செவ்வாய், 27 அக்டோபர், 2015

சில முடிவுக் கருத்துச் சொற்கள்.

சில முடிவுக் கருத்துச் சொற்களை  கண்டு இன்புறுவோம்.

நீங்கள் இருக்கின்ற அல்லது உள்ள இடத்தைச் சுட்டும்போது " இங்கு"  என்கிறீர்கள்.  இதில்  "இ " என்பதே  சொல்.  "கு"  என்று இறுதியில் நின்றது வெறும் சொல்லீறு அல்லது விகுதி.  கு என்பது பல சொற்களில் பலவாறு வரும்.  மூழ்கு என்றும்    குறுகு  என்றும் (வினைச்சொல்  அமைதலிலும் )  அதற்கு  இதற்கு என்றும் (வேற்றுமைப் பொருளிலும் )  வரும்.  கு  என்பது  மலாய் மொழிக்குள் ஏகி  "க"  என்று உருமாறி  ke - Kuala Lumpur,  ke- Singapura என்றும் வரும் .  அது   "கி "  என்று மாறி  ராமனிகி  ஜெய்  என்பதிலும் வரும்.

மீண்டும் " இ" என்ற முன்னிலைச் சுட்டுக்கு வருவோம். இதுவும் பல மொழிகளில் தொண்டு செய்கிறது.  ஹியர் என்ற ஆங்கிலச் சொல்லில்  ஹ்+இ+அர்  என்பதில்  இ இருக்கிறது.  இ என்பதே  சுட்டு.  மற்றபடி  ஹ் என்பதும்  அர் என்பனவும்  வளரொலிகள்.ஒருவகைச் சொற்சாயங்கள். மலாய் மொழியிலும்  ஸினி என்பதில்  ஸியில்  (ஸ்+இ)  இ  என்னும் சுட்டு உள்ளது; சீன மொழியிலும்  சித்தாவ் என்ற சொல்லில் ச்+ இ என்று  இ என்னும் சுட்டு உள்ளது.  இட் எஸ்ட் என்ற இலத்தீன் தொடரில்  இட் என்பதில் இகரச் சுட்டு உள்ளது. உங்களுக்குத் தெரிந்த மொழிகளில் நீங்கள் தேடிக் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.

சில மொழிகளில் அது என்று படர்க்கை  வரவேண்டிய இடத்தில்  இது  என்று முன்னிலை வந்தால் அது அம்மொழி மரபு.  இத்து என்று மலாயில் வந்தால்  இது அதுவாகிவந்த இடப்பிறழ்ச்சியாகும்.

இங்கு என்பது முடிந்துவிட்டால் அங்குஎன்பது தொடங்கிவிடுகிறது. அதாவது இங்கு -வின்  இறுதி.   இதன்காரணமாக,   அ, அன், அங்  என்பன இறுதிப் பொருளை அடைகின்றன 

எடுத்துக்காட்டு:

அன்று  (  இன்று என்பதன் முடிவு).
அங்கு (  இங்கு என்பதன் முடிவு).

ஆகவே;   அன் என்றால் முடிவு,இறுதி என்று பொருள்.

அல் என்பதிலும் இதே கருத்து மிளிர்கிறது.

இல் ( இங்கு,ஆகவே உங்கள் வீடு);  அது முடிந்த இடம்:  அல்லது நிலைதான் அல். அல்லாதது.

அ> அல்> அன்>,அங்

அன் >  அன்று.  (இன்று முடிந்தது)
அன்று >  அன்றுதல் :   முடிதல்.  ( அன்+ து)
அன் து >   அந்து:  துணி முதலிய கடித்து இறுதியாக்கும் ஒரு பூச்சி/
அன் து >  அந்து >  அந்தம்: முடிவு.

து என்பது ஒரு சொல்லீறு.   முன் து > முந்து.  பின் து > பிந்து என்பன காண்க .  பல வுள.

cf  the English word "end"  with the root  அன் .
Malayalam:  இன்னல  (இன்னு  அல்ல )  ஆகவே நேற்று,  Notice word  அல்  > அல அல 


will edit

ஆதியந்தம்

இறை என்ற அடிச்சொல், இறைவன்,இறைவி, இறையன், இறையனார் என்ற வடிவங்களைப்  பிறப்பித்துள்ளது. இவை தாயும் பிள்ளைகளும் போலவே உள்ளன.

இறை என்பதற்கும் ஓர் அடிச்சொல் இருக்கிறது.  அது இறு என்பது. இதன்பொருள்  பொருள் என்ன?  இது பல்பொருளொரு சொல், பல பொருளுள்ளது. பல சொற்களையும் பிறப்பித்துள்ளது.

அவற்றுள் ஒன்றிரண்டையே இங்கு பேசுவோம்.

