சனி, 4 பிப்ரவரி, 2017

புறக்கட்டு என்ற சொல்லை....................

இனி பேச்சு வழக்கிலிருக்கும் புறக்கட்டு என்ற சொல்லைக் கவனிப்போம்.
இதைப் புற+ கட்டு என்று பிரித்து,பின்புறத்துக் கட்டுமானம், அல்லது
அஃது உள்ள இடம் என்னலாம். பின்புறம் என்றும் பொருள்.

இது எழுத்தில் வந்துழிக் காண்க.

இதை புற + கண் + து என்றும் பிரிக்கலாம். இங்கு கண் என்பது இடம்
என்று பொருள்படும்.  கண்+து = கட்டு என்றும் வரும்.  கண்ணது என்றும் வருதல் உண்டு.

இது வெளியிடத்தது என்று பொருள்தரும். பேச்சிலும் இது அருகியே வருகிறது.

சொல் அமைப்பை அலசும் போ து இலக்கிய வழக்காக உள்ள இது  "சொல்
நாகரிகம் "  உடைய கோவையாகத் தோன்றவில்லை என்பதே இதில்
வியப்பாக உள்ளது.

புற வலம் the external strength. ப்ரபல

ஒருவன்,  தன் வீட்டுக்கு வெளியே,  அதாவது வெளியுல்கில் புகழுடன்
விளங்கவேண்டும். வீட்டில் யாரும் புகழ்ந்தால் என்ன? புகழாவிட்டால்
என்ன என்று இருந்துவிடலாம். வீட்டிலிருப்போர் ஒருவனை மெச்சுவதும்
நல்லதுதான். அதற்கும் பலன்கள் உண்டு. என்றாலும் வெளியுலகப் புகழே பலரும் விரும்புவது என்று சொல்லலாம்.

புறத்தே புகழ் இருப்பின், அவன் வலிமையுடன் இருக்கிறான் என்று பொருள்.  அதற்கு ஒரு சொல் அமைப்போம்.

புறம் :  இதை ப்ர என்று மாற்றுங்கள்.
வலம்: இது பலம் என்பதன் வேறன்று.  வலிமையே வலம். புகழே வலம்.  வலமே பலம் ஆகும். பலம் என்பது பல என்றும் அம் இறுதியின்றிப் பிறமொழியில் நிற்கும்.

ஆகவே,  புற வலம் என்பது ப்ரபல அல்லது ப்ரபலம் என்றாகும்.

ப்ரபல என்ற சொல்லமைப்புக்குப்  புற வலம் என்பது அடித்தளம். எனினும் அது வழக்கில் இல்லை. தமிழில் ஒழிந்த நூல்கள் பல. அவற்றிலெங்காவது இருக்கலாம். கிட்டாததைப் பேசி என்ன கிடைக்கிறது!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

பாணன், பறையன் குடி

துடியன், பாணன், பறையன், கடம்பன் என்றுஇந்நான்கல்லது குடியும் இல்லை’’— புறம்.              335 

இப்பாடல் வரிகள் புற நானூற்றில் வருவன . இங்குக்   குடி என்ற
சொல் பயன்பாடு கண்டுள்ளது. குடி என்பது குடும்பத்தையும்
குறிக்குமேனும். அது ஒன்றுக்கு மேற்பட்ட இணைந்த - ஒன்றாய் வாழ்கின்ற மக்களைக் குறிப்பதாகும். வம்மிசம் என்ற சொல் ஓரளவு இதே கருத்தை விளக்கும் சொல் ஆகும்
மிசை மிசை வருவது வருமிசம் > வம்மிசம் ஆகும். வம்மிசம்
முன் இங்கு   விளக்கப்பட்ட சொல் ஆகும்.

இச் சொல்லை அறிய  கீழே தரப்பட்டுள்ள  தொடர்பினைச் சொடுக்கவும் 
இந்த நான்கு அல்லது வேறு குடிகள் இல்லை என்று புறம்
கூறுவதால், இவர்கள் அகமணம் புரிந்து வாழ்ந்தனர் என்று
கருதவேண்டும்.
இந்த வரிகள் எழுந்த காலத்தில், ஏனையோர் இன்னும் குடிகள் ஆகிவிடவில்லை. அதாவது வண்ணானோ குயவனோ தொழிலர்களாய் இருந்தனரே அன்றி, அகமணம் புரியும் வழக்கத்தினராய் வம்மிசங்களாக ஆகிவிடவில்லை.
அது பின்னர் நிகழ்ந்திருக்கும்.
1900 ஆண்டுகட்கு முன்பு வரை கலப்பு மணங்கள் நிகழ்ந்து
வந்தன எனக் குருதி ஆய்வுகள் புலப்படுத்துவதால், இப்பாடல் பகுதியும் 1900 ஆண்டுகட்கு முற்பட்டதாகல் வேண்டுமென்பது தெளிவு

காண்க 
வம்மிசம்
.https://sivamaalaa.blogspot.sg/2016/05/blog-post.html



But it wasn't until about 100 B.C. that a holy text called the Manusmruti explicitly forbade intermarriage across castes.
The study doesn't suggest that either the ancestral North or South Indian group formed the bulk of the upper or lower castes, Witzel said.
http://www.livescience.com/38751-genetic-study-reveals-caste-system-origins.html