திங்கள், 5 செப்டம்பர், 2016

அவனி அழகிய தோட்டம்

அவனி என்ற சொல்லைப் பார்ப்போம்.

அவம் =  கெடுதல்.  அவிந்து கெட்டது அவம்.
நி =  நிற்பது.  நில் என்பதன் கடைக்குறை.  நி =னி.

ஆக,மனிதன் இறைவனை அடையக் கெடுதலாக முன் நிற்பது இவ் அவனியாகும்.

இன்னொரு பொருள்:

 அம் > அ.   அழகு.   அ: முதலெழுத்துமாகும்.

வனம் =  அழகு.  வனப்பு = அழகு.

 வனம்  > வனி.   அழகு. பெருந்தோட்டம் அல்லது காடு.    இவற்றை உடையது உலகு.

அவனி =  அழகிய தோட்டம் அல்லது வனம்.

ஆக, இருபொருட் சொல்.

சிக்காவொரு கொடுநோயாம்......

உச்சத்து நாகரிகம்
எத்திக்கும் புகழ்பரப்பி,
மெச்சப்பல அருஞ்செயல்கள்
மெத்தத் திறமையொடு
நிகழ்த்திய சிங்கையிலும்
சிக்கா நோய் நுண்மம்
அகத்துப் புகுந்ததுவே
அஃதொரு பெருவியப்பே!
பரப்பும் கொசுக்களையே
இறப்பில் இடுமுயற்சி
இறப்பக் கடினமேனும்
சிறப்ப அமைதல்வேண்டும்.
சிக்காவொரு கொடுநோயாம்
எக்காலும் அதனுறவே
ஓக்காதே ஒழிந்திடுக.
கொசுக்களின் இனத்தினையே
நசுக்கியே நலம்பெறுக!

உபாயம்.

இனி உபாயம் என்ற சொல்லின் அமைப்பை அறிவோம்.

இது ஒரு சுட்டடிச்சொல்.

உவ:  முன்னிற்பது. இங்கும் அங்கும் தவிர்த்த இடம்.
அ.இ.உ என்பன மூன்றும் சுட்டுகள்.  அங்கு, இங்கு,  "உங்கு"  என்பன அதிலிருந்து
பிறப்பிக்கக் கூடிய சொற்கள்.

உவ:  உவன்:   முன்னிருப்பவன்

உ :   உன்.   உம்

உவ:  >   உவமை.

ஒரு செயலுக்கு முன் நிற்பது  செய்யும் உபாயம்.   சொற்பொருள்:  முன் ஆவது.

உவ + ஆய(து)  + அம் =  உவாயம்.

பின் வகரம் பகரமாய்த் திரிந்தது.


உவாயம் >   உபாயம்.


ஒன்றைச் செய்யுமும் அதை செய்யும் வழி அறியும்  செயல்.   ஆமாறு.  ஆம்புடை.