செருகுதல் என்றால் ஒன்றில் ஒன்றை இடைநுழைத்தல் என்று பொருள்படும். தோல்வார்களை ஒன்றில் ஒன்று பிணைத்துச் சேர்த்துத்
தைத்தே செருப்பு உண்டாக்கப்படுகிறது. செரு என்ற அடிச்சொல்லில்லிருந்து செருப்பு என்ற சொல் தோன்றிற்று.
செரு > செருகு.
செரு > செருகுதல்: இடைநுழைத்தல்..\
செரு > செருப்பு.
செருப்பு > செருப்பல் : இச்சொல் வழக்கில் இல்லை.
செ(ரு)ப்பல் > செப்பல்.
இதில் ருகரம் இடைக்குறைந்தது.
செரு> செருமான்> செம்மான்.
இதுலும் இடை ருகரம் இடைக்குறைந்தது.
வரு என்ற வினைப்பகுதியும் சொல்லில் தன் ருகரம் இழக்கும்
வரு> வ > வந்தான்.
பெருமான் என்ற சொல்லும் பெம்மான் என்று இடைக்குறையும்.
கரு> (கருமாளன் ) > கம்மாளன்.
இடைவடிவங்கள் வழக்கிறத்தல் மொழியில் இயல்பு.
சில சொற்களில் ருகரம் போய் அதற்குப் பதில் ஒரு ரகர ஒற்றுத் தோன்றும்:
கரு > கருப்பம் >கர்ப்பம் .
கரு நாக்கு > கர் நாக்கு. (பேச்சில் ).
கருப்பூரம் > கர்ப்பூரம் > கற்பூரம் (கல்+ பூரம் , மற்றொரு முடிபு )
கருமம் > கர்மம் .
கருவம் > கர்வம் .( not to be pronounced as garvam no place for G)
கருத்தா > கர்த்தா . from /connected to கருத்து.
தருதல் : தரு > தருமம் > தர்மம் (கொடை )