திங்கள், 9 நவம்பர், 2015

மழை நிற்க மந்திரத்தால் வேண்டி.....

பட்டுப் பட்  டென்று பட்டாசு  வெடியென்றால்
எட்டும்  தொலைவனைத்தும்  கொட்டு மழைவெள்ளம்,

வாங்கிவைத்த வெடிச்சுருள்கள்  வாங்குவார் இல்லாமல்
ஏங்குகின்ற கடைக்காரர் தாங்கு நட்டம் ஈடெங்கே?

சாலைகளில் குண்டுகுழி  கோலெடுத்துச் சென்றாலும்
நாலுபுறம் வெள்ள நீரால்  நடப்பதெங்கே கடப்பதெங்கே

சென்னை வாசிகட்கு சேர்ந்தபடி இரண்டு நாளாய்
என்ன இது  படுதொல்லை! இனிக்குறைய வாய்த்திடுமோ?

மழை இல்லை மழைஇல்லை என்றிருந்த நாள்போக
மழை நிற்க மழை நிற்க மந்திரத்தால் வேண்டினரே

எல்லாம்  அவன்செயல் என்றிருக்க லாமென்றால் 
நல்லாப் பெய்மழையால் நாடெங்கும்  காட்டாறு..

ஈண்டும் இயற்கைதரு இத்தகைய துன்புகளை
தாண்டிடவும்  இயலவில்லை வேண்டிடவும் விளைவுண்டோ? 

ஞாயிறு, 8 நவம்பர், 2015

நீரக சூறா > நரகா சூரா. Deepavali Greetings

 தீபாவளி கொண்டாடும்  அனைவருக்கும் எம்  தீபாவளி வாழ்த்துக்கள் .

தீபாவளி என்ற சொல்லுக்குப் பல பொருள் கூறப்படுகிறது. இச்சொல் எங்ஙனம் அமைந்தது  என்பதில் குழப்படி நிலவுவதால்  இச்சொல் மிக்கப் பழமை வாய்ந்த ஒரு சொல்லாய் இருக்கக் கூடும் என்று  எண்ணத் தோன்றுகிறது.

தீபாவளி என்பதை   தீப + ஆவலி  என்று பிரித்தல் கூடும்.   ஆவலம் கொட்டுதல் என்றால் சுற்றி நின்றாடுதல்.  தீபத்தை ஏற்றி வைத்து  சுற்றி நின்று கைகொட்டி ஆடுதலை இது குறிக்கிறது.   ஆவலம்> ஆவலி .  ஆவலம்  -  விளக்கை வலமாகச் சுற்றி  ஆடுதல். .  இது ஆயர் குலப் பெண்களிடத்து நடைபெற்றதென்பர்.  இவர்கள் கண்ணனை வழிபட்டதால்,  கண்ணன் இருளகற்றி  ஒளியூட்டுபவனென்பது இதிலிருந்து பெறப்படுகிறது.

ஆவலி  என்பது விளக்கு வரிசையைக் குறிக்கும் என்றும் கூறுவதுண்டு.

இப்பண்டிகையுடன்,  நரகாசுரன் கதையும் உடன் கூறப்படுவதுண்டு.
நரகாசுரன்  யார்?  அவன் கண்ணனின் மகன் என்றும் கூறுவர்.
கண்ணன்  மகாவிட்ணுவின்  தோற்றம்.   அவன்  நீல நிறம்.   கடலும் ஆகாயமும் நீல நிறம்.  அவன் நீரின் அமைப்பு அல்லது அம்சம்.

கடல் நீரில் தோன்றுவது  கடற்புயல் அல்லது  சூறாவளி.  கடவுளான  கண்ணன்   நீரக சூறாவளியை அடக்கினார்.

நீரகத்தே தோன்றிய சூறாவளி  " நீரக சூறா":  அல்லது நரகாசூரா எனப்பட்டது
அவன்" அடங்கியதும்"    நரகா சூரா வீழ்த்தப்பட்டான் எனப்பட்டது.  (உருவகம்​​) கடலில் தோன்றிய சூறா(வளி  கடலில் பிறந்தது;  ஆகவே கடலுக்கு மகன் ஆயிற்று/  ஆயினான் .  கடல்வண்ணன் கண்ணன் ஆதலின் "கண்ணனின் மகன்,"

சூறாவளி  வீசத் தொடங்கிவிட்டால்  நீரகமாகிய கடல்,  நரகம் ஆகிவிடுகிறது.
அதைவிட வேறு நரகம்  ஏது? நீரக சூறா >  நரகா சூரா.

இந்தியத் துணைக்கண்டத்துப் பெயர்கள் பலவும் தமிழ்த் திரிபுகள்.   ஒரு காலத்தில் தமிழே எங்கும் வழங்கியது;  அதுதான் காரணம்.

