வியாழன், 8 மே, 2014

Amid sedition investigation....

சீனரும்  இந்தியரும் சீர் சான்ற வெள்ளையரால்
கூனுறு கொள்கையினால் கொண்டுவரப் பட்டோரே
தேனுறும்  இக்காலம் தேடிவர  லாற்றினில்
காணுறும் வீண்குழப்பம்   காண் 

இதைப் படித்து இந்தக் குழப்பத்தை அறிந்துகொள்ளுங்கள்.   v

https://my.news.yahoo.com/amid-sedition-probe-isma-repeats-claim-chinese-were-110900961.html


   

வாக்களித்து..............

தேர்தலிலே நின்றுமக்கள் திறமுடையோன் 
என்றெண்ணி வாக்களித்து 
பார்புகழ நாடாளு மன்றுள் நீர்   
பாய்ந்துவிடின் அதற்கீடேது?
யார்புகழ்வார் என்றுபிறர் வாய்நோக்கி 
நின்றநிலை யாண்டும் மாறி  
நேர் புகழும்  ஒரு கூட்டம் உம்மருகில் 
நிற்குமதன் பயன்உகப்பீர் . 


வெற்றி யெனின்  கேட்டதனை மகிழ வேண்டாம் 
வேலைஇவை தாமெனநீர் விரித்த வற்றை
உற்றவொரு பாதையிலே உகந்து செல்வீர்  
உற்றதுவோர்   தோல்வியெனின் துவளல் வேண்டாம் 
சொற்றிறம்பா நன்னெறியில்  சுருண்டி டாமல் 
சூழ்வினையை ஆள்வினையால்  சுமந்து சென்றால்
வற்றிவிடா வளம் சார்ந்த உலகம் சொந்த 
வள மனைக்குள் வந்து தொழில் புரிதல் காண்பீர்.  


குறிப்புகள் 

மன்றுள்  --- மன்றத்துக்குள் ;       நீர் =  நீ என்பதன் பன்மை;
பாய்ந்து -  புகுந்து;   உகப்பீர் =  தேர்ந்தெடுத்துக் கொள்வீர்.
சொற்றிறம்பா -  சொன்ன சொல்  மாறாத .
சூழ் வினை -  சுற்றியுள்ள வேலைகளை அல்லது ஆய்ந்து  மேற்கொண்டவற்றை ; ஆள்வினை -  செயல் திறன் .




புதன், 7 மே, 2014

சுகந்தம்

எப்படித் தோன்றியது சுகந்தம் என்னும் இந்தச்சொல்?  இதை இப்போது ஆய்வு செய்வோம்.

உயிர் எழுத்து முதலில் வந்த சொல் சகர வருக்க எழுத்து முதலாகத் திரிபு அடைந்து சொல்லாகும் என்பதை பல இடுகைகளில் (ad nauseam) சொல்லி இருக்கின்றோம்.  அதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள்.

இருத்திக்கொண்டு அந்த இருதி ( ரீதி) யிலேயே இதையும் நோக்குக.

உகந்த >  சுகந்த >  சுகந்தம்.

மிகவும் இனிய நிலை, சுற்றுச்சார்பு,  நுகர்வு.

சுகந்தம் என்ன அரிய சொற் படைப்பு தெரியுமா