செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பி தா

தந்தையைக் குறிக்க சங்கதமொழியில் உள்ள சொற்கள் மிகப்பல. தந்தை யென்ற சொல்லும் அங்குள்ளது. இன்னும் பல. ஏக தந்தாய நம!  என்று இறைவணக்கத் தொடரில் வருகின்றதன்றோ?

ஆனால் இங்கு ஒரு சொல்லை மட்டும் சிந்தித்து அறிவோம்.

பின் என்ற சொல், சில சொற்சேர்க்கைகளில் பி‍ என்று குறையும்.   எடுத்துக்காட்டு:

தம்+ பின்   =   தம்பின்.>  தம்பி. ( தமக்குப் பின் பிறந்தவன்  தம்பி.)

தாய்க்குப் பின்  நாமறிந்துகொண்ட தெய்வம் பிதா.

பின்  + தாய்  =  பி(ன்) +  தா(ய்).=   பி தா.

சில சொற்கள்   முன் பின்னாய் அமையும் என்பதைப்  பல இடுகைகளில் எடுத்துக்காட்டி யுள்ளேன்

அப்பா எனபதில் உள்ள "பா"  பி   என்று திரிந்தது என்று  கொள்வாரும்  உளர் . அங்ஙனம் ஆயின் -தா என்பது பின்னொட்டு  எனல் வேண்டும்.
"பிதா" என்பதைப் பிரிக்கலாகாது என்று சிலர் வாதிடுவர்.  இலத்தீன் மொழியில் -பா என்றே சொல் தொடங்குகிறது..
"பா பா "  =  போப்பாண்டவர்.
ஆகவே பி(ன்) + தா(ய் ) என்பது .பொருத்தமானது .

மாதா -  பிதா - குரு  தெய்வம்  என்ற நிரலில் மாதாவிற்கு அடுத்து நிற்பவர் பிதா. தாய்க்குப் பின் தாரம் என்பது ஆண்மகனைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட  குடும்பவியல்  பழமொழி.  இங்கு மாறுபாடு எதுவுமில்லை..

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

derivations of words meaning mother

இப்போது  ஆத்தா என்ற சொல்லைப் பார்ப்போம்.

ஆய் என்றால் அம்மா என்று பொருள், இது யாவரும் அறிந்ததே.

தாய் என்பதும் அதே பொருளுடைய சொல்.

ஆய் + தாய் =  ஆ+ தா = ஆத்தா.   இச்சேர்க்கை இரு சொற்களிலும் உள்ள யகர ஒற்று மறைந்து புணர்ந்தது. இது உலக வழக்கில் அல்லது பேச்சு வழக்கில் விளைந்தது. (தாத்தா என்பது வேறு).

பல பெண்டிரின் பெயர்கள்  ‍‍தா என்ற பின்னொட்டுப் பெற்று முடியும்.  இவற்றிலும் தாய் என்ற சொல் யகர ஒற்றை இழந்து பெயர்ப் பின்னொட்டாக நிற்கின்றது.

நந்திதா, வேதிதா,.... என்பவெல்லாம்  நீங்கள் அறிந்தவை.

ஆகவே தாய் > தா. (கொடு என்னும் தா வேறு.)


மாதா என்பது (அம்)மா + தா(ய் ) =  மா + தா.  முழுமையானது  " அம்மா தாயி"   என்பது போன்றது.

தாய்  >  தா  > தாதி

தி என்பது பெண்பால்  பின்னொட்டு.

சனி, 15 பிப்ரவரி, 2014

makam - star name derivation

மகம் என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர்.  ஆங்கிலத்தில் இதற்கு "ரெகுலஸ்" (Regulus) என்று பெயர்.  கணியர்(சோதிடர்)களின் கருத்துப்படி இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் சிறந்த பலன்களை அடைந்தின்புறுவர் ஆதலான். இது உண்மையில் பெருமைக்குரிய நட்சத்திரம், அதனால் அது "மகம்" என்று பெயர் பெற்றது, மேலும் மகம் என‌ற்பாலது மஹா என்ற சொல்லினின்று பிறந்தது என்பர்.

இது பெரிது என்று பொருள்தரும் மஹா விலிருந்து தோன்றியிருத்தலும் கூடும்.  மஹா என்பதும் மா என்ற தமிழ்ச் சொல்லுடன் ஒத்த பொருளுடையதுதான்.

மகு  என்ற அடிச்சொல்லைச்  சற்றுக் காண்போம்.

மகு  >  மகு+இழ் >மகிழ்.

மகு   > மகு+ உடு +  அம்  =  மகுடம்.

மகு  >  மகு +  உடு  +  இ  = மகுடி.

(மகு + ஊது + இ  =  மகூதி  > மகுதி  > மகுடி  என்றும் வந்திருக்கலாம்)

மகு   >  மகிழ்   + அம் = மகிழம் (மகிழம்பூ)

மகு என்ற அடிச்சொல்லின் வழிவந்த சில சொற்களைக் கண்டோம்.  "மக" என்பதோ வேறு   ஓர்  அடிச்சொல். இச்சொல்லிலிருந்து மகன், மகள், மக்கள்,   மகார் முதலான சொற்கள் பிறந்துள்ளன என்பதை முன்  ஓர் இடுகையில் கண்டு இன்புற்றோம்.

 மகு, மஹா, மா என்பவற்றைவிட ,    " மகம்" என்ற நட்சத்திரப் பெயர், "மக:" என்பதினின்றும் தோன்றியது என்று கொள்வது பொருத்தமாகவே தெரிகிறது.  சோதிடர் சொல்லுகிறபடி, பலன்கள் நல்ல பல தருவது என்று கண்டபின்  தான் அதற்குப் பெயர் அமைத்தனர் (அதுவரை அதற்குப் பெயர் இல்லை ) என்பதினும் அது மக என்ற அடிச்சொல்லிலிருந்து தான்  பெயர் கொண்டுள்ளது எனல் அதிகம்  பொருந்துவது. ஏனெனில் மகம்  என்ற நட்சத்திரம்  நான்கு  உடுக்க‌ளை ஒரு குழுவாக உடையதாகும். கண்டதும் அறியக்கிடக்கும் அதன் கூட்டத்தைக் கண்டு பெயர் அமைத்தனர், பின்னர்  அது நற்பலன் தருவது என்று கண்டனர் என்பதே  இயல்பான நடப்பு ஆகும் .

இவை "நட்சத்திரப் பிள்ளைகள்" கூட்டம்,  ஆகவே   மக+அம் ‍=  மகம்  என்று நம் முன்னோர் பெயர் கொடுத்துள்ளனர் என்பதே  பொருத்தமாகும்.
========================================================================
Notes :

நகுதல் ;  நகு + அம்  = நக்கம்;  ஒளி விடுதல் .  திறம் -   திரம்  (போலி).
நக்கம்+ திரம்  =  நக்கத்திரம்  >  நட்சத்திரம்.   நகுதல்  - சிரித்தல்  இன்னொரு பொருள்.

magha :  meaning:-   a gift , reward , bounty ( Rig Veda). ; wealth , power . ; a kind of flower . ; a partic. drug or medicine  ; . of a Dvi1pa  ; of a country of the Mlecchas  ; . (also pl.) Name. of the soth or 15th Nakshatra (sometimes regarded as a wife of the Moon) AV. &c. &c. ; Name of the wife of Siva  ;  female:. a species of grain .  Note that there seems to be nothing common among these various meanings, unless it is said that all are "big". Since the "star" meaning did not manifest itself from Rig Veda, it may be right to say that it later entered as a star name in Atharva Veda.