புதன், 27 ஜூன், 2012

Getting closer in yesteryears, what it meant!

சந்தர்ப்பம் என்பதை வேறு வகையில் சொல்லவேண்டுமானால், "அமைந்தது" என்று சொல்லலாம்.சந்தர்ப்பம் இல்லை என்பதை "அமையவில்லை" என்றோ, வாய்ப்புக் கிட்டவில்லை என்றோ, அல்லது வேறு வழிகளிலோ சொல்லலாம்.


அமை > சமை > சம்.
அம் > அமை.
சம் > சமை.
(அம்) > (சம்). அம்=சம்.


அகர முதலான பல சொற்கள், பின் சகர முதலாகிவிட்டன.


எ-டு: அமண் > சமண்.


இன்னொரு சொல்லைக் கவனிப்போம்.




அண் > அண்டு.> அண்டுதல்.


அண் >அண்மு > அண்முதல்.


அண் > அணு > அணுகு > அணுகுதல்.


அண்டு > சண்டு > சண்டை.


அண்டை > சண்டை.


அண்டி, அணுகி, அடுத்து நின்றுதான் சண்டை போடுகின்றனர்.


கலந்து , கைகலந்து கலகம் உண்டாவதில்லை?

திங்கள், 25 ஜூன், 2012

Long live the tireless worker


எந்த நாளும் இனிது வாழ்க!

அதிகாலை எழுந்து,
பகலெல்லாம் உழைத்து,
மாலையில் ஓய்கின்றான்,
ஆண்டுகள் பலப்பல,
அதைச் செய்தான் பிறிதில்லை
அயர்வேதும் உறுதலின்றி !

உழைப்பாளி ஓய்ந்த நாள்
ஒப்பிலாத் துன்பம் ஏய்ந்தநாள்
உழைத்துக்கொண்டே இருந்தால்,
உலகினர் இன்பம் எலாம் வாய்ந்தே
ஒப்புயர்வு இலாது உலவுவர்,
அந்த உழைப்புக்குச் சொந்தக்காரன்
எந்த நாளும் இனிது வாழ்க!

வெள்ளி, 22 ஜூன், 2012

வேய்ங்குழல் நாதம்


வேய்ங்குழல் நாதம் தாங்கியே வீசும்
வீங்கிள வேனில் தருதென்றல்
விண்ணிலும் மண்ணிலும் விரிந்திடும் தண்ணருள்
பண்ணினைத் தந்தவன் கண்ணனவன்.


ஒரு நண்பர், கண்ணனைப் பற்றிச் சில வரிகள் தரும்படி வேண்டினார். அவருக்காக.....
I  am happy that he cheered up after reading these lines.