சனி, 21 நவம்பர், 2015

mUshikam மூஞ்சூறு

உறுதல் என்ற சொல் தமிழில் மிகுதல் என்று பொருள்படுதல்.அறிவீர் .

மூஞ்சி  உறு >  மூஞ்சூறு  :  மூஞ்சி நீண்ட சிறு விலங்கு.1

இது கதவாணர்க்கு விளங்கியதோ இல்லையோ,  அவர்கள் அந்த விலங்குக்கு ஒரு சொல்லைப் படைக்க விழைந்து:

மூஞ்சி + இகம்1 ‍ மூஞ்சிகம்  அதாவது மூஞ்சி சற்று விரிந்த  விலங்கு என்ற பொருளில் ஒரு சொல்லைப் படைத்தனர். இச்சொல்லும் அழகுடன் அமைந்திருந்தது.  மூஞ்சிகம் என்பது வெளிப்படையாகத் தமிழாக இருக்கவே, 2

மூஞ்சிகம் >  மூசிகம் ஆனது. நன்றாக இல்லை. இறுதியில் மூஷிகம் ஆயிற்று,

ஒரு புதிய இனிய சொல் கிட்டியது......

குறிப்புகள்:


1. மூஞ்செலி   நச்செலி  என வருவன காண்க .

2. இகுத்தல் -  (பல பொருள் உடையது ).  இதிலொன்று:  விரிதல் (to spread out).  இகுத்தல்  >  இகம்  (இகு + அம் )

3 முன் > மூன் >  மூஞ்சி   தலை நீண்டு விகுதி பெற்ற சொல்.  இப்படித் தலை நீண்ட பலவும்  முன் இடுகைகளில் கண்டு பட்டியலிட்டுக் கொள்க.


மறப்புமங்கை

நினைப்பதை விடுப்பதோ மனமே‍=== நீ
மறப்பதில் ஒப்புயர்வு இலாதவளே!
இணைப்புறக் கருத்துகள் வாராமல் நிற்கையில்
முனைப்புற இழுத்துவா முன்னவற்றை


நினைப்பறைக் கதவுகள் சாத்திவிட்டாய்
மறப்புமங் கையுடன் கூத்தடித்தாய்
உனை ந‌ம்பி செயல்படத் தொடங்கிய எனை வெம்பிக்
கரைந்தழச் செயல்தகுமோ முறையோ


This is not about anything relating to my output for this blog or literary work.
It is about something you may never be able to guess. Just enjoy the riddle.

வெள்ளி, 20 நவம்பர், 2015

சக்கிலியன் III

சக்கிலியன்   என்ற  சொல்லைத் தொடர்ந்து நோக்குவோம்.

சகக்களத்தி என்ற சொல்  சக்களத்தி  என்று மாறியுள்ளதை முன்மாதிரியாகக் கொண்டு இதனை நோக்கினால்  சக்கிலியன் என்பது  சகக்கிலியன் என்று இருந்திருக்கவேண்டும். அப்படியானால்  அதற்குப் பொருள்  அஞ்சி ஒடுங்கின பிறருடன் தாமும் அஞ்ச்சினவர்கள்  என்று பொருள்.

கிலி என்பது  அச்சம். பௌத்தம்  மற்றும் சைவம் ஆகிய சமயங்களின் போட்டியின் போது  சைவத்திற்கு மாற  அல்லது பௌத்தத்தை விட்டு மாற அஞ்சினவர்கள்   என்பதாக பொருள் கொள்ளுதல் பொருத்தமானதாகும்.  இம்மக்களைப் பாதித்த வேறு வரலாற்று  நிகழ்வுகளையும்  ஆய்வது   இன்றியமையாதது.

தொடரும்

முன் இடுகைகளையும் காண்க