சனி, 31 மே, 2014

nAtham

நாதம் பலவாறு எழுகிறதென்பது இன்றைய மனிதனுக்குச் சொல்லாமலே புரிந்துகொள்ளக்கூடியதாய் உள்ளது. ஆனால் ஆதி மனிதன் இதனை இவ்வாறு அறிந்திருக்கவில்லை. அவனுக்கு முதன்முதலாய் உணரத் தக்கதாய் நின்றது ஒரு நாதம் தான்.  அது நாவிலிருந்து எழும் ஒலியாகிய நாதம்.

நா  ‍ நாவினை அடிப்படையாக ;  து : உடையது;  அம் ‍  விகுதி.
நா+  து ‍‍+ அம் =  நாதம் ஆயிற்று.

பின் அறிவும் திறனும் அடைந்த மனிதன்,  நாதமானது எங்கும் நிறைந்து உளது என்பதைனை அறிந்துகொண்டான்.

ஏபிசிடி படித்துத்தான் வித்துவானாகி இருக்கவேண்டும். குகைவாழ் முந்தியல் காலத்திலேயே அனைத்தையும் அறிந்துவிட்டதுபோன்ற பாவனையில் கூறப்படும் சொல்லமைப்புகள் வரலாற்று நடைக்கு ஒவ்வாதவை.  

ஆ ற்றின் ஒழுக்கிலும்  நாதம் உள்ளதே!  அதிலும் வேத ஒலி கேட்கிறதே!  ஆற்றொலியை ஆதி மனிதன் கேட்டிருப்பான் எனினும் இத்தகு உணர்வு  அவன் பெற்றது பின்புதான். 

வெள்ளி, 30 மே, 2014

ஓதம் : noise, uproar.

ஓதம்  :  noise, uproar.  .

ஓதுங்கால், பலத்த ஒலி ஏற்படுவதுண்டு.  கூடியிருப்போர் யாவருக்கும் கேட்கும்படியாகவே  ஓதப்படும்.  பலர் அமர்ந்து ஓதுகையில் பேரொலி எழுமாதலின் ஓதம்  (ஓது+ அம்) பேரொலி எழுப்புதலைக் குறிக்கலாயிற்று.

"ஓ" என்னும் ஒலிக்குறிப்படியாய்ப் பிறந்த சொல்லே  ஓது என்பது. இதில் "து ‍ வினைச்சொல்லாக்க விகுதி.

நோய் குறிக்கும் ஓதம் என்ற சொல் ஊது என்பதிலிருந்து தோன்றியது.  இங்கு ஆயப்பட்ட ஓதமென்பது ஒலிக்குறிப்புச் சொல். இவற்றின் பிறந்தகங்கள் வெவ்வேறாம்.

வியாழன், 29 மே, 2014

ஓதம் disease: hydrocele

"ஓதம்"   சொல்  அமைந்த  விதம் அறிவோம்.

 வீக்கத்தை "ஊதிவிட்டது "  என்பது பேச்சு  வழக்கு.  "ஊதலான " உடம்பு  என்ற  வழக்குமுண்டு.

ஊது   >  ஊதம்  >  ஓதம்  என்பது திரிபு.

பருத்துவிட்டது என்பது பொருளாம்.    .