வெள்ளி, 11 ஜூலை, 2014

காதற் கனவு

யாரேனும் வேண்டியவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால் அப்போதுதான் நம் சமையல் திறனை வெளிப்படுத்திக்கொள்ள ஓர் அரிய வாய்ப்புக் கிட்டியது என்று சொல்லலாம். சுவையாக ஆக்கிப் பரிமாறி இன்புறலாம்.

வந்தது நல்ல கனாவாக இருந்தாலும் இதே முறையைப் பின்பற்றலாம். நம் இதயத்துக்கு கனியைப் படைத்து மகிழலாம்.  கொஞ்சம் பைத்தியம் வந்துவிட்டால் வாழ்வே சுவையாக மாறிவிடுகிறது.

தெய்வப் புலமைத்  திருவள்ளுவ நாயனாருக்கும் இத்தகு விருந்துகள் இயல்பானவையாகவே தோன்றியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பாட்டுடைத் தலைவி, தான் கண்ட இன்பக் கனாவுக்கு விருந்து வைக்க முற்படுதல்  கூடுமோ?

கனவில் காதலன் தூது விடுகின்றான். விழித்து எழுந்தவள், தனியே மஞ்சத்தில் இனிய கனவினால் உறக்கம் கலைக்கப்பெற்று, அதனை எண்ணி, இதற்கு என்ன விருந்து வைப்பேனோ வென்று சிந்தனைச் சுழலில் சிக்கிக்கொள்கிறாள். அதுதான் உண்மைக் காதலும் வள்ளுவனார் தந்த இலக்கியக் காதலும் ஆகும்.
அதை இப்போது கண்டு மகிழ்வோம்,

காதலர் தூதொடு  வந்த கனவினுக்கு
யாது  செய்வேன்கொல் விருந்து.

ஈராயிரம் ஆண்டுகட்கு முன் பாடப்பெற்ற பாடல், உரை தேவையில்லாத அளவுக்கு இன்னும் தெளி நீராய் உள்ளது.

காதற் கனவு

-----------------------------------------

நல்ல கனவுக்கு விருந்து வைக்கவேண்டும்.

(இதை நான் வெண்பா அசைசீர் பிரித்து எழுதவில்லை. வேண்டின் நீங்களே வகையுளி செய்துகொள்ளுங்கள்.  குற்றிகர இலக்கணம் இப்போது வேண்டாம்

வியாழன், 10 ஜூலை, 2014

Our yesterdays Shakespeare translation. from Macbeth.

WILLIAM SHAKESPEARE (Macbeth V.v.)

மொழி பெயர்ப்பு :

(  இணைக் குறள் ஆசிரியப்பா )

நம் நெருந‌ல்கள் யாவும்
தீவட்டி  வெளிச்சத்தில் தெரியும்
கோமாளி மூடர் தம்மைக் கொண்டவை.
புழுதி மூடிய சாவுக்கு வழியே.
மெழுகுக் குறுந்திரியே! அணைந்திடு!
நிழல் நட  மாட்டமே வாழ்வு!
நிமிர்ந்தும் குனிந்தும் திரும்பியும் இசையோடு
இயைந்தும் தன்மணிக்கூ றொழித்துத்தொலையும்
நிலையா ஆடகத் தரமில் பாடகன்!
முட்டாள் வாயிற் கொட்டுபொய்ச் செல்கதை.
ஆங்காரம் ஓசை கூடினும்,
அவையே குறித்தவை அனைத்தும் வெறுமையே.

 நெருநல்கள்   yesterdays
புழுதி மூடிய -  dusty,
மெழுகுக் குறுந்திரி   brief candle
மணிக்கூறு  =  hour
ஆடகம் -  stage
செல்கதை  -  tale;

வசந்தம்

இது வயப்படுத்துவதை உடைய அழகு,/ காலம் என்று பொருள்படும்.

ஒன்றை வயப்  படுத்துவதாவது, தன்பக்கம் ஒன்றை ஈர்த்துக் கொள்ளுவது . அப்படி ஈர்த்துக்கொண்ட பொருளைத் தன்பால் வைத்துக்கொள்வது.

இதன் அடிச் சொல் வை என்பதுதான்.

வை>  வய் >  வயம் .

ஒப்பீடு:

பை  > பய்  >  பயல் .
பை  > பையன்.

இத்  திரிபுகள் முன் விளக்கப்   பட்டன.  Pl see தைவருதல், தை மாதம் etc.

வயம்  > வசம் > வசம் +தம்  >  வசந்தம் . (ய>ச  common change).

தம் - விகுதி.   "தம் வசம் " என வாக்கியப் படுத்துதலுமாம்.

வயந்தமாலை என்பது மணிமேகலைக் காப்பியத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர்.

(இதை முன் ஒரு இணைய தளத்தில் எழுதியுள்ளேம்.)