திங்கள், 7 டிசம்பர், 2015

சென்னை வாசிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி......

சென்னை வாசிகள்,
மிகுந்த  நெஞ்சுரம் கொண்ட மக்கள்.
ஊரையே உருட்டிப்  புரட்டிப் போட்ட வெள்ளத்தில்
உள்ளே வீடுதேடி வந்த பம்புக்குட்டியை
ஈரத்  துணியை முறுக்கிப் பிழிவதுபோல்
சூரத் தனமாய்த் திருகிக் காட்டுகிறார்கள்.

ஒரு சாலை மேம்பாலத்தைத்  தொட்டுச் செல்லும்
பெருவெள்ளமும்  ஏற்படக் கூடுமென்பதை
இப்போதுதான் கண்டிருக்கிறோம்.

உயிரிழப்புகளும்  பொருளழிவுகளும்  நேர்ந்து
பஞ்சு படாத பாடு படுகின்ற மக்களையும் காண
நெஞ்சு சுக்கு நூறாகிவிடும்
உணவுப் பொருளும் உதவிப் பொருளும் கொண்டுவந்தோரை
உதைத்தனர்  சிலர்;   அது
பதைத்து  நிற்கும் மக்களை
மறைத்து முன் நிற்கும்  காட்சி !
இதைத் தானா நாகரிகம் என்பது?

விரைவில் இயல்பு நிலைக்குத்   திரும்பி
துன்பம் களையப்பட்டு
அன்பு நிலையமாய்ச்
சென்னை செழிக்க
இன்னருள் இறைவன் தருக .


.


வியாழன், 3 டிசம்பர், 2015

சாமர்த்தியம்

இப்போது சாமர்த்தியம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

இதனை சா+ மரு(வு) +  து + இயம் என்று பிரிக்கவேண்டும்.

ஒரு மனிதன் சாவை மருவி நிற்கும் சூழ்நிலையிலும் எதிர் நீச்சல் போட்டு, அந் நிலையினின்று
வெற்றிகரமாக விடுபட்டு, இயல்பு நிலைக்குத் திரும்புவதே சாமர்த்தியம் எனப்படும்.

சொல் இக் கருத்தில் புனையப்பட்டபின்,  ஏனைத்  திறன் வேண்டும் சூழ்நிலைகளையும் குறிக்க வழங்கப்பட்டுப்,
பொருள் விரிவடைந்தது.

இப்போது சொல்லமைப்பை  மீண்டும் கவனிப்போம்.

சா + மரு + து+  இயம்.

சா + மருத்து + இயம்.

சா + மர்த்தியம்

சாமர்த்தியம்.

இயம் என்பது ஈண்டு விகுதியாய்ப் பயன்படுகிறது.  எனினும் இவ்விகுதி  இயங்கு என்பதன் அடிச்சொல்லும் ஆகும்.   சாவு மருவு நிலையிலும் இயங்கி வெல்லுதல் என்று  இயம் என்பதற்கும்  பொருள் விளங்கும்படியாக  அமைந்துள்ளது  அறிந்து மகிழற்பாலதாம். பின் நாளில்  இயம் என்பது வெறும் விகுதியாகவும்  சொல்லமைக்கப் பயன்படுவது காணலாம்.

து என்பது பலசொற்களில் இடை நின்று சொல்லமையும்.  எ-டு:  பரு (த்தல்) +  (அ)து +   அம்  =  பருவதம்.  பரிதாகிய மலை,  1

சொல் அமைந்த விதமே இங்கு விளக்கப் பட்டது.   அமைந்த சொல் எம்மொழிக்குரிய து என்பதை  இவ்விடுகை தொடவில்லை.  இச்சொல் தமிழிலும் வழங்குவது.

இதனை  வேறு வழியிலும் விளக்கலாம்,    ஆங்கு புகாது விடுப்போம், 2


-----------------------------------------------------------------------------------------------

Notes:

1.   அது , இது  என்பன  "து "  வெனக்    குறைந்தியலும் . மலாய்  மொழியிலும் இங்ஙனம்   தலைக்குறையும்.  cf.   itu  >  tu.   e.g.  Sakitnya tu  disini.  (Cita Citata ). இது  (Tamil) =   itu  (Malay)  >  tu.   In English :   it is  >  'tis  (in poetry).   இது  (Tamil)  compares with  it (English).  There is no doubt Tamil இது  is original.

2.  சம(ம்) +  ஆர்த்து  +  இயம்  = சா மர்த்தியம் ;   ஆர்த்தல்  (வினைச்சொல் ).. 
also  சம + அறுத்து +  இயம் .   அறுத்தல் (வினைச்சொல் ). In each case 'sama'  would be shown to have become elongated as  'saama'.  On the other hand,    ஆர்த்து    shortened to  அர்த்து.   &  அறுத்து   transformed  to  அர்த்து. respectively  in such proposals.

புதன், 2 டிசம்பர், 2015

A problem that kicks the leadership

Sadly, governance in Tamil Nadu is nil. The water this year was not abnormal or an aberration. It is Chennai's residents who suffer at the end of the day," he said. Tamil Nadu may have received `940 crore from the Centre for flood relief measures. How this as well as other sources of funds are put to use will determine the fate of the bustling cosmopolitan city. 

Read more at:
http://economictimes.indiatimes.com/articleshow/49963247.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

http://economictimes.indiatimes.com/articleshow/49963247.cms?


நகர்த்தூய்மை புரத்தலிலே நாட்டமிலை புறத்தகற்றா
நகர்க்குப்பை அடைப்பதனால் நடுக்குறுத்தும் படுவெள்ளம்
தகர்த்தேரி புடைத்துவரும் தண்ணீரும் இடைக்கலந்து
தாளமிட வைக்கிறதே தலைவர்தலை  உதைக்கிறதே