continue from https://sivamaalaa.blogspot.sg/2016/08/how-formed.html
கரு என்பதிலிருந்து கிரு என்று மாறிய சொல். கிருஷ்ண என்று மாறி
கண்ணபிரானுக்குப் பெயரானபின், கரு என்ற அடிச் சொல் பொருள் மறக்கப்பட்டு, கிருஷ்ணன் அழகன் என்றாகி, கிரு என்ற அடியும் அழகு என்ற பொருளைப் பெற்றது. பிறகு அழகு என்பது வெண்மை என்ற கருத்து மேலோங்கி வெண்மை யிலிருந்து ஒளி ஆகி, ஒளி என்பது ஒளிக்கதிர் என்ற பொருளை எட்டிப்பிடித்தது. ஆகவே உலக நாடுகளில் கிரண் என்பது அழகு, ஒளிக்கதிர் என்பது பொருளாகக் கொள்ளப்பட்டது.
கரு > கிரு > கிருஷ்ண
கிரு > கிரண் > கிரணா.
கிரு+ அண் = கிரண். அண் என்பது அணி என்பதன் அடிச்சொல். அழகு
என்பது பொருள். கிரு தன் பொருளை இழந்தது. புதுப்பொருள் மேவிற்று.