சனி, 7 நவம்பர், 2015

valmiki caste

சில வட இந்திய மக்கள் கூட்டத்தின் பெயர்த் திரிபுகளைப் பார்ப்போம் 


ரபிதாஸ்  =  ரவிதாஸ் >  ரோகிதாஸ் 

இங்கு ப  > வ > க  என்று திரிந்தன.

தர்கர் >  தரிகர்   இங்கு இடையில் ஓர்  இகரம் ரகர ஒற்றின் மேல் ஏறியது.

ரோஹிது  ரோகிதாஸ் 

இங்கு து ஈற்றில்  ஆஸ் என்ற இறுதி வந்து மிகுந்தது.


பால்மிக்கி  >  வால்மிகி  ப > வ திரிபு.

வால்மீகி என்பவர்கள்  வேட்டுவச் சாதியினர்.  வால்மீக முனிவர் இந்தச் சாதியினர்.   இவர் பின் சில பிராமண[ப்  பின்வாரிகளை உருவாக்கினார் 
இவரே  முதல் முதல் இராமாயணம் பாடியவர் என்று கதைகளால் தெரிக்கிறது . 

இவரது சொந்தப் பெயர் "ரத்னாகர" என்று  கூறப்படுகிறது.  எனினும்  வால்மீகி என்ற  சாதிப்பெயராலேயே  அறியப்படுகிறார்.   இதை ஒருவாறு மறைத்து  தியானத்தில் இருந்தபோது புற்று வளர்ந்து இவரை மூடியபடியால்  இப்பெயர் ஏற்பட்டது  என்பது, மறுபொருள் உரைக்கும்  நன்முயற்சி  ஆகும். சில காட்டுவாசிகள்  ஈசல் உண்பவர்கள் என்று தெரிகிறது. இதை இப்போது விரித்துரைக்க வேண்டியதில்லை.  வால்மீகி  பெரும்புலவரும்  அறிஞரும் 
ஆவார் என்பது ஐயத்துக்குரியதன்று.

 ஆனால் இராமர் வாழ்ந்த காலமும்  வால்மீகி வாழ்ந்த காலமும் வெவ்வேறு  என்று  தோன்றுகிறது.   இராமர்  வால்மீகிக்கு 5 ஆயிரம்  ஆண்டுகள்  முற்பட்டவர் என்பர் .  இராமரைப் பற்றிய சிதறிய குறிப்புகள்  பல்வேறு  நாடுகளிலும்  கிடைத்துள்ளபடியால்  இவை நன்கு ஆராயப்படுதற்  குரியவை  ஆகும் .   வால்மீகிக்கு  முன் எழுந்த வேதங்களிலும் இராமரைப் பற்றிய குறிப்புகள்  கிட்டுகின்றன என்பர்/  ஆதலின்  வால்மீகி  இராமருடன் சம காலத்தவர்  என்பது  பின்னர்  வால்மிகியின்  நூலில் நிகழ்ந்த   இடைச்செருகள்களையே  தெரிவிக்கின்றன  எனின்  ஆய்விற்குரியதே.   முஸ்லிம்  நோன்பு மாதம்    ரமதான்   ( இராமதானம் ​    )    ரம்ஜான்  ( ராம ஜென்மம் ​)   என்பனவும்  ஆய்தற்குரியவை  என்பர்  ஆய்வாளர் சிலர்.  
  இவற்றை இப்போது  தொகுத்தளித்தற்கு    தருணம்  இல்லை   
  






வியாழன், 5 நவம்பர், 2015

வாசித்தல் படித்தல்

 இவ்விரண்டு சொற்களும்  ஏறத்தாழ  ஒரே பொருளுடையவை .

வாசித்தல் என்ற சொல்லைப் பார்ப்போம்.

இச்சொல்  வாயி என்றே மலையாள மொழியில் வருகிறது.  அதாவது எழுத்தில் இருப்பதை வாயினால்  வெளிப்படுத்துதல் என்று பொருள்.

வாய் >  வாயி  >  வாயித்தல் >  வாசித்தல்.

