பார்க்குமிடம் எங்குமொரு
நீக்கமற நிறைந்துள்ளாய்
பரிபூரணானந்தமே! --- நானும்
நோக்குமிட ம் ஒவ்வொன்றும்
ஈர்ப்பதெது கவனமதை
மக்கள்சிலர் ஆர்ப்பாட்டமே!
படைத்தவன்நீ உலகமிதை,
துடைத்தழிக்கும் பலமுடையோன்,
கருத்துமிது பொருத்தமன்றோ--- நீயும்
இடைத்துலக்கித் துயர்போக்கி
இவர்களெலாம் அமைதிபெற
ஏன் உய்க்க மறந்துவிட்டாய்!
இவர்களைநீ விலக்கிவிடு
இனிநீயே மேற்கொள்வாய்
இவருதவி உனக்கெதற்கு -- நல்ல
தவம்பிழைத்த நெறிசெல்வார்!
தண்ணருளைப் புறம்வைத்தார்
தலைதடு மாற்றமுற்றார்.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சனி, 22 செப்டம்பர், 2012
வெள்ளி, 14 செப்டம்பர், 2012
different views
பற்றாயம் பட்டு மீண்ட
பாழெலி தனக்குக் கண்ணில்
உற்றன அனைத்தும் ஊறே
உய்த்திடும் பொறியாய்த் தோன்றும்
குற்றமொன் றறியாக் கொள்கைக்
குரிசிலுக் கெல்லாம் நன்மை
பற்றின வாகும் என்றே
பகர்தலும் வேண்டா மன்றோ!
பற்றாயம் - எலிப்பொறி, கண்ணில் உற்றன = கண்ணிற் பட்டவை ஊறு = துன்பம் உய்த்தி டும் = ஏற்படுத்தும்,
வியாழன், 6 செப்டம்பர், 2012
தாயவட்கோ ஈடொன் றில்லை,
சென்றுவிட்ட தாயுடலைப் புதைத்தல் இன்றி
சீரூட்டிப் பேழைக்குள் கிடத்தித் தானும்
பொன்றுமட்டும் தன்னறைக்குப் பக்கம் வைத்த
புதல்வனுமே தாய்ப்பற்றுக் கெடுத்துக் காட்டாம்.
இன்றெவரும் செய்தற்கோ உரிய தன்றே
என்றாலும் நெஞ்சகத்துள் பொங்கும் அன்பாம்
மன்றறியக் காட்டியதோர் மகனே என்போம்
மாநிலத்துத் தாயவட்கோ ஈடொன் றில்லை,
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4308306.stm
|
Twenty years with mother's corpse
|
||
| ||
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)