புதன், 7 டிசம்பர், 2016

நேத்திரம் - கண்

நேத்திரம் என்ற சொல் கண்னைக் குறிப்பது.

ஓர் ஒலி புறப்பட்ட இடத்திலிருந்து செவிகளை வந்து எட்டி விடுகிறது.
பின்னிருந்தும் பக்கத்திலிருந்தும் முன்னிருந்தும் வரலாம்,

ஒளி என்பது நேராக வந்து கண்ணை அடைகின்றது,  அது கோணலாக‌
வர முடியுமானால் பின்னிருப்பதை நாம் காண இயலுமே.  அப்படி
இயல்வதில்லை.

அதனால் கண்கள் நேராகவே காணும் திறம் உடையவை.

இத்தகைய ஒரு வரம்பு செவி மூக்கு இவற்றுக்கு ஏற்படவில்லை.

நேர்த் திறம் உடையது நேத்திரம் ஆயிற்று,

இங்கு சில சொற்களில்போல் ரகர ஒற்று மறைந்தது.



சோ மறைவு துயர்

எழுத்தாளர் பத்திரிகைப் பண்பர் நடிகர்
வழக்கறிஞர் வாய்மொழி வல்லார் == அழுத்தமுற‌
எண்ணிய  பின்னிடா ஏற்ற கருத்தாண்மை
மன்னிய சோமறைவு மாதுயர் ‍=== விண்ணடைந்த‌
இந்நாள் அவரான்மா எய்துக நல்லமைதி
முன்நாள்  இனிவருமோ  முன் . 

will edit


செவ்வாய், 6 டிசம்பர், 2016

சேமித்தல் நேமித்தல்

சேர்த்தல் என்ற சொல்லினின்று தோன்றியதே சேமித்தல் என்பது.
சேர்மித்தல் என்பதில் ரகர ஒற்று மறைந்தது,  எனவே சேமித்தல் ஆயிற்று.  சேமி >  சேமிப்பு,

இதுபோன்றே நேர்மித்தல் என்பதும் நேமித்தல் ஆனாது.
நேர்மித்தலாவது ஒன்றை முறைப்படி  அமைத்தல். நியமித்தல் என்பது ஒன்றை நிற்கச்செய்தல்.  நில் >  நி  >  நி அ > நிய  (அங்கு நிலைபெறச் செய்தல்.) வேறு அடியினின்று தோன்றியது.

இதை விளக்கியிருந்த இடுகைகள் இங்கு இலவாயின, இவை 2007 ஆண்டில் வெளியிட்டவை என்று நினைக்கிறேன்,