வெள்ளி, 3 ஜூன், 2016

முகாந்தரம்

முகாந்தரம் என்ற சொல்லை ஆய்வு செய்யலாம்.

முகம் என்பது வெளியுலகால் அறியப்படுவது ,   முகமற்றது  அறிதற்கு  இயலாத ஒன்றெனலாம் .

மனிதன்  ஏனை  விலங்குகட்கு  முகம் இருந்து  அறிதற்கு உதவுவது போலவே,  பொருள்கட்கும் விடயங்கட்கும் முகம் போன்ற ஒரு தெளிவு தரும் அமைப்பு வேண்டும்.  இஃது இருந்தாலே சான்று இருப்பதாகக் கருதப்படும்.

"அவனைக் குற்றம் சாட்டுவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை': என்று இச்சொல் வாக்கியத்தில் வருதலைக் காண்கிறோம்.

இப்போது அணுக்கமாகக் காண்போம்.

முகம் +  ஆகும் + தரம்,
முக +   ஆம்  +  தரம்,
முகாந்தரம் .

பொருள் :   காரணம்,  சான்று,   ஏது,  ஞாயம்,   மூலம்..

சொல்லை விரித்து  எழுதினால்   "முகம் ஆகும் தரம் "  ஆகும் .


முகாந்திரம்  எனினும்  ஆகும்.    திறம் >  திரம் .   முகம் ஆகும் திறம்.


வியாழன், 2 ஜூன், 2016

தக்காளி.

தக்காளி
-----------

தகத்தக என்று  சிவப்பாகவும் இளஞ்சிவப்பாகவும்  இருந்து கண்கவர்  காட்சியைத் தருவது தக்காளிப்  பழக்குவியல். இதைக் கண்ட தமிழன், தக என்ற சொல்லினின்று தக்காளி என்ற சொல்லை அமைத்தான்.

தக >  தக+ ஆளி =  தக்காளி.

தகுந்த சத்தினை உடலுக்குத் தருவது  தக்காளி.

தகு+  ஆளி = தக்காளி எனினுமாகும்.

ஆக இது இருபொருத்தமுடைய இருபிறப்பி ஆகும்.

ஆளி, என்பதில்  ஆள்+ இ என்ற  இரு துண்டுகள் உள.

தகத்தக என்ற நிறத்தை ஆள்வது என்ற  பொருளும்,   உடலுக்கு ஊட்டத்தினை மேலோங்கச் செய்வது என்னும்
பொருளும்  உளது.  இ என்பது விகுதியாகும்.

மக என்ற சொல்  மக்கள் என்று புணர்ச்சியில் திரிந்தது கருதத்தக்கது.

சாதிகள் தோற்றம் Castes - origin

சாதிகள் தோற்றம்

\ஒரு சமயத்தில் எங்கள் வீட்டுக்குப் பின்னால் உள்ள வீட்டில் வாழ்கின்ற சீன அம்மையார் பத்து நாய்களுக்குமேல் வளர்த்து வந்தார்  .  அவற்றுள் சில அதிகாரத் தோரணையில் நடந்துகொண்டு, பிற நாய்களை அடக்கி வைத்தன. அதில் ஒரு நாய் மிகவும் கடுமையாக நடந்துகொண்டது   அது  உறுமியதும் மற்ற நாய்கள்  நடுங்கின.ஒன்றிரண்டு எதிர்த்து நின்றன.

அடக்கியாள்வது என்பது விலங்குகளின் இயல்பும்  மனிதரின் இயல்பும்  ஆகும். யாரும் யாரையும் அடக்கியாளாவிட்டால் தலைவர்கள் தோன்ற இயலாது.  இதனாலேயே படைகளில் பல்வேறு பதவி நிலைகள் தோற்றுவிக்கப் பட்டன. சிறந்த முறையில் அடக்கி ஆண்டவர்கள்  பதவிகள் வழங்கப்பட்டுப்    பல்வேறு உயர்வுகளும் பாராட்டுகளும் அளிக்கப்பட்டனர்.
அடக்கி ஆள்வதற்குப் பல்வேறு உத்திகள், முறைகள் கையாளப் படலாம்.

