வெள்ளி, 8 ஏப்ரல், 2016

word building technique

உடம்படு மெய் வருமிடங்களையும் அவை வாரா இடங்களையும் ஓர் உதாரணம் மூலம் விளக்குவோம்;

எடுத்துக்காட்டாக ஆஸ்திகம் என்ற சொல்லைப் படைக்கவேண்டும்.
இதற்கான அடிச்சொற்கள் ஆசு+ திகை+ அம் என்பன.  ஆசு = பற்றுக்கோடு. ஆதரவு.  திகை =  திகைதல், உறுதிப்படல், நிறுவப்படுதல். அம் என்பது விகுதி. குறிக்கத்தக்க பொருள்: பற்றுக்கோடு உறுதிப்படல். இறைவனின் ஆதரவு உறுதியாக , அவனை நம்புதல்.
 உட‌
ஆசு + திகை+ அம் என்பதை வழக்கமான முறையில் புணர்த்தினால்
ஆசுத்திகையம் என வரும். இது முதலாவது நீண்டுவிட்டது. இரண்டாவது கேட்க இன்னா ஓசை பிறக்கிறது.  ஆகவே, இப்புணர்ச்சி முறையை மாற்றி,  தகர ஒற்றை எடுத்துவிட்டு
யகர உடம்படு மெய்யையும் ஐகாரத்தையும் எடுத்துவிட்டு
ஆசு திக் அம் = ஆசுதிகம் எனின் சொல் குறுகி இனிமை பிறக்கிறது.
மேலும் திரித்து,  ஆஸ்திகம் எனின்  அது நிறையழகையும் பெறும்
சொல்லாகிவிடுகிறது.

இல்லையென்றால் அறு+ அம் = அறம் என்னாது அறுவம் என்று வகர உடம்படு மெய் பெற்றுவர வேண்டுமெ!  சொல் நீண்டுவிடுகிறது. அறம் என்ற சொல் அமைந்த பிறகு அறுவம் என்ற‌
இன்னொரு சொல் அதே அடியிலிருந்து பிறப்பிக்க வேண்டுமானால்
அறுவம் என்பதையும் வைத்துக்கொள்ளலாம். சொல்லின் பொருள் அதன் அடியிலிருந்தும் வழக்கிலிருந்தும் தீர்மானிக்கப்படும்.

இதைப் பல முறை விளக்கியுள்ளேன். If you have missed previous posts on the subject or
if they had been deleted by viruses . third party or otherwise missing from our  archives, then this serves the intended purpose.  Will edit later.

Control your diabetes

நீரிழிவு நோயினுக்கு நிலைக்களனே  அளிக்காதீர்.
நேர்முகமாய் மறைமுகமாய்ச்  சீர்கேடு பற்பலவாம்.
ஊர் ஊராய்க் கணக்கெடுக்க உயிர்விட்டோர் பலகோடி!
சீருணவு மேற்கொள்வீர் செய்பயிற்சி  முன்வைத்தே



.https://sg.news.yahoo.com/diabetes-causes-1-5-mn-deaths-un-chief-173403544.html

Diabetes causes 1.5 mn deaths a year: UN chief


இரண்டு வெண்டைக் காயை முனைகளை வெட்டிவிட்டுக்  கீ ந்து ஓர் இரவு தண்ணீரில்  ஒரு கோப்பையில் ஊறவைத்துக்  காலையில் அந்தப் பிசின் நீரைக்  குடிக்கவும்.    மிஞ்சிய வெண்டைகாயைக்  குழம்பில் போடலாம்.
இந்த நீர்  ஒரு நல்ல துணை மருந்து.  மருத்துவர் தரும் ஆங்கில  மருந்துகளுடன் இதையும் கைக்கொள்ளலாம். முரண்  இல்லை. உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைய உதவும். சிலர் செய்து வருகின்றனர்.  Do not stop your prescribed medication.  If Sugar level drops too low, then reduce the number of lady's fingers.

காய்ந்த வெண்டையில் பலன் குறைவு. புதிதாகப் பச்சையாக  இருக்கவேண்டும் .

வெண்டியை  நன்கு கழுவி சின்கோலிகள் (பாக்டீரியா) இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். கொதித்து ஆறின நீரில் ஊறவைக்கவும்.  குழாய் நீரில்  தூய்மைக்கேடு  இருக்கலாம். கோப்பையையும்  நன்றாகக்   கழுவுக .

Consult your healthcare professionals.



வியாழன், 7 ஏப்ரல், 2016

Pop Star snake-bitten sings on, dies

சொல்லொடு சுரத்தைக் கோத்துச்
சுவைதரப் பதிந்து பாடி
பல்லெடு படாத பாம்பைப்
பயமிலள் மிதித்தும் ஆடிக்
கொல்லவும் படுதல் அந்தோ
கூரிய விதியோ தேர்வோ
நல்லது கடித்தும் நஞ்சை
நயந்தவள் மறைந்த தென்னே!




Pop Star Bitten By Cobra Sings On Before Dying

https://sg.news.yahoo.com/pop-star-bitten-cobra-sings-dying-071317638.htm


Irmawathy from a poor family:
lhttp://time.com/4286323/irma-bule-snake-bite-cobra-singer-dangdut-indonesia/