சனி, 19 ஜூலை, 2014

பணம்பண்ணும் வித்தை

பணம்பண்ணும் வித்தைபுகழ்  பரப்பி விட்டோன் 
பண்பு நலம்  என்பதிலோ     பாதா   ளத்தில்  
குணம் என்னும்  குன்றுண்டு தொலைவில்!  இன்றோ 
கூவுவன எல்லாமும் இசைப்ப தில்லை.

வெள்ளி, 18 ஜூலை, 2014

The Sivan at Kedar Nath

ஆதி சங்கரர் அமைகல் உடையது
கெடார் நாதநகர்

ஓதி எங்க‌ணும் பரந்த ஒளிச்சிவம்
விடார் மூதறிஞர்;

யாது பொங்கிமந் தாகினிப் புனல்கரை
அடாக் கீழுதலால்

மோதிச் சாய்கவே முனைந்தே  அரன்அடி
தொடார் அமைந்திலரே.

=================================================================

குறிப்புகள்:

அமை கல்  =  ஆதி சங்கரப் பெருமானின் ஆவி/ உடல் உள்ளமைந்த கல், நினைவுக் கட்டடம்;

கெடார் நாத நகர் = கெடார் நாத் கோயில் உள்ள இடம். நகர் என்றது உயர்வு நவிற்சி;

எங்கணும் பரந்த ஒளிச் சிவம் = எங்கும் உள்ள ஒளியாகிய சிவம்;

ஓதி .... விடார் = வழிபடுதல் விடமாட்டார் அறிந்தோர்;

யாது பொங்கி ‍==  எது எது பொங்கினாலும், பனி, மழை, வெள்ளம், என எது மிகுந்தாலும்;

மந்தாகினி ஆற்றின் கரை,

புனல் அடாக் கீழுதலால் = வெள்ளம்  கொடிய ஆற்று உடைப்பால்;

கரை மோதிச் சாய்க ‍-- கரையே மட்டமாகிவிட்டாலும்;

பற்றாளர் அடி தொடாமல் அமைந்திலர் ‍---- பற்றர் அவனடி வணங்காமல் இரார் என்பது

தாதிமார்

தாதி என்னும் சொல் தாளிகைகளில் வருவதுதான்.  இது தமிழா என்போரும் உண்டு.

நல்ல தமிழே. இதன் அடிச்சொல் "தாய்" என்ற  கவின் சொல்.   கவின் -  that which attracts or charms you!!  I will explain this later in another post.

சொல்லின் நடுவில் ஒரு யகர ஒற்று வந்தால், பெரும்பாலும் அது மறைந்து சொல் சற்றே உருமாறும். முதலெழுத்து குறிலாயினும்  நெடிலாயினும் இது நடைபெறும்.

எடுத்துக்காட்டு:

செய்தி  >  சேதி   (யகர மெய் மறைவு; முதலெழுத்து நீட்சி )
வேய்ந்தோன் >   வேந்தன் .  (யகர மெய் மறைவு .  ஒன்  விகுதிக்குப் பதில் அன் , இரண்டும் இணையானவை)
வேய்வு  >  வேவு .(யகர மெய் மறைவு.)
உய்த்தி  > உத்தி.  உய்த்துணர்கை

வேய்தல் என்றால் மேலே இட்டுக்கொள்ளுதல் , அணிதல்,  வேடம்  அல்லது மாறுவேடம் போட்டுக்கொள்ளுதல் ,  கூரை வேய்தல் )

மறைமலை அடிகள் தந்த எடுத்துக்காட்டு:

வேய் >  வேய் + து  + அம் =  வேய்தம் >  வேதம்.  (யகர மெய் மறைவு)

This is therefore well established pattern that is a rule in word formation.

தாய்  >  தாய்தி  > தாதி.

தாதி ,  தாதிமை .  தாதியர்,  தாதிமார்.

தாய்போல் கவனிப்போர் என்பது சொல்லமைப்புப் பொருள்.

It is perfectly  OK to represent this word formation as:

தாய் >  தா (கடைக்குறை ) >  தா+தி ( தி விகுதி) > தாதி.