ஞாயிறு, 22 ஜனவரி, 2017

Names of women of ill repute

விபச்சாரி  http://sivamaalaa.blogspot.com/2017/01/how-formed.html
 என்பது ஒரு குறுக்கப்புனைவு என்பதை முன் இடுகையில்
படித்து ஆனந்தமடைந்த உங்கட்கு, வேசி என்பதென்ன என்று கேட்கத்
தோன்றும்.அதை  முன்னரே விளக்கியுள்ளேன்.  அதனை இங்குக்
காணலாம்.

https://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_10.html

அறியாமையினால் இவையும் பிறவும் தமிழென்பதை அறியாது கழறினாருமுளர். செந்தமிழ் என்று வகைப்படுத்துதல் கடினமாயிருக்கலாம்,  ஆயினும் வழக்கிலுள்ள தமிழே ஆகும்,

அகடவிகடம்

அகடவிகடம் என்பது ஓர் இணைச்சொற்றொடர். அகடமும் விகடமும்
இணைந்தே நிற்கும். இரண்டிலும் கடம் உள்ளது.

பாலத்தைக் கடப்பது,  பாலைவனத்தைக் கடப்பது என்றெல்லாம், கடத்தல் பற்றிப் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள்.  பெண்ணைக் கடத்தல்,
பிள்ளையைக் கடத்தல் என்றும், கள்ளக் கடத்தல் என்றும் சொல்வழக்குகள் உள்ளன.  கடத்தல் (கட) என்பது பல பொருட்சாயல்களை உடைய சொல்.

கட என்பதில் கடு (கடுமை) ஒளிந்துகொண்டிருக்கிறது. பழங்காலத்தில்
எதையும் கடந்துசெல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எனவேதான், கட(த்தல்) என்னும் வினை கடுமை பொருந்திய பொருட்சாயல்களிலே வளர்ந்த சொல்லாகக் காணக்கிடக்கின்றது.

கடந்தே தீரவேண்டிய ஒன்று கடமை. ஒரு கடமையைத் தட்டிக் கழிப்பதைக் குமுகம் ஏற்பதில்லை. இது கடம் என்றும் கடன் என்றும்
வழங்கும். கற்பும் ஒரு கடமை; இது கற்புக் கடம் எனவும் படும்.

இவற்றையெல்லாம் அறிந்துகொண்டு, அகடம் என்ற சொல்லை அணுகுவோம்.

அ : இது முன்னொட்டு.  அல் என்ற சொல்லின் கடைக்குறை.
கடம்: கடத்தல் உரியது.

அகடம் = கடத்தற்குரியதல்லாதது.

அகட விகடம்:  கடத்தற்குரித்தல்லாததும்  கடத்தற் குரித்தான
விழுமிய பொருளும்..  இது சொல்லமைப்புப் பொருள்.

 இங்கு விகடம் :நகைச்சுவை.  (வழக்கில் வரும் அர்த்தம் )

அகடமாகிய விகடம் எனின், பின்பற்றலாகாத விகடம் எனினுமாம்.
அகட விகடம் :  அதாவது அகடமும் விகடமும், எனின்  கடமை
அற்றதும் நையாண்டித்தன்மை வாய்ந்ததும் என்றும் பொருள்படும்.

ஒருவன் செய்தக்கதே செய்க; நகைப்புக்கிடனாயது செய்யற்க.















சனி, 21 ஜனவரி, 2017

விபசாரி how formed?

இப்போது விபசாரி  என்ற சொல்லை ஆராய்வோம்.

நமது கணினியில் ஆக்கங்கள் உள்புகவும் வெளிவரவும் உதவும்
ஒரு சிறு கருவி உள்ளது. அதை இன்புட். ஒவுட்புட் என்பர். அடிப்படை இன்புட் ( உட்புகல்)  அவுட்புட் (வெளிவரல்) இதை பயோஸ் என்றதுபோல்,BIOS.\

இந்த விபசாரி என்பது ஒரு குறுக்கப் புனைவு.

வி = விரிந்து;
ப = பரந்து;
சார் = பிறரைச் சார்ந்து
இ = இருப்பவள் அல்லது ஒரு விகுதி.

இது ஒரு குறுக்கம்.  பாகிஸ்தான் என்ற சொல்போலவே. கபோதி என்பது கண்போன திக்கற்றவன் என்பது போலவே.

இதை அறியாமல் விபஸ் என்பது பகுதி என்றும் சாரி என்பது
விகுதி என்றும்  பலவாறு துன்புறுவர் பண்டிதர்.

கள்ளத் தனம்  காகிதப் பணத்தில் மட்டும்தான் உள்ளதோ?  நீரே நம்பிக்கொண்டிரும். எமக்கு நட்டமொன்றுமில்லை