வியாழன், 12 ஜூன், 2014

அம்மா உப்பு ம் அதிகம் விற்றிட

அம்மா  உப்பு ம்   அதிகம்  விற்றிட 

இம்மா நிலத்தின் துயரும்  அற்றிட 

எம்மான் சிவனருள் யாவரும் பெற்றிட 

தென்மா  நிலங்கள்  செழித்து 

ப ன்மா வளமும் பயில்கஇவ்  வுலகே

-----சிவமாலா    அகவற்பா 

Three varieties are up for open market sale under the ‘Amma Salt brand – Double Fortified Salt, Refined Free Flow Iodised Salt and Low Sodium Salt.

Buoyed by success of ‘Amma Drinking Water’ and ‘Amma Unavagams,’ the government has come out with ‘Amma Salt,’ an affordably priced quality common salt made by the Tamil Nadu Salt Corporation (TNSC) for the benefit of the weaker sections. Chief Minister Jayalalithaa will launch the scheme on Wednesday.
Sources in the TNSC told The Hindu that three varieties are up for open market sale under the ‘Amma Salt brand – Double Fortified Salt, Refined Free Flow Iodised Salt and Low Sodium Salt. While the double fortified variety is priced at Rs. 14 a kg, against the open market price of Rs. 21, the refined free flow variety costs Rs. 10, against the market price of Rs. 14 to Rs. 20. The Low Sodium Salt costs Rs. 21, against the private players’ price of Rs. 25.
The sources claim that the double fortified variety is not freely available in the open market in the South. While this salt helps those with anaemic and goitre disorders, the refined free flow salt helps those with hypothyroidism and the low sodium salt is a boon for those enduring blood pressure variations and cardiac conditions.
All varieties would be marketed in powdered form in attractive packs under the aegis of the TNSC, which is, for the first time, vending through the open market. Already it is canalising salt sale through the Public Distribution System outlets.
The corporation would ship ‘Amma Salt’ from its manufacturing base at Valinokkam pans in Ramanathapuram district in the initial stage and later venture into large scale manufacturing based on the future demand.
In a radical idea tailored to meet the market demand for fair price salt, the corporation plans to appoint wholesale dealers in all districts.
Official sources expressed the hope that the product would be a hit on the lines of the ‘Amma Drinking Water’ and Amma canteens.



"சேகரித்தல் "

இனிச்  "சேகரித்தல் " என்ற  சொல்லைப் பார்க்கலாம்.

இதில் கரித்தல் என்பதைப் பின் ஆய்வு செய்யலாம். இதற்குத்  இப்போது "செய்தல்"  என்று மட்டும் வைத்துக் கொள்வோம்.

முன் நிற்கும் சே என்பதென்ன?  அது சேர் என்பதன் திரிபு  ஆகும்.

சேர்கரித்தல்  >  சேகரித்தல்.

இதேபோல்  சேர்மித்தல்   திரிந்து  சேமித்தல் ஆயிற்று.

ர்  இடையில் வரும் சொற்கள் சேக்கிறது  பாக்கிறது  என்று  பேசப்படுவது காண்க.

"அங்கிகரித்தல்" அடுத்து நாம் கண்பதாகும். 

புதன், 11 ஜூன், 2014

ரங்கசாமி ரங்கன்

பழங்காலத் தமிழர்களுக்கு  ர ரா ரி ரீ வரிசையில் சொற்கள் தொடங்கக் கூடாது.  இது ஏன் என்று தெரியவில்லை. சொல்லுக்கு முதலெழுத்தாக எந்த எந்த எழுத்துக்கள் வரலாம் என்று விதிகள் செய்து அவற்றை அவர்களின் முன்னோர் பின்பற்றி வந்தனர் என்பது காரணமாக இருந்தாலும் அது வரலாற்றுக் காரணமே தவிர அறிவு அடிப்படையிலான காரணமன்று. இப்படிப் பல விதிகளை வைத்துக்கொண்டு தமிழ்ப் புலவன் தள்ளாடிக்கொண்டிருந்ததால்,  தமிழ்ப் புலவனைச் சமாளிக்க, பல சொற்களைப் பிற மொழிகளில் சேர்க்க வேண்டியதானது மட்டுமின்றி,  பல புதிய மொழிகளையும் மாறுபட்டு நின்றோர் படைத்துக்கொள்ளத் தலைப்பட வேண்டியதாயிற்று.

இத்தகைய விதிகள் இனி மாறுபடும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

ரங்கன் என்ற பெயர் கண்டு மேற்கண்டவாறு எழுதுகின்றேன். அந்தச் சொல்லை இப்போது  அணுகி  ஆய்வோம்.

சீரங்கம்  என்று சொல்லப்படும் கோவில், ஆறு இரண்டாகப் பிரிந்து இடையில் இருக்கும் நிலத்தின்மேல் அமைந்துள்ளது.  இவ்விடம் ஓர் அரங்கு மாதிரியானது. அங்கு குடி கொண்டிருக்கும் ரங்கன் உண்மையில் அந்த அரங்கின்மேல் எழுந்துள்ளான்,   அவனை அரங்க சாமி என்றது   மிக்கப் பொருத்தமானது. அரங்கசாமி என்பதை  அரங்கண்ணல் என்றும் பெயர்த்துக் கூறுவர். சாமி என்பதும் அண்ணல் என்பதும் .நிகரானவை.  "அண்ணலும்  நோக்கினான்  அவளும் நோக்கினாள் "  என்று கம்பர் கூறல் காண்க.

நாளடைவில் அது தலையிழந்து ரங்கசாமி  ரங்கன் என்றானது.

சீர்அரங்கம்  (சீரரங்கம்) என்பது தன்  இரு ரகரங்களில்  ஒன்றை இழந்து   சீரங்கம் ஆனது.   பின் இது  ஸ்ரீரங்கம்  என்று அழகாய்  அமைந்தது. 

சென்ற நூற்றாண்டுத் தமிழ்ப்  புலவர்கள் தலைபோன  சொற்கள் சிலவற்றை அறிந்து கூறினர். அவர்களுக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். முறையாகச் சிந்திக்காமல்  தமக்குப்  புலப்படாதவற்றையெல்லாம் தமிழல்ல என்றனர் சிலர்.  நிற்க :

அரங்கசாமி  ரங்கசாமி ஆனதை விளக்கியுரைத்தவர் முத்தமிழ்க் காவலர் என்று போற்றப்பட்ட  மறைந்த அறிஞர்  கி. ஆ பெ  விசுவநாதம் அவர்கள்.

அறிந்து இன்புறுவோம்.