ஒரு காலத்தில் நாம் இயற்கையை வணங்கியவர்கள்.  அதனால் நம் தெய்வப் பெயர்கள் பல இயற்கையின் பெயர்கள்.

விண்  >  விண்ணு >  விஷ்ணு.
கரு >  கரு+ உண்+ அ  >  கருண >கர்ண >

கண்ண.  (கருப்பு சாமி )
சிவப்பு >  சிவன்.  ஒளி
கரு:  இருள்.

இந்தப் பெயர்களைச் சங்கதச் சாயலில் மாற்றித் தருவதன் நோக்கம் என்ன?தமிழன் சாமியைக் கும்பிடுகிறோம் என்ற எண்ணம் மனத்தில் தோன்றுமாயின் கும்பிடுவோனுக்கு  வெறுப்பு தோன்றக்கூடும். அதைப் பொதுமொழியில் தருவதன்மூலம் இக்கசப்பு  உணர்ச்சியை         மாற்றி இறை  நெருக்கத்தை ஏற்படுத்தவே  ஆகும்.

இவை முன்பு விளக்கப்பட்டுள்ளன.

சனி, 7 நவம்பர், 2015

valmiki caste

சில வட இந்திய மக்கள் கூட்டத்தின் பெயர்த் திரிபுகளைப் பார்ப்போம் 


ரபிதாஸ்  =  ரவிதாஸ் >  ரோகிதாஸ் 

இங்கு ப  > வ > க  என்று திரிந்தன.

தர்கர் >  தரிகர்   இங்கு இடையில் ஓர்  இகரம் ரகர ஒற்றின் மேல் ஏறியது.

ரோஹிது  ரோகிதாஸ் 

இங்கு து ஈற்றில்  ஆஸ் என்ற இறுதி வந்து மிகுந்தது.


பால்மிக்கி  >  வால்மிகி  ப > வ திரிபு.

வால்மீகி என்பவர்கள்  வேட்டுவச் சாதியினர்.  வால்மீக முனிவர் இந்தச் சாதியினர்.   இவர் பின் சில பிராமண[ப்  பின்வாரிகளை உருவாக்கினார் 
இவரே  முதல் முதல் இராமாயணம் பாடியவர் என்று கதைகளால் தெரிக்கிறது . 

இவரது சொந்தப் பெயர் "ரத்னாகர" என்று  கூறப்படுகிறது.  எனினும்  வால்மீகி என்ற  சாதிப்பெயராலேயே  அறியப்படுகிறார்.   இதை ஒருவாறு மறைத்து  தியானத்தில் இருந்தபோது புற்று வளர்ந்து இவரை மூடியபடியால்  இப்பெயர் ஏற்பட்டது  என்பது, மறுபொருள் உரைக்கும்  நன்முயற்சி  ஆகும். சில காட்டுவாசிகள்  ஈசல் உண்பவர்கள் என்று தெரிகிறது. இதை இப்போது விரித்துரைக்க வேண்டியதில்லை.  வால்மீகி  பெரும்புலவரும்  அறிஞரும் 
ஆவார் என்பது ஐயத்துக்குரியதன்று.

 ஆனால் இராமர் வாழ்ந்த காலமும்  வால்மீகி வாழ்ந்த காலமும் வெவ்வேறு  என்று  தோன்றுகிறது.   இராமர்  வால்மீகிக்கு 5 ஆயிரம்  ஆண்டுகள்  முற்பட்டவர் என்பர் .  இராமரைப் பற்றிய சிதறிய குறிப்புகள்  பல்வேறு  நாடுகளிலும்  கிடைத்துள்ளபடியால்  இவை நன்கு ஆராயப்படுதற்  குரியவை  ஆகும் .   வால்மீகிக்கு  முன் எழுந்த வேதங்களிலும் இராமரைப் பற்றிய குறிப்புகள்  கிட்டுகின்றன என்பர்/  ஆதலின்  வால்மீகி  இராமருடன் சம காலத்தவர்  என்பது  பின்னர்  வால்மிகியின்  நூலில் நிகழ்ந்த   இடைச்செருகள்களையே  தெரிவிக்கின்றன  எனின்  ஆய்விற்குரியதே.   முஸ்லிம்  நோன்பு மாதம்    ரமதான்   ( இராமதானம் ​    )    ரம்ஜான்  ( ராம ஜென்மம் ​)   என்பனவும்  ஆய்தற்குரியவை  என்பர்  ஆய்வாளர் சிலர்.  
  இவற்றை இப்போது  தொகுத்தளித்தற்கு    தருணம்  இல்லை