ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

மலைத் தென்றலை............

மலையிலிருந்து சற்றே தாழ்வான நிலப்பகுதிக்கு வீசும்  காற்று, கவிகள் பாடத்தகுந்த இனிமைத் தென்றலாக இருக்கவேண்டும். இல்லையென்றால் இந்தச்  சொல் ஏன் இப்படி அமைக்கப்பட்டது?

அசலக் கால் ‍ இதுதான் சொல்.

ஆசலம் என்றால் மலை. இது எப்படி அமைந்தது என்பதை நாம்
ஆய்ந்துள்ளோம்.

இங்கே: http://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_65.htmlhttp://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_65.html  ஆசலம்  (சொடுக்கவும் )

இது பின் அசலம், அசலை என்றெல்லாம் குறுக்கமடைந்தது.

ஆகாரம் அகரமானது:  ஆசலம் >  அசலம்.

அசலம் >  அசலை.  (அம் விகுதி இழந்து, ஐ விகுதி பெற்றது ).

காற்று என்ற சொல்லின் அடி கால். கால்+து = காற்று.

து என்பது ஒரு விகுதி.  து விகுதி வந்த சொற்கள்:  கைது  (கைக்குள் கிட்டுதல் ), விழுது,  வயது (காலத்தின் வயப்படுதல்).

கால் எனின் காற்று என்றும் பொருள்.

ஆக, மலைத் தென்றலை "அசலக் கால்" என்றது மிக்கப்
பொருத்தம் அன்றோ.


மரியாதை

மரியாதை  என்பது முன் விள க்கப்பட்ட சொல் .  அழிந்தது.

மரு +  யா  +  தை .

சுருக்கமாக:

மரு   = மருவுதல். கட்டிப் பிடித்தல்.

யா = யாத்தல்.  கட்டுதல்.

தை   விகுதி .

ரு   என்பது யாவின் முன் ரி ஆகும்.

ஒருவனைப்  பணிவின்  காரணமாகத் தழுவிக்கொள்ளுதல்.

ஒரே பாலார் தமக்குள் மருவிக்கொள்ளுதலே இங்கு குறிப்பது.   இது பின்பு
பொதுவான பணிவு குறிக்கப் பொருள் விரிந்தது.

இது முன் யாம் எழுதிய இடுகையின் சாரம் .

மருவி யாத்துக்கொள்ளுதல் மரியாதை.

மருவுதல்  உடற் செய்கையையும் யாத்தல் தம்மில் ஒருவராய் ஏற்றலையும்
குறித்தன. யாகம் : மனிதனையும் இறைவனையும் கட்டும் சமய நிகழ்வு,  கட்டுதல் -  சேர்த்தல்.

பேச்சில் மருவாதை என்பர்/


சமம் > சமன்

அம் அடிச்சொல்.

அம் > அமை.
அம் > தம்.

தம்முடன் இருப்போன், தம்முடன் அமையத்தக்கவன், ஒன்றாக‌
இருக்கக்கூடியவன்.  அதனால் அம் என்பதிலிருந்து தம் தோன்றியது.

தம்முடன் கலந்திருப்போன், தம்முடன் சமமாக இருப்பவன். ஆகவே
தம் என்பதிலிருந்து சம் > சமம் என்ற கருத்துகள் தோன்றின.

தம் > சம் > சமம்.

அமை > சமை.

அமைத்தல் > சமைத்தல்.

அமையாதன  ஒன்றாக்கிச் சமைத்தலாகாது.

சமம் > சமன்.  திறம் > திறன் போல.

இங்ஙனம், சமம், சமன் என்பன தமிழ்ச்சொற்கள். இதில் ஐயம்
உறுநர் உணராதோர்.