வியாழன், 26 ஜூன், 2014

திறந்திடலாம் அந்த நாட்டில்

குழும்புகளைத் திறந்திடலாம் அந்த நாட்டில்,
கோணலாகி வீழ்ந்துவிட்டால்  அடைக்க லாமோ?
குறும்புமிகு சிலவிதிகள் கூடிப் போக‌
குத்திவீழ்ந்த வணிகருக்குத் தொல்லை தொல்லை!
வரம்புகளே அதிகமையா அங்கு  போனால்
வழியொன்றும் கிட்டாது குழிக்குள் மாட்டி
திரும்புவது யாங்ஙனமோ திகைத்து நிற்பீர்
தீரஎண்ணிச் செயல்படுவீர் நலமே கொள்வீர்.


குழும்பு = கம்பெனி.

ஏதேனும் தொழிலொன்று செய்தல் எண்ணி,
இனிதான இடமென்றும் மனத்தில் எண்ணி,
காதினிலே நல்லோரும் சொன்னார் மீறிக்
கடைமுனையின் தீவினைநீர் விரைந்து  நண்ணி
யாதெனவே ஆயாது குழும்பு கொண்டீர்
பாதியிலே நட்டமெனின் யாது செய்வீர்?
ஓதினரே ஆய்ந்தியல்வீர் உண்மை காண்பீர்
ஆய்வதற்கு நிகரில்லை அறிந்து கொள்வீர்.

கலை­­­­­­­ம­­­­­­­கள் என்று அழைக்­­­­­­­கப்­­­­­­­படும் திருமதி சாவோ ஜியாங்


உலகின் அருமை­யான மொழி யான தமிழ்மொழியின் பயன் பாட்டை புதிய

 முயற்சிகளைத் தீவிரமாக தொடரப்போவதாக சீன அனைத்­­­­­­­து­­­­­­­லக வானொலி

 தலை­­­­­­­வி திருமதி சாவோ ஜியாங் சூளுரைத்து இருக்கிறார்.


கலை­­­­­­­ம­­­­­­­கள் என்று அழைக்­­­­­­­கப்­­­­­­­படும் திருமதி சாவோ, நேற்று தொடங்கிய

 சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டில் ‘எல்லை­­­­­­­கள் கடந்த தமிழ் இதயம்’
என்ற தலைப்பில்  (தமிழில் )   உரையாற்றினார். சீனத் தகவல் தொடர்பு பல்­கலைக்­க­ழ­கத்­தில் 1995ஆம் ஆண்டில் தமிழ்மொழியைப்  பயிலத் தொடங்­கி­ய­தாகத் தெரிவித்த கலைமகள், அப்போது தமிழ் மொழியில் தமக்கு அதிக
நாட்டம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

“தொடக்கத்தில் தமி­ழி­லுள்ள ழ,ள,ல போன்ற எழுத்­துக்­களை உச்­ச­ரிப்பது சிரமமாக இருந்தது.  தமிழில் எழுத்­துக்­களின் மொத்த எண்­ணிக்கையைப் பார்த்து தயக்­க­மும் ஏற்பட்டது"

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்.  23.6.14

சிங்கப்பூர் தமிழ் முரசு  நன்றி

http://tamilmurasu.com.sg/story/38949

திங்கள், 23 ஜூன், 2014

Rushing for food in temple events

பூசைகளில்  அவிசேகம் ஆராதனை === அங்கு
புகுந்துசோ றுண்டாலும் புண்யம்  கிட்டும்! ‍‍‍=== நம்
நேசர்களும் இடையூறும் பலவுண் டேனும்=== நின்று
நேர்படுவார் அவர்மகிழ்வு நம்மானந்தம்.

வரிசைவழி காட்டுகிற காவ லாளர் ‍‍‍‍=== இவர்
வார்த்தைகளை நாம்மதித்தல் கடமையன்றோ?
புரிந்துணரா மக்கள்போல் உடைத்துக் கொண்டு=== அங்கு
புசிப்பதற்கே முண்டியடித் தோடல் நன்றோ?

பண்பாடு நமக்குண்டு காத்துக்  கொள்வோம்=== ‍‍எதிலும்
பகிர்ந்துண்போம் வயிற்றுக்கோ அடிமை ஆவோம்?
தன்பாடு தானுண்டே உலகம் இல்லை ‍‍‍=== என்றே
உண்பேனென் றோடுவது "புன்பாடு" என்போம்.

புன்மை  + பாடு =  புன்பாடு !  புன்மை படுதல் .