திங்கள், 24 பிப்ரவரி, 2014

சட்டக் கல்வியினால்

கல்லூரி கற்பித்த தென்னவோ---   சட்டக்
கல்வியினா லேதும் நன்மையோ?
கொல்லும் இனவெறி மற்றுண்டோ --- அறம்
கோரிடும் மானிடப் பற்றுண்டோ?

வாடிய மக்களைக் காப்பாற்ற--- ‍‍‍‍‍முன்
வந்திடு வானோஇங்  காமென?
கூடும் அறஆயம் மேல்சாற்றும்--- ஆணை
கூன்படச் செய்வானோ பூமியில்?

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

சபதம் II

முன்பதிந்த  இடுகையில் சபதம்  என்பது  அவம் > அவதம்  என்பதன் திரிபு என்றோம்.  எப்படி முடியும்?  அவம் என்பது எப்படி அவதம் ஆனது?

ஆக்கப்பட்ட சொற்கள் பலவற்றில் "அ து" என்பது இடையில் புகுத்தப் பட்டுள்ளது.  ("இடைப்புகவு ").

அவம் + அது+அம்   >  அவ + அது + அம்  >  அவ+ து+ அம்   >  அவதம் .

தச்சன் நிலைப்பேழையைச் செய்யும்போது வேண்டாத கட்டைகளை அறுத்து வீசிவிடுதல்போல் ேண்டாத ஒலிகள் களையப்பட்டன,  இல்லாவிட்டால் "அவமதுவம் " என்றாகிவிடும்.  நீங்கள் ஒரு புதிய பெயரையோ சொல்லையோ படைப்பதாயின் இந்த உருவாக்க முறையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பருத்தல் = becoming big in size.  to increase in size.
பரு > பரிய  big.
பரு+ அது + அம்

 =  பருவதம் > பர்வதம்  (இங்கே "வகர " உடம்படு மெய் வந்தது.  இல்லாவிட்டல் "பரதம்" என்ற சொல்லுடன் குழம்பிவிடும்  ("மயங்கும்").

இதுபோல அது இது என்ற சொற்கள் புனைவில் புகுத்தப்பட்ட சொல்லாக்கங்கள் மிகப்பல.

"வோவ் " (vow) என்னும் ஆங்கிலச் சொல்   "வகத்"  என்ற   சமஸ்கிருத  மூலத்தோடு தொடர்பு உடையதென்பார் அறிஞர் . Sanskrit vaghat- "one who offers a sacrifice.

notes:

c.1300, from Anglo-French and Old French vou, from Latin votum "a vow, wish, promise, dedication," noun use of neuter of votus,past participle of vovere "to promise solemnly, pledge, dedicate, vow," from PIE root *ewegwh- "to speak solemnly, vow" (cf. Sanskrit vaghat- "one who offers a sacrifice;" Greek eukhe "vow, wish," eukhomai "I pray").  (from Dictionary )

பர்வதம் -  சங்கதச் சொல் :  மலை. " பர்வத ராஜகுமாரி பவானி "  என்பது பாடல்.
பர்வதம் > பார்வதி .  மலைமகள்.

சபதம்

சபதம் என்பதைக் குறிக்கப் பல சொற்கள் சங்கதத்தில் உள. இவற்றுள் பல, "வ்ரத" என்ற இறுதிபெற்று முடியும். வெறுமனே வ்ரத என்றாலும் சங்கதத்தில் சபதம்தான். சபதம் என்பது அங்குக் காணப்படவில்லை. நீங்களும் தேடிப்பார்த்து, இருந்தால் தெரிவியுங்கள்.

சகரம் மொழிக்கு முதலில் வராது என்று தொல்காப்பியத்தில் ஒரு நூற்பா காணப்படுகிறது. இது ஆராய்ச்சி அற்ற‌ ஆசிரியர் எவரோ ஒருவரின் இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை.

சமைத்தல் என்பது சமஸ்கிருதம் அன்று.  சண்டை என்பதும்  அப்படியே. இங்ஙனம் எத்தனையோ சொற்கள்!  உதைப்பது என்று பொருள்படும் சவட்டு என்னும் மலையாளச் சொல்லைப் பாருங்கள்.   இந்த நூற்பா பிற்பட்ட காலத்திய இடைச்செருகல்,  இது  நன்றாகவே புரியும்.

சபதம் தொடக்கத்தில் "இன்னதைத் தடுக்காமல் விடமாட்டேன்" என்பதுபோன்ற உறுதிச்சொல்  வெளிப்பாட்டைக்  குறித்தது. இங்ஙனம்  தடுக்கப்பட்ட நிகழ்வு கெட்டுவிடும் அன்றோ? எனவே  கெடுத்தல்  கருத்தினடிப்படையில்  சபதம் அமைந்துள்ளது.

அவம்  >    அவதம்  >  ச‌வதம்.>   ச‌பதம்.

அவம் = கெடுதல்,  கெடுத்தல்.

அமைதல்  - சமைதல்   போன்றது  இது.  அ -ச திரிபு.


சபதக் கதைகள் பல நமக்குக் கிடைக்கின்றன. மங்கம்மா  சபதம், சரசு  வதி  சபதம்  எனத் தொடங்கிப் பலவாம் அவை .  சபதம் மேற்கொண்டவர் வெற்றி, மற்றவருக்குத் தோல்வி.தோல்வியிலும் நன்மை இருக்கலாம் எனினும் இத்தகு வெவ்வேறு  நிலைகளை அவ்வக் கதைகளில் கண்டுகொள்ளுங்கள்.

இனி இன்னொரு அ > ச திரிபைக் காட்டுகி ேன்.

அமர்  > சமர்.

அமர் என்ாலும் போர்;  சமர் என்றாலும் போர்.தான்.  இந்தத் திரிபில் பொருள்
மாறவில்லை.

எனவே அவதம்  எனற்பாலது சவதம் > சபதம் ஆனதென்பதை அறியலாம் .