வெள்ளி, 6 ஜூன், 2014

சாம்பிராணி

பழைய தாள்களை வீசுவதற்காக எடுத்துக்கொண்டிருக்கையில், 2008ல் எழுதிய எனது குறிப்பு ஒன்று கிடைத்தது. அது சம்பிராணி பற்றியது.
இதை முன் ஓர் இணையதள வலைப்பூவில்  எழுதியிருக்கிறேன்.

சாம்பான்  என்பவன் பிணம் எரிப்பவன்.  இதன் வினைச்சொல் "சாம்புதல்" என்பது. அதாவது எரியூட்டுவது, புகை எழுப்புவது.  சாம்பார் என்பதும் நன்கு  குழைய வேகவைத்த பருப்பு.  இனி  சாம்பு சாம்பு என்று சாம்பிவிட்டேன் என்று சொல்வதுண்டு.  குழைந்து வீழும்படி உதை அடி கொடுத்தேன்  என்று பொருள்படும்.  சாம்புதல் :  வேக வைத்தோ, எரித்தோ, தாக்கியோ செய்வதைக் குறிக்கிறது.

சாம்பு + அரண் + இ = சாம்பரணி , இது பின் சாம்பிராணி  ஆயிற்று. எரிக்கும் போது, அல்லது தணலில் குழைவித்துப் புகை கிளப்பும்போது ஈ, கொசு, எறும்பு முதலியனவும் பிறவும்  அண்டாமல், அரணாக விளங்குவது என்பதே பொருள்.

புகையிலை போயிலை என்று திரிந்தாற்போல சாம்பரணி சாம்பிராணி  ஆகிவிட்டது. சாம்பிராணியில் பிராணி எதுவும் இல்லை.

சாம்புதல் எரித்தலையும் குறிக்கும் என்பதை சில அகரவரிசைகள் தவறவிட்டுவிட்டன.  சாம்பல் என்ற சொல், இன்னும் நம்மிடை வழங்குதலை மறந்தனர். எரித்து வருவதே சாம்பல்.

கச்சத் தீவினை.........

கச்சத் தீவினைக் கைவிடுங்கால்--- ‍‍  அவர்
கருதிய பற்பல இடுக்கண்களில்,
மிச்சமாய்க் கிடந்த மீன்பிடி வலைப்பொருள்
மேல்வந்து தெரிந்திட மறுத்திட்டதோ?

எந்தக் கடலலை நின்றபோதும்---- ‍‍‍‍‍‍‍ இந்த‌
மீனவர் துயரலை ஓய்ந்திடாமல்
வெந்த புண்களில் வேல்தனைப்  பாய்ச்சிட
முந்தி வருகுது செய்திகளில்!.

வியாழன், 5 ஜூன், 2014

விஷாலம்?

விசாலம் என்பது விய (வியன் )  என்னும் விரிவு குறிக்கும் சொற்களிலிருந்து திரிந்தமை கண்டோம்.   Click:
http://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_6614.html


நீங்கள் இதில் செய்ய வேண்டியது: இதே ஒலி யுள்ள சொல் சமஸ்கிருத அகரவரிசையில் உளதா என்று தேடிக் கண்டுபிடியுங்களேன். அது நல்ல பயிற்சியாய் அமையுமன்றோ?

நிற்க, விசாலத்தை விஷாலம் என்று  எழுதுவது பொருந்துவதாகத் தெரியவில்லை. விஷம் என்பது கொல்மருந்து.  ஆலம் என்பது ஆலகால விஷமென்னும் கொல்மருந்து. Poison  +  Poison!  Double poison!!

நிலவே நீ  இந்தச்  சேதி  சொல்வாயா ?
ஆலம் உண்ட  திரு  நீல கண்டனிடம் !

என்றொரு  திரைப்பாடல் வருகிறது!  ஆலகால விடத்தை (விஷத்தை) உண்டு உலகைக் காப்பாற்றியவன் சிவபெருமான் . அவன் "கருணா மூர்த்தி !" என்போம்.    ஆலம்  என்பது  கொடும் கொல்குழம்பு !  


 ஆக  இது நற்பொருள் தருவதாக இல்லை.

ஆகவே, விசாலம், விசாலாட்சி என்றே எழுதுவது நலம்.