இறுதல் = முடிதல். இதிலிருந்து முடிதல் என்ற பொருள் உள்ள இறுதி என்ற சொல்லும் பிறக்கிறது.  இறுதிச்சுற்று,  இறுதி நபி,  இறுதியாய்விடுதல் என்று  முன் நீங்கள்  சொல்லாட்சியை எதிர்கொண்டிருக்கலாம்.

இறுத்தல்-  வரி முதலியன செலுத்துதல்.  இதிலிருந்து இறை = வரி என்ற பொருள்தரு வடிவமும் கிடைக்கின்றது.

இறு, இறை, இறைவன் :    இங்கு கண்ட பொருட்சாயல்களால்,  இறைவன் என்ற சொல்லையும் அறிஞர் பல்வேறு  கோணங்களிலிருந்து விளக்கினாலும்,  அவ்விளக்கங்கள் பிழைபடமாட்டா.

இறைவன்:  கடவுள் என்றும்  மன்னன் என்றும்  இடம்  நோக்கிப் பொருள்கொள்ளவேண்டும்.

கடவுள் என்ற பொருளில்  எல்லாவற்றுக்கும் இறுதி அவன் , ஆகவே இறைவன் என்று கொள்ள, சொல்லில் வசதி உள்ளது.

அந்தம் என்பது இறுதி குறிக்கிறது.

அவன் ஒருவனே இறுதியில் இருப்பவன்; இறுதியாகவும் இருப்பவன். இறுதியை  உண்டாக்குகிறவன்.  இங்ஙனம்  எண்ணங்களை விரித்துப் பொருளையும் விரிக்கலாம்.

ஆதியிலும் அவனே இருந்தான். அவன்முன் யாருமில்லை. எதுவுமில்லை. உலகம் ஆதல் பொழுதில் இருந்தமையினால் அவன் ஆதி ஆகிறான்.  உலகம் தொடங்கியதால், அது தொடங்கிய பொழுது அல்லது காலம்,   ஆதி ஆகிறது. பொழுது=  சிறியது. காலம்- நீண்டது. இவை சொற்பொருள்கள்.

எனவே, மெய்யறிஞர்கட்கு   (religious  philosophers) ,  ஆதியுமவன்; அந்தமும் அவன்.

சிவஞான ;போதம் என்ற நூல், அவனை ஆதியந்தம் என்றே குறிக்கிறது.

ஆதி, அந்தம் என்பன காலப்பெயர்கள்.   இவற்றை ஒன்றாகவோ சேர்த்தோ கடவுள் என்ற பொருளில் வழங்கினால், இலக்கணப்படி அது கால ஆகு பெயர் ஆகிறது.

சிவஞான போதப் பாடலை இங்கு காணலாம்:

http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html

திங்கள், 26 அக்டோபர், 2015

அவன் அவள் அது

செகம் என்ற சொல்லை ஆய்ந்த போது http://sivamaalaa.blogspot.sg/2015/10/etc.html
நாம் உலகம் அழிதலையும் மீண்டும் ஆவதையும் உடையது என்ற கருத்தினடிப்படையில்  அச்சொல்  உருவானது என்று கண்டோம். ஜகம் என்ற ஒலியொப்புமை உடைய சொல்லையும் உடன் கண்டு அதன் வேறு அடிச்சொல்லையும் கண்டுகொண்டோம்.

உலகம் அழிதலும் ஆவதும் உடையதென்பதற்குச் சிவஞான போதத்திலிருந்து  ஓர்  ஆதாரத்தை இப்போது பார்ப்போம்;

அவன் அவள் அது எனும் அவைமூ வினைமையின்
தோன்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதா(கு)ம்;
அந்தம் ஆதி என்மனார் புலவர்.       (1)

இதன் பொருள்:

அவன் அவள் =  ஆடவர் பெண்டிர் என்பாரும்,
அது =  ஏனை உயிர் உடையனவும் இல்லாதனவும் ஆகிய பொருள்களும்,
மூ வினைமையின் =  படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் இறைவனின் செய்கைகளின் பயனாக;
தோன்றிய திதியே =  உருவான  அந்த நிலையே;
ஒடுங்கி -   பின் அழிவு அடைந்து,
மலத்து  =  -  கரும வினையின் காரணமாக;
உளது =  மீண்டும் தோன்றுவது;
ஆகும்= இதுவே  நடக்கிறது;
அந்தம் ஆதி =  முடிவிலும் முதலிலும் ( உள்ளவன்  இறைவன்,  அவனால்தான்.)

இனி,  வினைமை, திதி, ஒடுங்குதல் ஆகியவற்றை அடுத்த இடுகையில் கவனிப்போம்.