புதன், 11 ஜனவரி, 2017

நாட்குறிப்பில் உள்ள சான்று Modiji case

நான் ஒரு குழும்பில் (கம்பெனியில்) பெரியவன், என் குழும்புக்கு வருமான வரி அதிகாரிகள் வருவர் என்று எதிர்பார்க்கிறேன்; அவர்களை இங்கு அனுப்பும் அரசியல் தலைவரை அதனால் எனக்குப் பிடிக்கவில்லை; அவருக்கு ஆப்பு வைக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எனது நாட்குறிப்பில் அவருக்குப் பணம் கொடுத்ததாகவும் இன்னும் வேறுபலருக்கும் பணம் கொடுத்ததாகவும் எழுதி வைத்துவிட்டு, மறுவேலைகளைக் கவனிக்கிறேன்.

எதிர்பார்த்ததுபோல, வருமான வரி அதிகாரிகள் வந்து பலவற்றையும்
தேடும்போது அந்த நாட் குறிப்பும் அவர்கள் கையில் சிக்குகிறது. எழுதிய‌
நான் முன்னணியில் நிற்கவில்லை. நான் வெளியில் வந்து எதையும்
சொல்லாவிட்டாலும், நான் சொல்லவிழைந்ததை என் நாட்குறிப்பு
சொல்கிறது.

எனது நாட்குறிப்பு அந்த அரசியல் அதிகாரி ஊழல் புரிந்ததாகப் பொருள்படாது.

சிந்தித்துப் பாருங்கள்: என் நாட்குறிப்பில் நான் எதை வேண்டுமானாலும்
எழுதிவைத்துக்கொள்ளலாமே! நான் வாயால் பொய் அல்லது மெய் சொல்வதற்கும அதை நானே எழுதி என் அறையில் போட்டுவைப்பதற்கும் என்ன‌ வேறுபாடு? என் நாட்குறிப்பை என் நினைவுக்கு உதவியாக நான் வைத்துக்கொள்ளலாம் அல்லது பயன்படுத்தலாம்.

மற்றபடி அது எப்படிச் சான்றாகும் என்பதை சட்ட நூல்களிலோ ஒரு
வழக்கறிஞரிடமோ  கேட்டறிந்துகொள்ளலாம்.

மேலும் அறிய: :-


http://www.timesnow.tv/india/video/modiji-received-kickbacks-from-sahara-birla-when-he-was-cm-claims-rahul/53282

இதே சட்டம்தான் அமேரிக்கா  இங்கிலாந்து ஏனைக்  காமன்வெல்த் நாடுகளிலும்  பின்பற்றப்படுகிறது.

நாட்குறிப்பில் உள்ள சான்று "கேல்விச்  சான்று "  ( Hearsay Evidene ).




திங்கள், 9 ஜனவரி, 2017

ஆட்டா மாவு எழுதா எழுத்து

ஆட்டா மாவு என்பதில் "ஆட்டா" என்பதென்ன? முன்பு பல வகை
மாவுகளும் ஆட்டுக்கல்லில் ஆட்டியே செய்யப்பட்டன. ஆட்டா மாவு
தமிழரிடத்து வந்தபோது, அதற்கான வட இந்தியப்பெயரை அவர்கள்
வழங்கவில்லை. மாறாக, ஆட்டுக்கல்லில் ஆட்டாத மாவு என்ற பொருளில் அதை ஆட்டா மாவு என்றனர். இப்போது ஆட்டா என்ற‌
எதிர்மறைச்சொல் அந்த மாவுக்குப் பெயராகிவிட்டது.

முன்பு அச்செழுத்து முதன்முதலாகத் தமிழ்நாட்டில் வந்தகாலை
அதை அச்செழுத்து என்று சொல்லவில்லை. எப்படிக் குறிக்கலாம் என்று பார்த்தவர்கள் அதை "எழுதா எழுத்து" என்றனர். அதுவே ஒரு பாடலிலும்
இடம்பெற்றது,

"மாண்பார் ஞானாதிக்க வியன்பேர்
மகிபன், எழுதா எழுத்தத‌னில்
பெருகார் வத்தில் பொறித்தளித்தான் "

என்பது திருத்தணிகை விசாகப் பெருமாளையர் பாடிய பாடலின்
பகுதி.  (தேம்பாவணிக் கீர்த்தனை,  1857) (மயிலை  சீ .வே )

இங்ஙனம் பெயர் சூட்டப்படுதலுமுண்டு. 

சனி, 7 ஜனவரி, 2017

வேதவியாசன்

வேதவியாசன் என்னும் சொல்லும் வியாசம் என்னும் சொல்லும்
தமிழிலும் வந்து வழங்குகின்றன எனினும் இவை தமிழ் என்று
வகைப்படுத்த இயலாதவை என்ப.

வேதம் என்பது வித் (அறிதல்) என்ற சொல்லினின்று தோன்றிற்று என மேலை ஆராய்ச்சியாளர் கூறினும், இது வித்து (விதை) என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து அறிவே வித்து என்ற அடிப்படையில் எழுந்தது
ஆகும். அன்றியும் வேதம் என்பது, செய்யப்பட்டவை என்ற பொருளில்
வேய்தல் என்பதினின்று தோன்றியது எனினுமாம். "வேத"ச் சொல்லை
ஆய்ந்தோர் வேய்தல் என்ற சொல்லை அறியாதவர் ஆதலின், அதினின்று அது தோன்றுமென்பதை அறியார். வேய்தல் > வேய்தம் > வேதம். யகரம்
கெட்டது.  வாய்த்தி என்பது வாத்தி > வாத்தியார் என்றானது போல. (வாய்ப்பாடம் சொல்பவன்).

வியன், வியனுலகு என்பன தமிழ் வழக்குகள். வியன் என்பது விரிவு.
விர் > விய். விர் > விரி > விரிவு.  விய் > விய > வியாசம்,  அதாவது
விரிவாய்ச் சொல்லப்படுவது, எழுதப்படுவது.
எனவே வேதவியாசன் என்பது தமிழன்று என்று  முடிப்பினும் மூலச்
சொற்கள் தமிழென்பது காணலாம்.