வெள்ளி, 25 ஏப்ரல், 2014

வேடு > வேடம்.

vEdam


பானைக்கு வேடு கட்டுதல் என்று ஒரு பேச்சுவழக்கு இருப்பதை அறிகிறேன். பானை வாயை துணிகொண்டு கட்டி மூடிவிடுதலை இது குறிக்கிறது.

வேடு என்ற சொல்லும் வேய் (வேய்தல்) என்பதனோடு தொடர்புடைய சொல்லே. இதை சொன்னூல் முறையில் வேண்டுமானால் காட்டலாம்.

வேடு > வேடம். (துணியினால் அல்லது வேறு பொருட்களால் மூடிக்கொள்ளுதல் அல்லது புனைந்துகொள்ளுதலைக் குறிப்பது.)

இதை வேடம் என்றே எழுதுதல் வேண்டும். usually met as esham

TWD 5@18062006REP17092010

இடும்பைக்கே கொள்கலம்

A receptacle for misery....


இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.
குறள் 1029


நாயனார் பெரிய குடும்பக்கலை வல்ல அரும்பெரியார். ஒரு குடும்பக்காரனுக்குத்தான் எத்தனை அல்லல்கள்? எதையெதையெல்லாம் அவன் சரிசெய்துகொண்டு இவ்வுலகில் வாழ்க்கையைத் தொடரவேண்டியுள்ளது?
அக்குடும்பத்துக்கு ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்று கண்ணுங் கருத்துமாகச் செயல்படவேண்டி யுள்ளதே! அதனால், மன அழுத்தம் மிகுந்து, அவனுடலும் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை உண்டாகிவிடுகிறதே!
மன அழுத்தத்தின் காரணமாக, மாரடைப்புமுதல் புற்று நோய்வரை வந்த நோய்களேதும் மிகுவனவே தவிர , அவற்றுள் ஏதும் குறைந்து நலம்பெறுவதாய்க் காண முடியவில்லையே!

குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் = குடும்பத்துக்கு ஏற்படும் இடர்களைச் சரிப்படுத்திக்கொள்ள முயன்று உழலும் அவன் , 
உடம்பு இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ = துன்பங்களையே உள்வாங்கிச் சுமக்கும் பாத்திரமோ (அவன்) உடம்பு?

இப்படி குடும்பத்தலைவன்பால் மனமிரங்கும் உள்ளம், நாயனாரின் உள்ளம்.

துன்பம் வருங்கால் நகுக என்கிறாரே, துறவு பூண்டு ஓடிவிடு என்கிறாரோ!! மனம் இரங்கவும் செய்கிறார் அல்லவா?



453@15112010 

A day with more than 24 hours...............

பகலும் இரவுமே நீளாமலே ---  நாம் 
பார்க்கும் சோலிகள் தீராமலே,
அகலும் பொழுதுகள் ஒவ்வொன்றுமே ---  மன 
ஆறுதல் தீர்த்ததே என்றென்றுமே! 

 ( In   some countries of the world:-  )

அதிகாரிகள் வந்தே  ஆணையிட்டார் ---  ஆனால் 
அன்றாட வேலைகள் கோணவிட்டார்!
நதி  நீரும்  குடி நீரும் பஞ்சமென்பார்  --- மக்கள் 
நாடியும் பெற்றவை  கொஞ்சமென்பார் 

-----

.அலுவலர் மணிமுள்ளை நீட்டிக்கணும்  ---  அந்த 
ஆண்டவன் வந்திதை கேட்டுக்கணும்;
பகலவன்  நாள் நீட்டித் தந்துவிட்டால்  --- இன்பம் 
பாரெங்கும் கதவினை வந்துதட்டும்


ஒரு நாள்  இருபத்து  நான்கென்பதை  ----  இனி 
ஊரார்க்கு  நாற்பத்தி எட்டாக்கணும்;
இரு நாள் செய்வதை ஒரு நாளிலே ---. செய் தால் 
இன்பமே   எங்கணும் வரு  நாளிலே