புதன், 4 ஜூன், 2014

விசாலம்

விசாலம்  என்பது விரிவு குறித்தது. "நல்ல விசாலமான வீதி "  என்பதைப் பேச்சில் கேள்விப் பட்டிருப்பீர்கள்

யகரம் சகரமாய் மாறுதலை உடையது.  எ-டு :

வயந்தமாலை -  வசந்தமாலை.
வாயில்  - வாசல்.
ஆகாயம் -  ஆகாசம்

.எனப் பல.

விய  என்பதன் விளக்கத்தை முன் இடுகையில் காண்க. .

http://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_4.html

விய +   ஆல் + அம்  = வியாலம் > விசாலம்.

இதில் "ஆல் " என்பது "அகல்" என்பதன் திரிபு.  அகல் -  அகன்றதாதல்.

விரிந்து அகன்றது என்பது பொருள் .

விரும்பியவன் தோள்சேர்ந்த "வெகுளிப்பெண்"

விரும்பியவன் தோள்சேர்ந்த "வெகுளிப்பெண்" செய்கைகக்கு
விரும்பாத சுற்றத்தார் வெகுண்டார்,
அரும்பிவந்த வாழ்க்கையை அறுத்தெறிந்தார் அவளூடலை
ஆற்றொணா நோவேறப் புடைத்துத்,
திரும்பியுயிர் மீளாத தேயத்திற் கனுப்பினரே
திரும்பிவரும் மானமென்று நினைத்துக்;
குறும்பிதுபோல் ஞாலத்தில் குற்றறிவால் செய்வார்தம்
குறுங்கொற்றம் நொறுங்கிவிழல் எந்நாள்?

News story referred:

https://my.news.yahoo.com/husband-bludgeoned-pakistani-woman-strangled-first-wife-163921973.html

வியாழன்

இனி விரிவுப் பொருளில் அமைந்த சொற்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

வியனுலகு  என்ற சொல் குறளில் வருகிறது. வியன் என்றால் மிக விரிந்த என்பது பொருள் .

விய > வியப்பு என்பது விரிவுப் பொருளை யடிப்படையாகக் கொண்டதே. வியக்கும் போது, இயல்பாகவே வாய் கண் முதலிய விரிந்துகொள்ளும்  என்பது மட்டுமின்றி, மனமும் விரிவுகொள்ளும் அன்றோ?

வியாழன் என்பது பெரிய கோள். விய -  விரிந்தது.  ஆழ்  -  ஆழமாக.  அன் -  விகுதி.  விய + ஆழ் + அன் =  வியாழன் ஆயிற்று.  மிகவும் ஆழ்ந்த விரிவு உடையது என்பதாம்.

(விர்)  >  விரி .
(விர் ) > விய் >  வியன் 
(விர் ) > விய்  > விய  >  வியத்தல் . வியப்பு .

அடுத்த இடுகையில் தொடர்வோம். வேறு தொடர்புடைய சொற்களுடன்.