்லது ஒரு நக்கத்திரம் பற்றி இருக்கும் இடமே ராசி. அருமையான‌
தமிழ்ச்சொல்.

அறிந்து இன்புறுக.

பதிலெழுத முடியாத கோழிமுட்டைகள் அழித்துக்கொண்டுதான்
இருக்கும். பார்க்கலாம்

கோள்  இராசி
Some mischievous edits have been effected by outsiders. Pl read carefully. Pl report
if has been interfered.  What appeared is different from our original kept by us,


Corruption in a politician

Like a little white flower,
Blooming on the slopes of an
Inaccessible intractable mountain;
Like cold, clean and sweet water
Flowing straight but  
Along the curves in the stream
With music to our ears, downtown;
Untouched and unpolluted:
So should a politician be at all times.
Uncorrupted; incorruptible.



செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

இரகசியம்

இரகசியம் என்ற சொல்லைப் பற்றி அறிந்துகொள்வோம்.  இதன் இடுகை
இங்கு அழிக்கப்பட்டு இருந்தாலும், முன் இணைய தளங்களிலும் இதைப்
பற்றி உரைத்துள்ளோம்.

இரு +  அகம் + சி + அம் ‍= இரகசியம் ஆகும்

ஓன்Ru  அறியப்பட்டு மனத்துள்ளே இருந்தால் அதுவே இரகசியம் ஆகும்
இச்சொல்லில்  சி, அம் என்பன விகுதிகள்.

ஒன்றுக்கு மேற்பட்ட விகுதிகளைக் கொண்டு சொற்களைப் படைத்தல்
பெருவழக்கு ஆகும். பிற்காலத்து இவ்வழக்கு விரிவடைந்தது.

இது பற்றி எழுதப்பட்ட முன் இடுகைகள் அழிந்தன.