ஞாயிறு, 15 ஜூன், 2014

ரம்பம் (saw)

ரம்பம்   என்பது அழகான ஒரு தமிழ்ச்சொல்லின் திரிந்த வடிவம்.

அறு > அறம்பு > அரம்பம் > ரம்பம்.

இதில் அறு  : பகுதி.  அம், பு, மீண்டும் அம் என்பன சொல்லாக்க விகுதிகள்.

நிலையம்:  நில் + ஐ + அம்  (இரு விகுதிகள்).  ரம்பத்தில் 3 விகுதிகள்.

று, ற என்பன ரகரமாய் மாறியது எப்படி?

கரு > கறு;  கருப்பு > கறுப்பு  என்பவை காண்க.

ரம்பத்தில் அறுத்தல் அடிச்சொல்.

பார்வை ஒன்றே போதுமா ? என்கிறார் தொல்காப்பியனார். "மொழிபொருள் காரணம்  விழிப்பத் தோன்றா"  என்கிறார்.

சனி, 14 ஜூன், 2014

சேமித்தல்

சேமித்தல் என்ற சொல், சேர் என்பதனடியாகப் பிறந்த சொல்லே ஆகும். சேமித்தல் அமைந்த விதமாவது:

சேர் > சேர்மி  > சேமி >  சேமித்தல்,  (ரகர  மெய் மறைவு)

இதேபோல் நேமித்தல்   என்பதும்.

நேர் >  நேர்மி  >  நேமி >  நேமித்தல்.  இதுபின் நியமித்தல் என்று திருத்தி அமைக்கப்பட்டது.  நில் > நி > நிய > நியமி  > நியமித்தல் என்றும் கூறுப.

ஒரு > ஒருமி > ஒருமித்தல்  இது ஓர்மித்தல் என்று வராத காரணம், மிகரத்தின் முன், ஒரு என்பது ஓர் என்று  திரியாது.

நில் > நிரு > நிருமி > நிருமித்தல்.( நிற்கச்செய்தல்,  நிறுவுதல்.) /*

லகரம் <> ரகரம் ஒன்று மற்றொன்றாகத் திரியுமென்பதை மறக்கலாகாது. பல மொழிகளில் இது இயல்பு.


*இதை வேறு விதமாகக் கூறுவதாயின் :
நில் > நிலுமி > நிருமி > நிருமித்தல்.
இது இன்னோசை கருதிய திரிபு மட்டுமன்று,  லு> ரு திரிபு முறைப்படியானதும் கூட.  நில்>  நிலுவை என்பது காண்க. இது நிருவை என்று திரியின், நிறுவை  என்பதனுடன் குழம்பக் கூடும் (  மயங்குதல்).

ஒ ..நோ

நிலு >  நிரு    (மேற்படி )
கலு   >  கரு (  கலுழன் >  கருடன்  )

வெள்ளி, 13 ஜூன், 2014

செம்முடிச் சீனப் பெண்கள்

செம்முடியாய் வேண்டுமென்று சீனப் பெண்கள்
சென்றுபணம் செலவாக்கி மாற்றிக் கொண்டு
தம்பணிக்குப் போகின்ற நேர்த்தி  தன்னைத்
தரணிபடைத் தோனும்கண் டயர்ந்து போவான்!
அம்மணியே உம்மழகும் அணிகள் தாமும்
அழகழகே என்றுபுகழ்ந்  துயர்த்தி விட்டால்
இம்முடியே நிரந்தரமென் றிருத்திக் கொள்வார்
இனியதொரு சிட்டு நடை நடந்து செல்வார்.

செம்முடி பற்றிய மரபணு ஆய்வு முடிவை இங்குக் காண்க .http://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_13.html

Note:  Sorry the server was down from 10.00 p.m. to  abt 11.59 p.m. as I was trying to insert the link address.