வெள்ளி, 25 மார்ச், 2016

பிருதுவி அல்லது பிரித்வி ஒரு தானமே

இதைப் பற்றிய ஆய்வின் ஒரு துளியை யாம் 2009ல் வெளியிட்டோம்,
அது நல்ல வேளையாக நுழையொற்றுக்களால்   spywares   ஒழிந்துவிடாது இன்னும் உள்ளது.  இங்கு சொடுக்கவும் .

பிருதுவி அல்லது பிரித்வி
http://sivamaalaa.blogspot.sg/2009/01/blog-post.html

இது தமிழர் அறிந்த சொல் எனினும் தமிழன்று என்னலாம்.  யாம் கூறவந்தது  இச்சொல்லின் அடி தமிழென்பதுதான்.

பேரரசு அமைத்துப் பெருவாழ்வு எண்ணிய தமிழன்,  அமைத்தான்  ஆனால்  பல சாதிகளாகி  உட்பகை உற்ற குடியாய்  ஆயிர ஆண்டுகட்கு முன்னரே ஒருவாறு வீழத் தொடங்கிவிட்டான்.  அவன் மேலெழாது பார்த்துக்கொண்டது அவன் அணைத்துக்கொண்ட பிரிவினைகள்.

சிறந்த மொழியையும் இலக்கியத்தையும் உடையவன் அவனது வீழ்ச்சியில் அவன் சொற்களை மற்றவர்கள் மேற்கொள்ளுதல், ஒரு தானமே ஆகும்.  இல்லை  அவன் சொற்கள் அவனே அறிந்திலன்;  எப்படித் தானமேன்பது !?

வியாழன், 24 மார்ச், 2016

"மிக்சி "

Mixer-Blender என்பது "மிக்சி "   ஆகிவிட்டது.  இதற்குமுன்  அம்மியில்வைத்து அரைக்க வேண்டியிருந்தது.

அம்மிக்கு அம்மிக்கல் என்றும் சொல்வதுண்டு. இதிலிருந்து :

கல்>கல்வு  > கல்வம்  என்று பெயரமைnதது.

இது சற்று  வேறு விதமாக

கல் >  கல்லு + வு + அம்  = கல்லுவம் என்றும் வரும்.

மிக்சியை மின்கல்வம் எனறு கூறலாமோ?


வல்லெழுத்து மிக்கும் மிகாமலும்..........

நிலைமொழியும் வருமொழியும் புணருங்க்காலை சிலவிடத்து வலிமிக்கும் மற்றும் சிலவிடங்களில் வலி மிகாமலும் வருதலைக் கவனித்திருக்கலாம்.
எவ்வெவ் விடங்களில் மிகும், எங்கெங்கு மிகா,  எங்கெங்கு மிக்கும் மிகாமலும் வரும் என்பதறிந்து எழுதுங்கால் கடைப்பிடிக்க வேண்டும்.  இதில் அச்சுப் பொறுக்குவோரும் தட்டச்சு செய்வோரும்  எழுத்தாளரின் பெறுப்பை மிகுத்துவிடுகின்றனர்.  தன்திருத்த வசதியும் auto-correct  feature in editors சில வேளைகளில் பிழைகளைக்  கூடுதலாக்கிவிடுகிறது.


பாடி + காவல் =  பாடிக்காவல்.

இது

பாடி + காவல் =  பாடிகாவல் என்றும் இயல்பாய் வரும்.

இதுபோல்வன குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.