செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

Manu and his edicts மனுவின் திறமை

மக்கள் குலங்களாக வாழத் தலைப்பட்ட பிறகு பெரும்பாலும் தம் குலத்துக்குள்ளேயே  ஒரு பெண்ணைப் பார்த்துப் பையனுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். ஏன் வேறு குலத்தில் பெண் எடுக்கவில்லை?

ஒரு குயவனார் வீட்டுப் பெண்ணை ஒரு வண்ணார் வீட்டினர் எடுக்கலாம்.
சங்க காலத்தில் என்று வைத்துக்கொள்வோம்.  வண்ணார் வீட்டில் வாழ்க்கைப் பட்டபின், குயவப் பெண் ஆற்றில் துணி தோய்க்கப் போகவேண்டும்; வெயிலில் நிற்கவேண்டும்; துணி தோய்க்கத் தெரியவும் வேண்டும்,

குயவ அப்பன் சொல்கிறார்: என் பெண் வீட்டுக்குள்ளேயே இருந்து பழக்கம்.
ஆற்றுப் பக்கம் ஏரிப்பக்கமெல்லாம் போய் இடர்ப்பட அவளுக்கு முடியாது. ஏரிப்பக்கம் நிற்கும் எருமை முட்டவந்தால்  அவளுக்குக் காலும் ஓடாது;கையும் ஓடாது. பேசாமல் இன்னொரு குயவப் பையனையே பார்த்துவிடலாம் என்கிறார்.

இதுபோன்று பல காரணங்கள் இருந்து, முடிவுகள் மேற்கொள்ளப்   பட்டிருக்கலாம். இத்தகைய காரணங்கள் இப்போது இல்லாத வாழ்க்கையை மேற்கொண்டுவிட்ட இக்காலத்திலும்  பழக்க வழக்கங்கள் இன்னும் மாறவில்லை.

மனு என்பவன் இது இறுகிய விதிமுறையோல் ஆகிவிட்ட
காலத்தில்வந்து பார்த்து, இதை அவன் செய்த விதிபோல்
எழுதிவைத்தான்,இவை போன்ற நிலைகளை அவன்
உருவாக்க அவனுக்குத் திறம்இருந்திருக்க வாய்ப்பில்லை.
Some paragraphs could not be justified whilst posting.


மனுவின் திறமை

சரீரம்

உடலின் தன்மையை மிக்க உன்னிப்பாகக் கவனித்தவர்கள் நம் முன்னோர்.
அது தேய்ந்து அழிதலை உடையது என்பதறிந்து அதைத் தேகம் என்றனர்.
அது உடைபோலும் உடுத்தப்பட்டு இருப்பது, அதாவது என்பு தோல் போர்த்தப் பட்டது என்பது தோன்ற உடல், உடம்பு என்ற சொற்கள் தோன்றின. அதை நாம் மேலாகத்தான் காண்கிறோம்; உள்ளிருப்பது வெளியில் தோன்றுவதில்லை; அவற்றின்பால் நம் கட்டுப்பாடு குறைவு என்பது விளங்க மேனி என்றனர். மேல் > மேனி. லகர ம்    னகரமாகி இகர‌
விகுதி பெற்றது.

இப்போது சரீரம் என்ற சொல்லைப் பார்ப்போம். இது மருத்துவம், வைத்தியம் செய்தோரால் புனையப்பட்ட சொல் என்பதை ஆய்ந்தால் தெளிவாகிவிடும்.

நம் உடலில் சரிபாதி அல்லது அதற்கும் சற்று மேலாகவே நீர் இருக்கிறது,
இதை முன்னோர் அறிந்திருந்தனர், அதனால் அதைச் சரீரம் என்றனர்.

சரி + ஈரம் ‍= சரீரம் ஆயிற்று. ஒரு இகரம் கெட்டது. அதாவது:
சரி+ ஈரம் > சர் + ஈரம் > சரீரம். என்று காண்க.

ஈரம் என்பது ஈர்த்து வைத்துக்கொள்வது. அருந்திய தண்ணீர் முதலியவற்றோடு இருக்கும் நீரினை ஈர்த்து வைத்துக்கொள்வது.


நம் முன்னோரின் அறிவு இக்கால உடலியலுடன் ஒத்துப்போகிறதன்றோ?

KASI; காசி ‍ இறையுணர்வினரைக் காக்கும்....

குசிநகர் அல்லது அரம்பா என்னுமிடத்தில் இறந்தவன் நேரே நரகம் செல்வான்; இறப்பதாயின் காசியிலே இறக்கவேண்டும்; அப்போதுதான் அவனுக்கு மேலுலகம் கிட்டுமென்பது ஒரு நம்பிக்கை. இஃது உண்மை ஆயினும் அன்றாயினும் காசி இறையுணர்வின் மக்களைக் காக்கும் நகரென்பது இன்றும் பல்லாயிரவரின் உறுதியான கொள்கையாகும். பெற்றோரை அவர்கள் வாழுங்காலத்து ஒழுங்காகப் பார்க்காத பிள்ளைகள்கூட, அவர்கள் இறந்தபின் தம் பாவத்தைக் கழித்துக்கொள்ளக் காசியிற் சென்று கைங்கரியங்கள் செய்து அவர்களையும் தெய்வத்தினையும் வணங்கினால் நன்மை விளையும் என்றே நினைக்கிறார்கள்.

காக்கும் இந்நகரின் பெயர் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தது
ஆகும். கா என்பது காத்தல்; சி என்பது விகுதி.

இதற்கு வருணா அசி என்ற ஆறுகளின் இணைப்புக்  காரணமாக வாரணாசி என்றும் பெயர்.

காசி என்ற சொல், காய்தல் ‍ (ஒளிசெய்தல்) என்ற சொல்லிலிருந்து தோன்றியிருத்தல் கூடுமென்பதும் கவனத்தில் கொள்க.     எனின் காய்> காயி > காசி என்றாகும். யகர சகரப் பரிமாற்றம். இதுவும் தமிழ் மூலங்களையுடைய சொல்லே ஆகும். நேயம்> நேசம், வாயில்> வாசல் என்பது போன்ற திரிபு இதுவாகும்.

இந்த வட்டாரத்தில் பல பழந்திராவிட மொழிகள் பேசப்பட்டன. அவை இப்போது மறைந்தன. இசினே என்ற தொல்காப்பியச் சொல்லுக்கு இங்கு
வழங்கிய பழந்திராவிட எழுத்தில்லா மொழியிலிருந்து பொருள் விளக்கம்
கிடைப்பதாக ஆய்வாளர் சிலர் தெரிவித்திருந்தனர். இப் பழைய மொழிச் சொற்கள் பாகதங்களில் கலந்து மறைந்திருக்கலாம் என்று தெரிகிறது.