யகரம்  சகரமாக மாறும் என்பதை   முன்னரே பல இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

எ-டு:  வாயில்  >  வாசல்.
            நேயம்  >  நேசம்    
             தோயை > தோசை .  ( நீரில் தோய்த்து  அரைத்துச் செய்த  சிற்றுணவு,)                   தோயல். 
             தேஎம்>  தேயம் >  தேசம். ( தேஎம்  என்பது  பழந்தமிழ் )                 
            ஒயனை  >  ஒசனை  
( ஓய்தல் >(ஆய்ந்து ஓய்ந்து பார்த்தல் )  >  ஒயனை  >  ஆல் + ஓசனை =  ஆலோசனை : ஆலமரத்தடியில்  சிந்தித்தல் . இதில்  அகல்>  ஆல்  ஆகி  அகலச் சிந்தித்தல் எனினும் ஆகும். )

            ஒயனை >  ஓசனை    இதுபின் யோசனை ஆயிற்று.
             ஆனை  >  யானை;     ஆண்டு >  யாண்டு.   இவை  கண்டு  இத்திரிபு                  உணர்ந்து கொள்க.
             காயல் > ( காசல்) >  காசம் .   இருமல், காய்ச்சல்  முதல் பல அறிகுறிகள் காட்டும்  என்புருக்கி  நோய்.  காச நோய். காயல் + நோய் =  காயனோய் > காச நோய் <  காசம் + நோய்  என்ற பிறழ் பிரிப்பு ,  காசம் என்ற சொல்லை  ஈன்றது .   

படித்தல் என்பது  நூலில் உள்ளபடியே  கற்று அல்லது வாசித்து அறிதல்.  படியே உணர்தல் அறிதல் அல்லது ஓசை செய்தல்  படித்தல் என்க,

படி + அம்  =  பாடம் ;  முதனிலை நீண்டு  அம்  விகுதி பெற்ற தொழிற்பெயர். இதில் படி என்பதிலுள்ள இகரம் குன்றியது ,  நடி + அகம் =  நாடகம்  என்பதிலும் 
இகரம் குன்றி முதனிலை நீண்டு விகுதி பெற்றது.   இப்படிப்  பல உள,


----------------------------------------------------------------------------------------

ஆம் >  ஓம் ,  அம்மை > உம்மை;  அம்மா> உம்மா > உமா  முதலிய திரிபுகளை 
மறத்தலாகாது.  ஆமை  >  ஏமை > ஓமை ;   ஓம்  அடிச்சொல் : ஓமை;  ஓம்பு. 
ஏமை also connected to  ஏமம்.   ஓமம்  a medicinal seed that protects you.  Notice the central concept of protection. Will explain when opportunity arises.  

புதன், 4 நவம்பர், 2015

இலஞ்சம்

தெலுங்கிலும் கன்னட மொழியிலும்  லஞ்சம் என்றசொல்லே  வழங்குகிறது.மலையாளத்தில் மட்டும்  கையூட்டு என்ற நல்ல தமிழ்ச்சொல்  பயில்கின்றது.
சட்டைக் கையால் கொடுத்தல் என்று ஜப்பானிய 
 மொழியிலும் எண்ணணெய்  இடுதல் என்று  கிரேக்க மொழியிலும் சொல்வார்கள் என்று தெரிகிறது. மாமூல் என்று கூறுவதுண்டு ஆனால் இது தமிழன்று.  உருது என்பர், தமிழிலும்  லஞ்சம் என்ற சொல் வழக்கு உள்ளது.

குற்றத்திற்காகப் பிடிபட்ட ஒருவனோ  அல்லது ஒரு காரியம் ஆகவேண்டி மிகவும் ஆழ்ந்து விரும்புகிறவனோ இரப்பது போல் வேண்டிக்கொண்டு அதற்கு ஏதேனும்  ஊக்கத்தொகை தருவதே லஞ்சம் என்னலாம்,

இரந்து :  இலஞ்சு  என்று வரும்
குறைந்து ;  குறஞ்சு.   நிறைந்து >  நிறைஞ்சு  என்றெல்லாம் வருகின்றன அல்லவா?  ரகர லகரப் பரிமாற்றம் பல மொழிகளில் காணப்படுகிறது,

இறைஞ்சுதலும் இரந்து வேண்டிக்கொள்ளுதல் போன்றதே

ஆகவே இலஞ்சு  > இலஞ்சம் என்று அமைந்துள்ளது.

வேதங்களில் இச்சொல் இல்லை. லஞ்ச வழக்கம் பிற்காலத்தது என்று தெரிகிறது.  சங்க நூல்களிலும் இல்லை

=========================================================================
లంచం    lanjam telugu
ಲಂಚ      lancha kannada''

also in Skrt

kimpaLam  in Tamil colloquial...