புதன், 20 அக்டோபர், 2010

பொருள்கண்டு போற்றுதல் ஒன்றே கவிஞர்
நருள்தந்த நன்மையென் பார்.

நருள் = மக்கள்.்


Finding topics and substance for theses Reply with quote
ஆய்வுக் கட்டுரைகளுக்குத் தலைப்பும் பொருளும் தேடுவதில் உள்ள் தொலலைகள் பற்றிச் சில வரிகள். நல்ல தலைப்பும் பொருளும் கிடைக்காவிட்டால் யாது செய்வது?



நல்ல தலைப்புகள் வேண்டும் -- எந்த
நாட்டிலும் ஆய்வு செய் வோர்க்கு;
மெல்ல எதனையும் கொள்வார் -- தேடி
மேனி அலுத்ததன் பின்னே!

மொட்டைத் தலைமுழங் கால்கள் -- என
முடிச்சுகள் எங்கணும் போட்டு -- புனை ்
கட்டுரை நாட்ட முடிந்தால் -- முனை
கண்டவர் என்றுயர் வாராம்,

ஒன்றினையொன்று் உண்டிடுமா றேன்படைத்தாய்!

கரும்பினிலும் கரடியிலும் உயிரை வைத்தாய்
கருத்தாக அவைதமக்கு வளர்ச்சி வைத்தாய்
எறும்புமுதல் உலகினில்வாழ் உயிர்களெல்லாம்
ஒன்றினையொன்று் உண்டிடுமா றேன்படைத்தாய்!

உட்கொள்வோன் ஓருடம்பை உண்டபின்னே
ஒன்றொழியப் பிறிதுவளர் மாயை செய்தாய்!
கட்புலனுக் கொழிந்துவிட்ட உருவும்பின்பு
காட்சிதர மீண்டுவராக் காலம்கண்டாய்!

போர்செய்து பல்லுயிரை அழிக்கவெண்ணும்
புலைமைதனை நிலைமையென விடுத்ததென்ன,
ஏர் உய்தி பெற்றுலகில் அறமும் ஓங்க
ஏற்றவழி நின்றுதவ இணங்கிவாராய்

cat meditation

cat meditation Reply with quote
பூனை கண்ணை மூடிக்கொண்டால்


பூனை கண்ணை மூடிக்கொண்டால்
புவியும் இருண்டு விட்டதென்று
நினைத்துக் கொள்கிற தென்பார்கள்.
நேக்கு் அப்படித் தெரியவில்லை.
தியானம் செய்வது போலஅல்லவா
தெரிகிறது என்றன் அன்பர்களே
உடலை வளைத்துக் களிக்கையிலே
யோகம் போலும் தெரிகிறதே!