புதன், 20 அக்டோபர், 2010

எங்கெங்கு நோக்கினும் துன்ப நேர்ச்சிகள்
இயற்கைப் பேரிடர் எண்ணிலா இன்னல்கள்,
மங்கிடும் கதிரொளி என்றிடும் அறிவியல்
மாநிலம் காப்பவன் தானழித் திடுவன்
இந்தப் பூமியை என்பவர் பற்பலர்!
வருநாள் பான்மை அறியோம் எனினும்
திருநாள் விழாக்கள் எவற்றிலும் மூழ்கி
கிடைத்ததை மதித்துக் கேடற வாழ்வது
படைத்துயர் வெல்லும் பான்மை,
............... censored
............... கவல்வது மகிழ்ந்திருப் பீரே..

சாமியார்கள்

ஒரு நேரம் புகழின் உச்சியில்...
அடுத்த கணம்,
பழியின் படு பாதாளத்தில்,
பாவம் சாமியார்கள்.
உலகம் பழித்ததை ஒழித்துவிட
வழி கண்டிலார் போலும்!

அந்த வழியைக் கண்டுபிடித்துவிட்டால்
அதுவே உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு.

பிணியும் சனியும்
சதிகளுமே,
துறந்தாரையும விட்டுவைப்பதில்லை.

மழைத்துளிகள் பட்டதனால் Rain and nature


மழைத்துளிகள் பட்டதனால் மகிழ்வு கொண்டு
மயக்கியெனை ஈர்த்தாடும் மலர்கள் கூவி
அழைத்திசையைப் பாடுகின்ற குயில்கள் ஈடே
அற்றதொரு நடம்புனைந்த மயில்கள் இன்பம்
இழைத்தளிக்கும் இயற்கையென்றன் பக்கம் இன்னும்
என்ன இனி வேண்டுமிவை இருக்கத் தேனைக்
குழைத்தளிக்கும் சுவைக்கோலம் குறையா நாளும்
கொஞ்சுகிளி தத்திவரும் குந்தும் தோளில்.