வெள்ளி, 18 ஜூலை, 2014

மலேசிய வானூர்தி சுடப்பட்டது



விடுதலைக்குப் போராட்டம் நடத்தும் போதும்

வீணாகத் தொடர்பில்லா வழிச்செல் வோரைச்
சுடுகலைஞர் படைகொண்டு சுட்டுத் தள்ளிச் ,
சூழுலகில் மன்பதையும் பதைக்க உள்ளம்
படுகொலைகள் செய்வதுவும் பண்பு தானோ
பறக்கின்ற வானூர்தி தன்னில் யாரும்
இடுவலைக்குள் உற்றதுபோல் இறப்போம் என்றே 
எண்ணியதும் இல்லைதுயர் எழுந்த தன்றே.

நம் இரங்கல்.



பொருள்:
சுடுகலைஞர் --  சுடுவதில் வல்லவர்கள்;   படை -  எறிபடை   (இலக்கணத்தில் இப்படி வருவதை முதற்குறை  என்ப .)  It  is safe in grammar to leave out the first syllable," எறி ."  To shoot an airplane, a long range shooting weapon is obviously required.  சூழுலகில் -  பன்னாடுகளால்  சூழப்பட்ட இவ்வுலகில்;  மன்பதை -  International Community;  (since we are talking about  the world).  இடுவலைக்குள் உற்றது - This shoot occurred in a trapped situation ; the operator of the plane did not expect;  passengers could never  escape; there is no alternative except to perish. The plane was within their "net"  so to speak.  





http://www.thestar.com.my/News/Nation/2014/07/18/mh17-pilots-warned-of-ukraine-russia



MH17 crash: Pilots warned about Ukraine airspace dangers

  
WASHINGTON (Reuters): Aviation safety authorities in the United States and Europe warned pilots in April about potential risks flying in or near Ukraine airspace, where a Malaysian Airlines passenger airliner went down on Thursday.

The US Federal Aviation Administration on April 23 issued a "special notice" regarding Ukrainian airspace to US aviators and air carriers advising them not to fly in airspace around the Crimean city of Simferopol without special approval of the US government.

The notice also warned US operators and pilots flying in other parts of Ukraine, including Kiev, Lvov, Dnepropetrovsk and Odessa, to "exercise extreme caution due to the continuing potential for instability."

The warning remains in effect until April 23, 2015.

International aviation agencies in April also had warned pilots and airlines to avoid the airspace around Simferopol.

Agencies including the European Aviation Safety Agency and ICAO, a United Nations civil aviation agency, warned that airlines faced "serious risks" in the area and advised airlines to take alternate routes.

/

ஆதாயம்.



தாயம் என்ற சொல்லுக்கு பன்னிரண்டுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. இப்போது ஆதாயம் என்ற சொல்லைக் கவனிப்போம்

இதைப் பிரித்தால், ஆ+தாயம் என்று வரும்.

ஆ = ஆகும் வழி.  ஆதல். நடைபெறுதல். ஆவதென்பது வரவு, போவதென்பது செலவு என்பதும் கொள்க.

தாயம்  ‍ :  தா + அம் ,இவற்றில்  தா :  தருதல். அம் : விகுதி.

பொருள் இலாப மாகின்ற வழி, அதாவது  இலாபம்.  பொருள் ஆக்கம், தன வரவு.

யகரம் ‍ உடம்படு மெய் எனப்படும். சொற்புணர்ச்சிக்கு உதவுவது.

அழகாக அமைந்த  சொல்.




காதல் வேறு, மரியாதை வேறு.

அள்ளூர் நல்முல்லையாரின் இனிய எளிய தமிழால் யாக்கப் பெற்ற சில வரிகளைக் குறுந்தொகை என்னும் சங்கத் தொகை நூலிலிருந்து பாடி மகிழ்வோம்.
அப்பாடல் இது:

நன்னலம் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல்;   அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவி அஃது எவனோ அன்பு இலங் கடையே.   63

நன்னலம் தொலைய ‍‍‍=  நமது நாணம் கெடும்படியாக,  நலம் மிகச் சாஅய் = நமது  (இங்கு தலைவியின் ) அழகும் கவர்ச்சியும் பெரிதும் கெட்டுப்பபோய்; இன்னுயிர் கழியினும் =  இனிய உயிர்  பிரிந்தாலும்;  உரையல் = சொல்லாதே;
அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி =   காதலர் நமக்கு  தாயும் தந்தையும் போன்றவர் என்பதை ஒத்துக்கொள்வோம்  தோழியே; அதற்காக, புலவி அஃது  =  நான் அவருடன் ஊடியிருக்கின்றேன் என்பது;
 எவனோ = எதற்காகப்  பேசவேண்டும்;  அன்பு இலங்  கடையே ‍= அன்பு இல்லாதவரிடத்திலே.

அதாவது:  அவர் நமக்கு (குடும்பத்துக்கு)  அன்னையும் அப்பனும்போல் பக்கத் துணையாய் இருக்கிறார். என்றாலும், என்னை நீங்கி வேறு பெண்ணை நாடிவிட்டார். அன்பு இல்லாமல் போய் விட்டது; அவரால் என் அழகும் உடல் நலமும் ஒழிந்தது. இப்போது வெட்கம் கெட்டதனமாக, நீ ஏன் நான் கோபித்துக்கொண்டிருக்கிறேன்  என்று போய்ச் சொல்லவேண்டும். அன்பு போனபின், கோபம் ஒரு பொருட்டா? பயனில்லை; தோழி, அவரிடம்
அப்படிப் பேசுதல் தவிர்ப்பாய்.

இதுதான் இப்பாடலில் தோழிக்குத் தலைவி சொல்வது.

அந்த வேறொரு பெண் பரத்தை போலும்.

அன்னையும் அப்பனும் போன்றவர் என்றால், அதற்குள்ள பணிவன்புடன் நடந்துகொள்வோம். வழிபடுவோம்!  அன்பு இல்லாதவர், அவரிடம் தணிவு செய்துகொண்டு பழைய காதலுறவைப் புதுப்பிக்க வேண்டியதில்லை.  காதல் வேறு,  மரியாதை வேறு. என்கிறாள் தலைவி.

அருமையான கருத்து.

குறளும் இதையே கூறும்.

காதல் ஒழியினும் ஓர்  ஆடவனுக்குப் பெண் காட்டும் பணிவு தொடரும்.  தலைவி  அறிவுடையவள்.