ஒரு வீட்டை வைத்துக்கொண்டு அதற்குப் பல தொகைகளையும் வரியென்றும் கட்டணங்களென்றும் கட்டிக்கொண்டு இருப்பது தொல்லை, என்ன செய்யலாம். வீட்டை விற்றுவிட்டால் தொல்லைகள் நீங்கிவிடும், என்று ஒருவன் எண்ணினான். விற்றுப் பணமாக்கினான. அதன்பிறகு அவனுடைய முட்டாள் மனைவி தன் தம்பிகள் தங்கைகள் எல்லோருக்கும் மறைமுக உதவிகள் செய்யலானாள். கொஞ்சம் கொஞ்சமாக இப்படிப் பெற்றுக்கொண்டிருப்பதை விட ஒரு மொத்தமாக எடுக்கலாம் என்று நினைத்த அவள் தம்பி தங்கைகள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து அவள் நகைகளை முதலில் கொள்ளை இட்டனர்.
கொள்ளை அடிப்பவர்கள் அதனைக் கண்டுபிடிக்க இயலாதவாறு செய்து வெற்றிபெற்றனர். நகை போன துயரத்தில் இருந்த அவளிடம் மெதுவாகப் பேசி ஐயப்ப பூசையில் கொண்டுபோய்ச் சேர்த்தனர், அங்கு அவள் மன அமைதி ஒருவாறு அடைந்தாள். கொஞ்சம் தேறியவுடன் இழந்த பணத்தை மீண்டும் பெற ஒரு வழி கூறி ஓர் இலட்சத்தை வாங்கி, வட்டி வியாபாரம் நடத்துவதாகக் கூறினார்.
சிலமாதங்கள் கழித்து, இடையில் இருந்த தரகன் பணத்துடன் ஓடிவிட்டான் என்று நாடகமாடிவிட்டனர். இப்போது அவனுக்கும் அவளுக்கும் கையில் காசில்லை.
இப்போது விடயத்துக்கு வருவோம். வீட்டை விற்றுவிட்டால் தொல்லைகள் முற்றுப்பெறும் என்று எண்ணியது நிறைவேறியதா?
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்றார் இளங்கோவடிகள். தொல்லைகளிலிருந்து தப்பிவிட முடியாது. இருந்தாலும் முயற்சி
திருவினை ஆக்கும் என்றார் வள்ளுவர். முயன்று கொண்டிருங்கள்.
சோவியத்தை உடைத்துவிட்டால் சடாம் உசேன் கிளம்புகிறான்; சடாமினை ஒழித்துவிட்டால் ஐ எஸ் கிளம்புகிறது, ஏ மனிதனே
உன் ஊழ்வினை உன்னை விட்டுவிடாது,
ஆனால் மெய்வருத்தக் கூலி ஒன்றிருக்கிறது, அது கிடைத்தாலே போதும் என்கிறாயா?