வெள்ளி, 2 அக்டோபர், 2009

பெண்னை --- துறந்தார் !

பெண்ணை இகழ்ந்தார்தம் பேதைமை ஒப்பதே
கண்ணை இழந்தார்் கதி.

துறந்தார்க்குத் தொல்லைஒன் றில்லை உலகில்
சிறந்தேம்யாம் என்பார் அவர்!

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

pullAngkuzal - puLLAngkuzal.

புள்ளாங்குழல்.

ல்கர ளகர எழுத்து மாற்றங்கள் பற்றி முன்பு எழுதியுள்ளேன்.
பொருள் மாறாவிடின், போலி என்ப. எ-டு: திறன் - திறம் - திறல். அறம் > அறன்.

இந்த வகையில், மெல்ல > மெள்ள என்பதுபோன்ற திரிபுகளைக் குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது இன்னொன்று:

புல்லாங்குழல் > புள்ளாங்குழல்.

ஆனால் இது பேச்சுவழக்குத் திரிபு என்கிறார் அறிஞர் கி.வா.ஜ.

மக்கள் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார், " புள்ளாங்குழல்" என்றே பாட்டில் அமைத்தார்.

புதன், 2 செப்டம்பர், 2009

In the life of poet Longfellow

மனையாளும் பற்றிஎரிந் திட்டபோது
தனையோடித் தந்திட்டான் தீயணைக்க;

நினைவற்று வீழ்ந்திட்டாள் அவள், அவற்கோ
நெஞ்சு முகம் பிறஎங்கும் தீக்காயங்கள்;

உணர்வுற்ற பெருங்கவிஞன் "நெடுமான்" வாழ்வில்
உள்கவிந்த சோகத்தை என்னசொல்வேன்;

கணமேனும் கண்ணீரை நிறுத்திக் கொள்ள
கருதிடினும் கூடுவதோ உருகும் நெஞ்சர்?

"நெடுமான்" - Longfellow, American poet.