திங்கள், 9 மே, 2016

ஏன் நான் பிறக்கவில்லை

ஏன் நான் பிறக்கவில்லை ‍‍ === என்
இயற்றமிழ் ஏய்ந்திடு இன்புகழ் காலத்தில்



பல்புகழ் நாட்டியவன் ‍‍‍== இயற்
பைந்தமிழ் ஓங்கிய கல்விதொல் காப்பியன்
வெல்தரு மண்திருவோன் === அவை 1
விளங்க வழங்கு நலங்கெழு நாட்களில் (  ஏன் 

தெள்ளு தமிழ்முனிவன்  ‍‍=== ஒரு
தெய்வப் புலவனென் றிவ்வுல கேத்திடும்
வள்ளுவன் செய்திருவாம் === குறள்
வந்துதிர்ந் திட்டபொன் செந்தமிழ் வேளையில்  (ஏன் 

பாண்டி நெடுஞ்செழியன் ‍‍=== முன்
பாவலர் மேலவர் மாங்குடி யார்புனை3 
ஈண்டிய4 பாடல்களை ==== பாட  
 இருசெவி கேட்கவும்
 கண்களும் காணவும்  (ஏன் 

Notes:
1.அவை =  சபை ,மன்றம்
2.வென்று தந்த நிலத்தின் திருவினை உடைபோன் ‍ நிலந்தரு திருவிற் பாண்டியன்:  
3பாண்டியன் நெடுஞ்செழியன் அவைக்களத் தலைமைப்புலவர் மாங்குடி மருதனார்,
4 ஈண்டிய -  மிகுந்த ,  நிறைந்த 

This does not appear in proper format on my screen,  Hope your screen view is acceptable.Edit probs

ஞாயிறு, 8 மே, 2016

உமையிடம் வேண்டுதல்

தட்டச்சுச் செய்பொழுதில்
ஒட்டிவரு பிழைகளையே
வெட்டிவிட எண்ணுவதை
முட்டுபல கட்டையிடும்
மென்பொருளைப் பொதிந்துவைக்கும்
ஒண்ணுலவி இணைப்புளதே...
இதையழிக்கும் மின் துடைப்பம்
விதைத்துவைத்தும் கணினியிலே
சிதைத்துவிடும் செலவுகளும்
அதைவென்றும் ஆங்குவரும்.
புகுகடவுச் சொல்தொட்டு
நகுபிசகு புகுத்துவழி
மிகுஅறிவால் கண்டுசிலர்
வெகுகுழப்பம் விளைத்திடுவார்.
நம்விரல்கள் நலிவடையக்
கம்முபுகர் விம்மிவிடும்

எனவாங்கு
எழுதுவ அனைத்தும் இணையில் விழிப்புடன்
பழுதினி வாராது காக்கவுன்
விழுமிய பேரரருள் வேண்டுவம் உமையே


======================================================

அருஞ்சொற்கள்:

தொட்டு -=  தோண்டி எடுத்து.
நகுபிசகு  -=  நகைப்புத்தரும்   பிழைகள் 
ஒண்ணுலவி இணைப்புளதே. this refers to browser add-ons
மின் துடைப்பம் -  anti virus
எழுதுவ =  எழுதுபவை.
கம்முபுகர் - மங்கச் செய்யும் பிழைகள் 
விம்மிவிடும்  -   கூடிவிடும்.
.

பஜி >பஜன் also source of word Gaja

பஜி என்னும் சொல்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=======================

பஜி என்பது கேட்பதற்கு இனிய சொல். ஆனால் தமிழன்று. முருகனைப் பஜி, கண்ணனைப் பஜி, முக்கண்ணன் மகனைப் பஜி என்று வருங்கால் இன்னோசை பிறக்கிறது. பண்டைத் தமிழருக்கு இந்த ஒலியும் இவை போல்வன பிறவும் ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. ஒலியில் என்ன இருக்கிறது?  ஓரெழுத்தை ஒலித்து, அதைக் கேட்பவர் அதன் பொருளைப் புரிந்துகொண்டு அதற்கான  வேலை நடைபெற்றுவிடுமானால்  அவ்வளவு தானே வேண்டியதெல்லாம். உயர்வான ஒலி, தாழ்வான ஒலி என்று எவையுமில்லை.

இருந்தாலும் தொன்மைக்குக்  காப்பு (காத்தல், பாதுகாப்பு ) அளிக்க விரும்பி, தொல்காப்பியனார் இயற்றிய இலக்கணத்தில் சில ஒலிகளை விலக்கிவிடவேண்டுமென்றார். இதையே நாம் இது நாள் வரை பின்பற்றிக்கொண்டிருக்கிறோம்.

எந்த எந்தத்  தமிழ் ஒலிகட்கு வேற்றொலிகளைப் போடலாம் என்ற ஒரு முறை இருந்திருக்கிறது. இதன்படி ஒலிகள் மாற்றியமைக்கப் படுவதை பலவிடங்களில் நாம் எடுத்துக்காட்டியிருக்கிறோம்,

இதன்படி, " ட"  வுக்கு " ஜ"  என்ற எழுத்தை இடலாம் என்று தெரிகிறது.
யானை என்ற விலங்குக்கு ஒரு சொல் அமைக்க விரும்பியவர்கள்
கடை என்ற சொல்லை எடுத்துக்கொண்டனர். யானையின்  முகம் கடைந்ததுபோன்றிருக்கிறது  என்பதனால் கடை என்ற சொல்லினின்றும் ஒரு பெயரை அமைக்க விரும்பினர்.

எனவே,  கடை > கட > கஜ.

கடைந்தது போலும் முகமுடைய விலங்கு என்று பொருள்.

யானைக்கு ஆரியர்களிடம் பெயரில்லை என்றும் அவர்கள் முன்னாளில் வாழ்ந்த இடங்களில் இந்த விலங்கு இல்லை என்றும்
ஜான் கே( John  Kay ) என்ற வரலாற்றாசிரியர் தெரிவிக்கிறார்.   இது ஒருபுற மிருக்க :

 கடை > கட > கஜ(ம்)   என்பது உண்மை என்று தெரிகிறது.

இதுபோல படி  என்பதிலிருந்து பஜி அமைந்தது.

சில வேளைகளில் பாட்டுப் படித்தல் என்பதுமுண்டு. ஆகவே படித்தலுக்கும்  பாடுதலுக்கும் பெரியதொரு  வேறுபாடு முன்னாளில் இல்லை என்று தெரிகிறது.  "உன்னை நினைச்சேன், பாட்டுப் படிசசேன்" என்றொரு திரைப்பாடலும்  நாம் கேட்டிருக்கிறோம்.  முன்னாளில் பெரிதும் பாடல்களே இருந்தன. உரை நடை என்பது பின்னாள் வளர்ச்சி.

படி > பஜி    இத் திரிபு இப்போது  தெளிவு அடைந்துள்ளது ..

பஜி >பஜன்.

இனி

ஆடு  > ஆட  >  ஆஜ  ( ஆட்டின் தொடர்புடைய )

மேடு  >   மேடை >  மேஜை
மேடை >  மேசை

ஆகவே  இவ் ஆய்வு மெய்ப்பிக்கப் பட்டதென்க .

அறிந்து இன்புறுக.

Auto-correct errors have been   edited..Apologies.