வியாழன், 19 மே, 2016

இனிதாகப் பணிவாகப் பேசு வானோ?

பன்றிகழு தைமாடு நாய்கள்  எல்லாம்
பாவமவை தம்விதியை நொந்த வண்ணம்
உண்டுகிடந்   துறங்குவன மாந்தர் தாமே
ஒழியாம லவைபெயரால் திட்டு வார்கள்
பண்டுமுதல் இன்றுபயின் றோங்கு மாந்தன்
பண்பட்டு மாறிடினும்  மாற வில்லை!
என்றவற்றை இழுக்காமல் நன்று கற்றே
இனிதாகப் பணிவாகப் பேசு வானோ?



Did you say ‘pigs ’.............? 

https://sg.news.yahoo.com/did-pigs-dap-guan-eng-asks-hadi-063300534.html

புதன், 18 மே, 2016

வெள்ளத்தின் சீற்றம்

வெள்ளத்தின் சீற்றம் விலக்கற்கு நீர்தங்கும்
பள்ளங்கள்  குட்டை குளங்களோ  டேரிகளை
மெள்ளத்தூர் வாரித்தான்   மேன்மை புகுத்திடின்
எள்ளனைத்தும்  வாரா  திடர்.

தெரிந்தும் இதற்குத் தெருள்தீர்  வதனைப் 
புரிந்து முடிக்காமல் புண்ணியமொன் றில்லை 
வரிந்துகட்டு  வல்லேசெய்  வான்விரைசே  வைமற்
றெரிந்துபடும் துன்பம் எலாம்.       

சி. போ.10 சிவம் ஆன்மா பாகுபாடு

Read last post and continue:




எங்குமிருக்கிறது எனப்படும் சிவம் தானே என்ற உள்ளூணர்வு ஏற்படுதல் வேண்டும், தானே என்ற பதம் ஆன்மா என்பதை மறத்தல் ஆகாது. இங்ஙனம் சொல்லாலும் எண்ணத்தாலும் அறிந்த நிலை கடந்து சிவம் ஆன்மாவாகிய தானே என்கையில் ஏற்படும் காணுதலே ஆன்ம தரிசனம் என்பதாகும்.

இங்ஙனம் நடைபெற்றாலும், ஆன்மா ஓரிடத்திலேயே (உடம்பினுள்ளேயே) இருக்கிறது என்ற ஒரு வரம்பு அளாவிய எண்ணம் நீங்கிவிடுவதில்லை. இது நீங்குவதாயின் சிவமாகிய தான் (ஆன்மா) எங்குமிருக்கிறது என்று உள்ளத்துள் நிலைநாட்டிக்கொள்ள வேண்டும். இது சாதனை ஆகும். இங்ஙனம் நடைபெறவே, சிவத்துக்கும் ஆன்மாவிற்கும் இடை நிற்கும் பாகுபாடு முற்றுப்பெறும். அபேதம் சித்திக்கும்.



மேலும் சிவத்தின் ஆன்மாவுடன் கூடிய முழுமுதன்மை சுட்டி அறியத்தக்கதன்ன்று. சுட்டாது உள்ளுணர்வோடிருக்க, பாகுபாடின்மை திறம்பெறும்.