சனி, 4 ஜூன், 2016

முகம்மதலி மறைவு Demise Champion Ali

உலகே வியந்ததோர் ஒப்புமைக்கு நின்றோன்
பிறகே அறிந்தோம் பிழையாமோ வென்றோன்
கலையாகக் குத்து விளையாட்டைக் கொண்டோன்
நிலையாக மும்முறை வல்லோனாய்ப் பட்டம்
குலையாமல் ஞாலம் குலவிடவே கண்டோன்
தமதினம் உய்யத் தகுவழியில் வெற்றிக்கு
அமையாது முன்னின்ற ஆண்மையோ காண்பரிதே
தன்மதம் மாறியே  முன்னின் றுணர்த்தியவை
என்னென்று கேட்க இயம்பின பொன்மொழிகள்
இவ்வுலகோர் இன்னும் இருப்பார் மறவாரே!
மேடை அதிர்ந்தபின் நாடும்மற்  றேடுகளும்
கூட  அதிர்ந்தன   கூற்றுவனால்  நீத்தார்
அலிப்பெயர் ஆண்மைக்  களிப்போம்  இரங்கல்
ஒலிக்கத் தொழுகைக் குரல்.

அரும்பொருள் 

ஒப்புமைக்கு  -  வெள்ளையரோடு கறுப்பர் ஒத்தவர் என்பதற்கு,
பிறகே அறிந்தோம் -   அதாவது யாம் இப்போது  அறிந்தவை.
அமையாது  -   அடங்கிவிடாமல் 
காண்பரிதே -   காண அரிய குணங்கள். 
இன்னும் இருப்போர்  இவ்வுலகோர் -    இன்னும் இருக்கும் நம் போலும் மக்கள்.    (இருப்போர் -  இருக்கும்;(  முற்றெச்சம் .)
மேடை -  குத்துச் சண்டை மேடை. 
கூற்றுவனால்  நீத்தார் -  மரணம் அடைந்தார்,

எசமான் தமிழா?

இய என்ற தமிழ் அடிச் சொல்லிலிருந்து சொற்கள் பல தோன்றியுள்ளன. அவற்றுட் சில:

இய  >   இயங்கு.   ( கு வினையாக்க விகுதி )

இய >   இயவுள்    (  =  கடவுள் )
இய >    இயங்கி   (motor,   modern   word
இய  >  இயக்ககம்   ( directorate    modern word)
இய >  இயக்கம்
இய >   இயக்குநர்   ( இயக்குனர் என்றும் எழுதப்படுகிறது  )
இய > இயல் > இயற்று.>  இயற்றுதல் .
இய > இயல்பு

இப்படிப் பல          (above .....)

இப்போது  எசமான்  என்ற சொல்:



இய  >   இயமகன்

இய >    இயமான்

மகன் என்பது  மான் என்று திரியும்.

எ-டு :  பெருமகன்  >  பெருமான்

இயமான்  >  இயமானன் .  (அன் விகுதி )

யகரம் சகரம்  ஆகும்.

இ என்பது  எ என்றும் திரியும்.

இயமான் >   எசமான்

இயமானன்  >  எசமானன்

இயமான்  என்பது வழக்கொழிந்தது /\

மகன் என்பதிலிருந்து திரிந்த  மான் இறுதி சொல்லில் தோன்றியபின்  அன் விகுதி  தேவைப் படாது.  எனினும்  வந்துள்ளது.   ஆண்பால்  குறிக்கிறது.

எசமான் -   எசமானி/  (பெண்பால் )

எசமான்  >  எஜமான் !!

எனவே  மான் என்பது வெறும்  இடை நிலையாகப் பயன்பட்டுப்  பொருளிழந்தது .

செய்கின்றான்  என்பதில் இன்று என்பது  கின்று  ஆகி  தன்  பொருள் கெட்டதுபோல.   இன்று என்பதே நிகழ்காலம் ,

பேச்சு வழக்கில்  செய்றான் என்று வந்து  கி  ஒழிந்தது.

சமஸ்கிருத மொழியில்  இஷ்  என்ற அடிச்சொல் உள்ளது.  இது ஈஷ்வர்  என்பதிலிருந்து  பெறப்பட்டது.   எஜமான் என்ற வடிவத்தைக் காண முடியவில்லை பழைய அகரவரிசைகளில் தேடிப்பாருங்கள் .



will edit later.  edit not available..




வெள்ளி, 3 ஜூன், 2016

சொல் அமைப்புத் தந்திரம்

பண்டைக்  காலத்தில் சொல் அமைத்தவர்கள்  பல வழிகளைக் கையாண்டார்கள்.   அவற்றுள் ஒன்று:

முதலில் அமைத்தற்குரிய சொல்லின்  கருத்தை ஒரு வாக்கியமாக எழுதிக்கொள்ளவேண்டும்.

இதற்கு "முகாந்திரம் "    என்பதையே  எடுத்துக்கொள்வோம்.

வாக்கியம் :    முகம் ஆகும்  திறம்.

1.   ஆகும்  என்பது  ஆம் என்று குறையும்.

      எனவே முகம்  ஆம்  திறம்./

2.  பின்  முகம்  என்பது  முக  என்று  மகர ஒற்றை இழக்கும்,

     எனவே  முக  ஆம்  திறம் . ஆகிறது.

3.  இப்போது சொல்  துண்டுகள் புணர்த்தப் படுகின்றன .
 
      எவனே  முகாந்திறம்  ஆகிறது.

4. இனி  திறம் என்பதை வெறும் பின்னொட்டு  ஆக்கவேண்டும். இதற்கு  றகரத்தை  ரகரம்  ஆக்குக.

    எனவே  இப்போது  "முகாந்திரம் "  ஆகிறது.

திறம் என்பது திரம்  ஆக்கப்பட்டு, வெறும் பின்னொட்டு ஆகிவிட்டால்,  சொல்லின் அடிப்படைகளை நன்கு மறைத்துவிடலாம்.  ஒவ்வொரு சொல்லுக்கும்  அதன் வரலாற்றை  அதைப் பயன்படுத்துவோன்  தெரிந்திருக்க வேண்டியதில்லை . சொற்களின்    வரலாறுகளை நினைவுபடுத்திக்கொண்டிருந்தால்  ஒருவேளை  பயன்பாட்டில்  மனத் தடையுணர்ச்சி  ஏற்படலாம்.

எ-டு :   வேதம் என்ற சொல்.வித்  ( விடய அறிவு )    என்பதிலிருந்து வந்தது என்று  கொண்டால், அது  இறைப்பற்று  சார்ந்த நூல் அன்று என்று எண்ணத் தோன்றுமே..அது தவறன்றோ ? இதை அற்றம் ஏற்படின் விளக்குவோம்.