வியாழன், 4 செப்டம்பர், 2014

வீதியிலே நடக்கின்ற வேளை...

வீதியிலே நடக்கின்ற வேளை பார்த்து
விதிமுடிய நேர்ந்ததெனப் பேசும் வண்ணம்
சூதறியா நேரியர்கள் தம்மைக் கொல்லும்
சுடர்விளக்கின் உந்துகட்கோர் கட்டு வைக்கும்
தீதிலதாம் நெறியொன்றே இந் நாள் காறும்
தெரிந்தபெரு மனிதர்களும் கண்டார் இல்லை!
யாதுவழி உயிரிழப்பு குன்றச் செய்ய?
யாமறியோம் தேமருவும் மேலாம் வாழ்வில்.  

புதன், 3 செப்டம்பர், 2014

உளுந்தே இல்லாத தோசைபோட்டு

உளுந்தே இல்லாத தோசைபோட்டு
ஒருபயனும் இல்லாமல் விறகேபோல‌
விழுந்தே உண்கின்றார் வேலைபார்ப்போர்
வேறுவழி இல்லாமல் ஐயோபாவம்!

அரிசிமாவில் ஆட்டாவைக் கலந்துவிட்டார்.
அடிப்பிடிக்க மாட்டாதாம் அடித்துச்சொல்வார்.
வரிசையிலே நிற்கின்றார் அதனையுண்ண!
வந்த நாட்டில் தாயில்லை அதனாலன்றோ!

கட்டியான இட்டிலியோ கண்ணராவி
கருகிவீசும் பழஞ்சாம்பார் என்னசெய்ய!
விட்டகன்று நல்லுணவு தேடியுண்டால்
விதவிதமாய் நோய்களுமே வாராதையா.

தொண்டை மண்டலம்


தொண்டை என்பது பல்பொருளொரு சொல். தொண்டைமான் என்பது ஒர் அரசனின்  பட்டப்பெயர். அவன் ஆண்ட மண்டலம் தொண்டை மண்டலம் என்றும் தொண்டை நாடு என்றும் பெயர் பெற்றது.

நாம் ஆய்வதற்குரியது "தொண்டை" என்னும் சொல்.  "அன்பில் நாடு ஒன்பது குப்பம்" என்று ஒரு தொடர் வழங்கி வருவதாலும், இதுவும் தொண்டைமான் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாதலாலும், ஒன்பது என்று பொருள்படும் "தொண்டு" என்ற பழந்தமிழ்ச் சொல்லிலிருந்து "தொண்டை" என்ற நாடு குறிக்கும் சொல் தோன்றியிருத்தல் கூடும்.

தொள்> தொள்+து > தொண்டு.
தொள் > தொள்ளாயிரம்.
தொள் > தொள்+  நூறு = தொண்ணூறு.
தொள்+பது > தொண்பது > ஒன்பது. (இது தொண்டு என்ற பழஞ்சொல் வழக்கிறந்ததனால் அதற்குப் பதிலாக முளைத்த திரிபு).
தொண்டு (மேல் காண்க) > தொண்டை.

அன்பில் நாடு : இது அம்பு நாடு, அன்பு நாடு என்றும் வழங்கும்

அழும்பு  >  அழும்பில்  (அழும்பு +இல் ).   எதிர்ப்பு  கிளர்ச்சி  முதலிய இல்லாத  எனினுமாம்..    அழும்பில் > அம்பில் > அன்பில்.
அழும்பு+ இல்  =  வேந்தனுடன் ஒத்துப்போகும்  ஆட்சியாளர் என்றும் ஆகும்.

azumpu-tal to be intimate, in communion.
 (