வெள்ளி, 2 மே, 2014

குருணை நொய்

கடைகாரர் குருணை  என்றே  எழுதுகிறார். இந்தக் குருணைக்கும் குருவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

நொய் என்பது சிறு சிறு துகள்களாய் உடைந்த அரிசி.   குருணை  என்பது உண்மையில் "குறு நொய் "  ஆகும்.

குறுநொய் :   நொய்யினும்  சிறியனவான துகள்களாய் உடைந்த அரிசி. " எப்படிக் கணக்கு எடுப்பது? எல்லாம் ஒன்றுதான் என்கிறார் கடைகாரர். 

குறுமை -  சிறுமை.குறிப்பது.

பேச்சு வழக்கில் வேறு  பதத்துடன் இணைந்த சொற்கள் -- நெய் என்பதும் நொய் என்பதும் "ணை "  என்றே திரிகிறது.

எண்ணெய் -   எண்ணை ;
குறு நொய்  -  குருணை.

இன்னொரு தனி இடுகையில் சில தொடர்புடைய விடயங்களை ஆய்வு செய்யலாம்.

தேர்தல் களமும் மக்களாட்சியும்

தேர்தலென்றால் தேசத்தின் சேவைக்குத் தான்தன்னைத்
 தந்துவிடல் என்பதாகும்;
தேர்தலிலே வெற்றியெனின் சேவைசெய் வாவென்று 
தேசமக்கள் வேண்டலாகும்;
ஊர்களிலே தேர்தலின்முன் போடுகின்ற சண்டைகளை 
உற்றுப்பார்க் கின்றபோது,
பார்தனிலே இப்பொருளை யாருணர்ந்தார் என்றுளத்தே 
கேள்வியொன்று பற்றிநிற்கும். 


என்றாலும் எண்ணிக்கை நோக்கிற்பின் இத்தகுஓர்  
நேர்ச்சியினால் குற்றமில்லை;
வென்றாலும் தோற்றாலும் பல்லாயி ரத்தவர்கள் 
நின்றதனால் மக்களாட்சி
என்றென்றும்  நின்றிடுமே எழில்சேவைக் கித்தனைபேர்  
 உண்டென்று கூறுங்காலை
நன்றெனவே நல்லறிஞர்  நாடிடும்நேர் ஞயம்காண்பர் 
ஞாலமிதைப் போற்றிப்பாடும்.


பூங்கா (தமிழ்) பூங்ஙா (மலாய்)

தமிழில் பூங்கா  என்றால்  "பூக்காடு"  என்பது சொல்லமைப்புப் பொருள்.

We should most of the time be only  concerned with definition of a word as it related to its etymological make-up.  Not its derived meaning nor its applied meaning nor its current definition as  in the lexicon.

கா என்றால் காடு.

கா  >  கான் >  கானம் ,  கான் >  கானகம்,  (கான் + அகம் )

இங்கு  சொல் மாற்றங்களை அடையப் பெறினும் பொருள் ஏதும் மாறவில்லை.

பூங்கா  என்பது flower garden என்று அறியப்படுகிறது.

இதைப் park என்பதற்கு நேராகவும் பயன்படுத்துவர்.

இதே சொல் மலாய் மொழியில் பூங்ஙா என்று வழங்கினாலும்  அது "பூ "  என்று மட்டுமே பொருள் தருகிறது.

தமிழ்ச் சொற்கள் மலாயில் வரும்போது பல  சற்று திரிந்த பொருளிலே வழங்கும். 

இன்னொரு எடுத்துக்காட்டு:

பகு >  பகல் (24  மணிக்கூறில் கதிரவன் ஒளி பெறும் பகுதி )

பகு  > பகி pagi  (பகலின் முன் பகுதியான காலைப் பொழுது.

இங்ஙனமே    பூங்ஙா (மலாய்) பொருளில் சற்று மாற்றமடைந்து வழங்குகிறது 

Pronounced:   bungngA  (  b   stress )