வழிப்பறிக் கீழ்மகன் உலவுகிறான் மடியில் விலைப்பொருள் சுமைவிலக்கி உழைப்பினில் கைவரு பொன்னணிகள் ஒன்றையும் உடன்கொடு நடைதவிர்ப்பாய் விழிப்புடன் ஜொகுர்நகர் கடந்துசெல்வாய் இழப்புகள் இலாத பிழைப்புறுவாய் அழைப்புடன் நிற்பவன் எவனவனோ அவன்நாம் கலங்கிடும் கள்வனல்லோ தொழில்தனைச் செய்பெறும் ஊதியத்தில் தோல்வியில் லாதொரு தூய்மையிலே எழில்பெற இப்புவி வாழ்கவெனும் ஏற்புறு கொள்கையும் வீழ்படுமோ விழிதரும் ஒளியினி ஒழிவுறுமோ வீண்மகார் பல்கிடும் உலகிதிலே கழிநிலைச் செய்கையர் பொழுதிதுவோ கண்கெடு நடபடி விழுதிடுமோ
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சனி, 26 நவம்பர், 2016
வழிப்பறிக் கீழ்மகன் உலவுகிறான்
வெள்ளி, 25 நவம்பர், 2016
நடு ( நடுதல் ) நட ( நடத்தல்)
நடு ( நடுதல் ) நட ( நடத்தல்).
மரம் நடுதல், செடி நடுதல், நாற்று நடுதல். இச் சொல்வழக்குகளிலெல்லாம் நடுதல் என்பது மண்ணில் ஊன்றுதல் என்று
பொருள் தருகிறது. நட்டபின் செடி முதலியவை அங்கிருந்து அசைவதில்லை. அப்படியே வளர்கின்றன அல்லது வளராது அழிகின்றன.
மனிதன் மற்றும் விலங்குகள் காலைத் தரையில் ஊன்றி நிற்பதும் நடுதல்
போன்றதே. வேறுபாடு யாதென்றால், காலை மண்ணில் புதைப்பதில்லை. நட்டு இருக்கும் இடத்திலிருந்து மனிதன், விலங்குகள் அசைகின்றன.
இப்படி அசைகின்ற நிலைக்கு நடு என்ற சொல் போதவில்லை, அல்லது
அசைவுக் கருத்தைத் தெளிவாகக் காட்டவில்லை.
ஆகவே நட்ட ( நின்ற) இடத்திலிருந்து அப்பால் அசைவைக் குறிக்க
நட என்ற சொல் பிறந்தது. இது நடு_+ அ, காலை நடு, நட்டு அங்கு
போ. ஆகவே நட ஆயிற்று.
நடு என்ற சொல்லினின்று நட என்பதைப் பிறப்பிக்க, அ என்ற சுட்டு
சென்று இணைந்து பயன்பட்டது காணலாம். இயங்கு என்பதில் இ (இங்கு) + அ (அங்கு) + கு (வினையாக விகுதி).= இயங்கு ,இதுபோலவே நடு + அ (அங்கு) > நட ஆனது.
எனினும் நடிப்பவன் ஓரிடத்திலிருந்து நடிக்கும்போது இன்னொரு திசை
நோக்கிச் செல்லாமல், குறிப்பிட்ட இடத்தினுள்ளேயே அவன் வேலையைச் செய்கிறான். அவனைப் பார்ப்பவர்கள் (இரசிப்போர்) எங்கு
இருந்து அவனைக் காண்கிறார்களோ, அவன் அங்கேயே தன் அசைவுகளைக் காட்டவேண்டுமே. தெருவில் நடித்துக்கொண்டிருந்தால்
வயலுக்கு ஓடிவிட முடியுமா என்ன? அவன் நிலை ஒரு கட்டுறுத்திய
நிலை. எனவே, நடு ( காலூன்றிய நிலையில் ) + இ (இங்கேயே) = நடி (செய்வது செய்) என்று சொல் அமைந்தது காண்க. இ என்பது ஒரு
சுட்டுச் சொல் தான்.(பொருள் ஏற்படும்போது ஓர் எழுத்தும் சொல்லாகிவிடும்.)
இதன்மூலம் நடி என்பது நடு + இ என்று இணைப்பில் பிறந்த சொல் என்பதை நன்குணரலாம்.
சந்திப்போம் .

வியாழன், 24 நவம்பர், 2016
வாண்டாய் இருக்கையில்
வாண்டாய் இருக்கையில் வண்டிச் செலவாசை
தூண்டா நிலையிலும் துள்ளிக் குதித்தோடி
வேண்டாத வீணனுடன் வேறுபடா தோடியே
மாண்டாட் கிரங்கு மனம் .
(இது மகிழுந்தில் பயணிக்கும் ஆசையினால் முன்பின் அறியாதவன்
அழைக்க அவனுடன் சென்று ;அவனால் கற்பழித்துக் கொல்லப்பட்ட ஒரு சிறுமியின் துன்பக்கதை. உலகம் பொல்லாதது. இப்படி எத்தனை நிகழ்வுகளோ)
வேண்டாத வீணனுடன் வேறுபடா தோடியே:
ஒவ்வொரு சீரிலும் நெடிலில் தொடங்கும்படி தொடுத்ததனால் இது நெடில் வண்ணம். தொல்காப்பியர் காலத்தில் வண்ணங்கள் இருபது. "வண்ணம் தானே நாலைந்தென்ப " என்பார் அவர். பிற்காலத்தில் இவை பெருகின.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)