ஒரு நாட்டில் உள்ள அனைவரையும் பல்வேறு நிலைகளாகப் பகுத்து உயர்வு நிலை  இயல்பு நிலை என்று பிரித்துவைத்தால், கட்டுப்பாடு ஏற்படும் என்று நினைத்தனர். இது படைகளில் போல நன்மை பயக்கும்.

ஒரு கூட்டத்தினர்  தாழ் நிலையிலோ  உயர் நிலையிலோ  வைக்கப்படுவதற்கு  ஆட்சி எளிதாக்கம்  நாட்டின் அமைதி  ஆகியன மட்டுமின்றி வேறு  காரணங்களும் இருக்கலாம்.

இதனை முதல் முதல் கண்டுபிடித்தவன் தமிழனாக இருக்கவேண்டும்.  அல்லது ஓர் இந்தியனாக இருக்கவென்டும்.  அதனால்தான் மனு முதலிய நூல்கள் இந்தியாவில் தோன்றின.  அப்போதைக்குக்  கட்டுபடுத்தத் தேவையானதை மட்டும் செய்துகொள்ளமல், நிரந்தரமாகப் பிரிவினைகளைப் புகுத்திப் புதிய குமுக (சமுதாய)  ஏற்பாடுகளைச் செய்தனர். இதைச் செய்தவர்கள் கெட்டிக்காரர்கள்.

இதைச் செய்தவர்கள் யார்?.  அதிகாரத்தில் இருந்த பலவேறு மன்னர்கள்தாம்.  எதிர்ப்பு, கலகம், கிளர்ச்சி இவையெல்லம் இல்லாமல் அமைதி நிலவத் ,  தாங்களும் பதவிகளில் நீடிக்க, இதை இவர்கள் செய்தனர். இவர்களுக்கு, பார்ப்பனர்களும் மற்றவர்களும் உதவினர்.  மன்னன் கேட்டுக்கொண்டால் மற்றவர்கள்  மறுக்கலாகுமோ? உதவியவர்கள் நன்மைகள் பெற்றனர்.  சிலர்  இது கடவுள் நீதி என்பதை மட்டும் போதித்துச் சமாதானம் செய்தனர்.  நூல்களிலும் பொதிந்து வைத்தனர்.

இதனால் சாதிகள் உண்டாயின.  ஆரியர் என்போர் வந்து புகுத்தினர் என்பது பொருந்தவில்லை.. ஆரியர் என்பது  இனப் பெயராக அறியப்படவில்லை. பிரித்தாளும் அரசியலை அரசியல் என்னாமல் மதத்தில் போட்டுக் குழப்பிவிட்டனர். இதைக் கேள்வி கேட்டவர்களுக்கு அது நல்ல பதிலாக அமைந்தது.

சாதிகளின் தோற்றம்

இது அந்தக்கால அரசியல் தந்திரம்.  அவ்வளவுதான். அவ்வக் கால அரசுகளின் இசைவு இன்றி யாரும் எதையும் புகுத்திவிட முடியாது.

மனு என்ற புனைப்பெயரால் சுட்டப்பட்டவனும் ஒரு திராவிட அரசனே என்பதை மனுவின் நூல் கூறுகிறது.

சில கூட்டத்தினரை  அமைதிப்படுத்த  ஒரு கூட்டத்தினரை  அடக்கிவைத்தல்
இன்றும் புதுமை அன்று. பாணர் கூட்டத்தைச் சேர்ந்த பாணினி  என்பவன்
வடமொழிக்கே இலக்கணம் எழுதினான். வால்மீகி  இராமாயணம் பாடினாலும் அவன் கூட்டம் பின் இறங்கிவிட்டது.  மீனவப் புலவன் வேதங்கள் திரட்டினான் . என்றாலும் மீனவர்கள்  இறங்கியதே மிச்சம். தமிழர்களை அடக்கிச் சிங்களவர்களை உய்வித்தான்  இராசபக்சே .இவை தலைகீழ் மாற்றங்கள் .  வரலாற்றியல்பு.

ஆட்சிக்கு எதிராகப் புரட்சிகள் வெடிக்காமல் இருக்கவேண்டியதே அரசுக்கு முதன்மை ஆகும்.

will edit.
மெய்ப்பு: 15112020