ஞாயிறு, 4 டிசம்பர், 2016

பங்களோ

பங்களா என்ற ஆங்கிலச் சொல், வெள்ளையர்கள் இந்தியா வந்தபின்
அமைத்துக்கொண்ட அல்லது உருவான சொல் என்பர். இது ஆங்கில‌
சொல் நூலாரின் முடிபு.

இதற்கு மூலமாக அமைந்தது பங்களாவு என்ற மலையாளச் சொல்.
காழ்ச்சை பங்களாவு என்ற மலையாளச் சொல்லமைப்பு,  கண்காட்சி
சாலையைக் குறிக்கும். காழ்ச்சா ‍=  காட்சி.

பல பங்குகளாக ஆனால் இணைத்து உருவாக்கப்பட்டு,  ஒரு விரிந்த‌
பரப்பை அளாவி நிற்பதால்  பங்கு+ அளாவு  ஆயிற்று.  இது
வங்காளத்தில் இருந்த மலையாளிகள் வாயிலாகப் பரவி இருக்கலாம் என்று தெரிகிறது.  பல அறைகள் அல்லது பங்குகள்  இணைந்து அளாவி நிற்பது.  பங்களாவில் பல அறைகள் இருத்தலும்  அது பெரிதாக (அளாவி ) நிற்றலுமே
மக்கள் கருத்தைக் கவர்கிறது.

பங்களோ என்பதில் பங்காள் முதலாயின் ஓ என்பது பொருள்பெற்றதாய் இல்லை.

இசு > இச்சை

மனம் இழுக்கப்படுவதே இச்சை. உண்மையில் மனம் என ஒன்று உள்ளதா என்பதைப் பலர் ஆய்ந்து இல்லை என்பர். இல்லைதான்,
ஆயின் அப்படிக் கொள்வது மொழிமரபும் மக்கள் பண்பாடும் ஆகும்.
இருதயம்  (ஈர்+து+ அ+(ய) + அம் )  என்பது அரத்தம் அல்லது குருதியை ஈர்க்கும் மற்றும் வெளிப்படுத்தும் ஓர் உறுப்பு.  ஈர் = இங்கு
இழுத்துக்கொள்வது;  அ = அங்கு செலுத்துவது.  இப்படி இச்சொல்லை அமைத்துள்ளனர் இவ் அறிவாளிகள்.

இழு என்பது இசு என்று திரியும்.  இசு + வு = இசிவு.  உகரம் கெட்டு ஓர் இகரம் தோன்றிற்று. வகர ஒற்று உடம்படு மெய். இசிவு ‍ இழுத்தல்.

பசு > பச்சை.  சகர இரட்டிப்பு,
இசு > இச்சை.  இதுவும் அங்ஙனம் கட்டமைந்த சொல்.  இறுதி ஐ ஒரு விகுதி.    கொலை என்பதில் கூட ஐ இருக்கிறது. கொல்+ஐ
கொலை.

இது முன் எழுதப்பட்டு அழிபட்டதால், உங்களிடம் இருந்தால்
அனுப்பிவைக்கவும். நன்றி

ஆசை மனம் அசைவு

ஆசை என்ற சொல்லை முன் விளக்கி யிருப்பினும், அது  திருடர்களால் அழிக்கப்பட்டது.   பின் எழுதியது இன்னும் உள்ளது.

மனம் ஒன்றை நோக்கி அசைவதே  ஆசையாகும்.   அசை > ஆசை. முதனிலை திரிந்த தொழிற்பெயர். முதல் எழுத்து நீண்ட சொல்.
சுடு > சூடு என்பதுபோல.

மன அசைவு  பொன்னைப் பற்றியோ பொருளைப் பற்றியோ  இருக்கலாம். அல்லது பூமி பற்றியதாக இருக்கலாம். மனம் "ஆடாமல் அசையாமல் " இருப்பதானால், ஆசை இல்லை என்று பொருள்.

ஆசை ‍ அகரச் சுட்டடிச் சொல்.