செவ்வாய், 14 டிசம்பர், 2010

akalyaa

கண்டோர் அனைவரையும் ஈர்க்கும் அழகுடையவள் அகலிகை.

அழகின் தன்மை பூவின் மணம்போலும் அகன்று சென்று பிறர் மனத்தையும் தம்பால் இயைக்க வல்லதாதலின், அகல்+இயை >அகலியை> அகலிகை ஆயிற்று.
ஆகவே, அழகில் பண்பில் மறுவற்றவள் என்பது பெறுபொருள் ஆகும்.

அகலியை >அகல்யா.

இத்தகைய பல பெயர்களைத் தமிழும் விள்ளவல்ல, விளக்கவல்ல செம்மொழியாகும்.

அகல் (vb) - to extend, to widen.

அஸ்திவாரம் "laying foundation"

ஒரு சொல்லை ஆய்வோம்:

அஸ்திபாரம் - அஸ்திவாரம் என்பது சமஸ்கிருதமன்று.

அழுத்திவாருதல் > அழுத்திவாரம் > அஸ்திவாரம்> அஸ்திபாரம்.

சங்கதத்தில், அஸ்தி என்றால் எலும்பு.

எலும்புக்கும் அஸ்திவாரத்திற்கும் தொடர்பு இல்லை.

வியாழன், 25 நவம்பர், 2010

நலம்் குலவு தமிழினில்....

உலகு படைத்தவன் ஊழி முதல்வனாம்
நிலவு வேணியன் நிறுவிய அமைப்பினில்
அலவு இலாதவை அழகு மிகநலம்்
குலவு தமிழினில் கூறி விளக்கினீர்.

அலவு இலாதவை - குழப்பமிலாதவை.

This poem praises a writer for his good work.