தமிழில் காய்தல் என்பது சூடாதல், ஒளிவிடுதல் என்று பொருள்படும் ;
வெயில் காய்கிறது, நிலா காய்கிறது என்ற வழக்குகளையும் நோக்குதல் வேண்டும்.
இங்ஙனம் ஒளிசெய்யும் கோள்களும் நக்கத்திரங்களும் காணப்படும் இடம் காயம் எனப்பட்டது. காய்+ அம் = காயம். இதில் அம் என்பது விகுதியாகும். இக்காயச் சொல் தொல்காப்பியத்திலும் காணப்படும் .
வெங்காயமும் காயம் எனப்படுவதே. இதற்குக் காரணம், இதன் தோல் காய்ந்து காய்ந்து எடுபட்டுக்கொண்டிருக்கும். உரிக்க உரிக்க அதில் தோல்தான் என்பார்கள். தொடக்கத்தில் காயம் என்றே சொல்லப்பட்ட வெங்காயம், பின்னர் வேறுபடுத்தும் பொருட்டு "வெம்+காயம்" வெங்காயம் எனப்பட்டது. வெம் (வெம்மை) அதன் நெடியையும் கண்களில் நீர் வரவைக்கும் தன்மையை யும் குறிக்க எழுந்த அடைச்சொல் ஆகிறது.
பெருங்காயம் என்பது ஒரு மரப் பிசின். அது காய்ந்து கட்டியாகுவது,
அதுவும் காயம் எனப்பட்டாலும், வேறு படுத்தப் பெருங்காயம் எனப்பட்டது. இது ஒரு மருந்துப்பொருள் ஆதலின், பெரும் என்ற அடைமொழி பெற்று விளங்குகிறது, இது மலையாளத்தில் காயம் என்றே இன்னும் சொல்லப்படுகிறது.
காயம் என்பது புண்ணையும் குறிக்கும். புண் , மேல் (அரத்தம் ) காயும் தன்மை உடையது ஆதலின் காயம் எனப்பட்டது.
காயங்கள் பலவாதலின், வான் என்னும் காயம் ஆகாயம் எனப்பட்டது.
ஆகாயம் என்றால் காயம் ஆவது. வினைத்தொகை. ஆ = ஆதல்.
இது பிறமொழிகளிலும் புகுந்துள்ளது.
நேயம் என்பது நேசம் ஆனதுபோல் ஆகாயமும் ஆகாசமாகும். ய - ச
காச நோய் இருப்பவர்களுக்கும் இருமலுடன் காய்ச்சலும் வரும். உடம்பும்
காய்ந்து ஒல்லி ஆகிவிடுவர். இவற்றால் அது காய நோய் > காச நோய் ஆயிற்று. யகர சகரப் பரிமாற்றம்.
இச்சொற்கள் தமிழே ஆகும் .
தொடர்புடைய அடுத்த சொல் காயத்திரி .
continue at: http://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_41.html