திங்கள், 11 ஏப்ரல், 2016

சட்டமும் பழமையின் எதிர்காலமும்

பல்லாயிரம் ஆண்டுகள்தாம்
புரையோடிய புண்களுக்குப்
பூசி  நலம் காண்டற்குப்
புத்தொழுங்கு நன்முறைகள்.

செயிர் தீர் தேவி தொழும்
சீர்தரும் விழாவினிலே
உயிர் போக்கும் வெடிகளினால்
செவி கிழியும்  ஒலி எழுகை.

தொன்றுதொட்டுப்  பின்பற்றும்
தோமறு நிகழ்வுகளை
இன்றுகெட்டுப் போகவிட்டால்
எங்கனமோ! பொங்குமனம்.

சட்டம்தான் மறுத்திடினும்
சாங்கியத்தை மறைத்திடவே
வெட்டமுள்ள மதக்குரவர்
வேண்டாமை ஒப்புவரோ?

பழமைக்கும் புதுமைக்கும்
பார்க்குமொரு போராட்டம்
வழமை இது மாறிவர
வாய்ப்பினியே வந்திடுமோ?






  

சனி, 9 ஏப்ரல், 2016

CONDOLENCES:FOR DEAD IN PUTTINGAL DEVI TEMPLE FIRE KERALA

கொல்லம் புத்திங்ஙல்  தேவி  ஆலயத்துப் பட்டாசுத்  தீயில் 90 பேர் கொல்லப்பட்டனர். (by 1015 hrs)  பலர் காயமடைந்தனர்   இப்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இறந்தோருக்கு நம் இரங்கல் .

காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனை  இறைஞ்சுவோம்..  




தேவி திருவிழவில் தீமாண்டோர் ஆவியுமே
மேவுக நல்லமைதி மிக்கு .

தேவியின் சோதனை தாங்கொணாத வேதனை 
கோவம் தணிகவென்று தொடர்கபற்றுச்  சாதனை. 

விழவு = விழா.


EDITED.

சீக்கிரம் என்ற சொல்

இப்போது சீக்கிரம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.  இது தமிழன்று என்று சொல்லப்படினும் இதன் அடிச்சொற்கள் தமிழாக உள்ளன.

சீ என்பது சீர் என்ற தமிழ்ச்சொல்லின் கடைக்குறை, ரகர ஒற்று இறுதியில் நின்றால் அது பேச்சு வழக்கில் மறைந்துபோவது பெருவழக்காதலின் அதை இப்போது விரிக்கவில்லை.

கிறங்குதல் என்பது அசைதல் என்ற பொருள் உடையது, இதன் அடிச்சொல் கிறு என்பது. கிற்புறுதல் கிற்றல் என்பனவும்   கில் > கிறு என்ற அடியில் தோன்றியனவே ஆகும். கில் >  கிரு  எனினுமாம் .

கிறு+  அம் =  கிறம் ஆகிறது. இதன் றுகரம் ருகரமானால் கிறு> கிரு+ அம் = கிரம் ஆகும்.

சீ  + கிரம் =  சீக்கிரம் ஆகும்>

இது சீராக அசைதல், எதிர்பார்ப்புக்கு ஏற்ப அசைதல் இயங்குதல் என்று பொருள்பெறுகிறது.

உண்மையில் இது சீர்க்கிறம் பின்னர் திரிந்து சீக்கிரம் என்று இதன் அடிச்சொற்கள் யாவை என்று அறியாத நிலையில் வாத்தியார்களால் எழுதப்பட்டுத் தமிழன்று என்று கருதப்பட்டுள்ளது. பின் பிறமொழிகட்குப் பரவியிருக்கின்றது,

இப்போது இது விரைவு குறிக்கிறது.  எதிர்பார்க்கும் வேகக் கூடுதலே சீக்கிரம்