முன் இடுகை:http://sivamaalaa.blogspot.sg/2016/01/5.html
சிவஞான போதம் ஐந்தாம் பாடற் பொருளை இப்போது அறிந்து மகிழ்வோம்.
விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு
அளந்தறிந்து அறியா ஆங்கவை போல
தாம் தம் உணர்வில் தமியருள்
கா ந்தங் கண்ட பசாசத்து அவையே ,
விளம்பிய உள்ளத்து - முன் சொன்ன உடற்கண் உள்ளதாகிய உயிரால்;
உள்ள அத்து = உள்ள அது = உள்ள (உயிர்) காரணமாக; அது என்பது உயிரைச் சுட்டியது.
இங்கு அது என்பது அத்து என்று இரட்டித்து நின்றது.
மெய்வாய் கண் மூக்கு செவி : ( இங்கு கூறிய ) ஐந்து புலன்களும்
அளந்து - அளவிட்டு;
அறிந்து - தெரிந்து (கொள்ளுமென்றாலும்)
அறியா - உண்மையில் அவை தாமே எதையும் அறியவில்லை;
ஆங்கு அவை போல - அந்த ஐம்புலன்களும் தாமே அறிதல் போலும் தோற்றத்தை உண்டாக்கி ;
தம் தமி அருள் - தம் தம்மில் ஒன்றாயிருக்கும் சிவத்தின் அருளினால்;; (அறிதல் நடைபெறுகின்றது )
தமி = தமித்து இயங்கும் சிவம்; வேறோர் ஆற்றலின் துணையின்றி இயங்கும் . இறைவன்;
காந்தம் கண்ட பசாசத்து = காந்தத்தை அணுகிய இரும்பு போல ஐம்புலன்களுக்கும் அவ்வாற்றல் வந்து சேர்ந்து இயக்கத்தையும் உணர் ஆற்றலையும் அளிக்கும் தன்மை அதுவாகும்,
பசாசம் - இரும்பு. அது, பசாசம் > பசாசம் அத்து என்று இரட்டித்தது.
பசாசம் அதுவாகும் என்றபடி
.பசாசம் - இச்சொல் பைசாசம் @ என்றும் வழங்கும். பச்சை இரும்பு என்ற வழக்கும் உள்ளது. இரும்பு வேலைக்காரனால் அடித்துச் செய்யப்படாத இரும்பை இது குறிக்கும். பசுமை + அசம் = பசாசம் . மை விகுதி கெட்டு சகரம் நீண்டது. அயம் ( இரும்பு ) > அசம் யகரம் - சகரமாய்த் திரிந்தது. நேயம் > நேசம் போல.
@ பசாசம் - பைசாசம் இது பசுந்தமிழ் > பைந்தமிழ் போன்ற திரிபு. ( பிசாசு - பைசாசம் என்பது வேறு . குழம்பலாகாது. )
காந்தம் < காந்தி இழுத்தல் . காந்துதல் அதன் இழுப்பு ஆற்றலைக் குறித்தது. தீயினால் காந்துதலோடு ஒப்பிட்டு ச் சொல் அமைந்துள்ளது.
சோற்றுப்பானை சூடேறிச் சோறு காந்தும்போது உள் அடியில் சோறு ஒட்டிக் கொள்கிறது, இதையறிந்த தமிழர் , இழுக்கும் இரும்பிலும் உட்சூடு
இருக்குமென்று எண்ணி அதைக் காந்தம் ( காந்து + அம ) என்றனர். இரும்புத் துண்டுகளை உரசினால் சூடு ஏறும்; கூடினால் பொறிகூடப் பறக்கும். ஊர்மக்கட்கும் கருமகற்கும் இது போதுமே!
Some changes in the commentary text were noticed and corrected. Anti-Virus facility warned that some add-ons are making unintended changes.