ஒரு வீட்டாரைக் காண்பதற்காகச் சென்ற போது அங்கு இந்தக் குட்டி நாயைச் சந்தித்தேன்.ஆறுமாதக் குட்டி. அப்போது இதைக் கூண்டுக்குள் அடைத்துவைத்திருந்தார்கள். இது வெளியில் வந்து என்னைச் சந்திக்க வேண்டுமென்று கத்தியது. நான் வேண்டிக்கொள்ளவே, அவர்கள் இதைத் திறந்துவிட்டார்கள். நன்கு மோந்து பார்த்தபின், கூட்டாளி ஆகிவிட்டது. இதன் பெயர் நினைவிலில்லை. நான் சின்னக்குட்டி என்று கூப்பிட்டேன்.
மீண்டும் இதைச் சென்று காண ஆசை.
இதன் வேலை "திருடனைப் பிடிப்பதுதான்." இது எங்கே திருடனைப் பிடிக்கப்போகிறது என்று கவலைப்பட்டார்கள். "கூட்டாளிபிடிக்கத் தான் இது இலாயக்கு" என்று சொல்லி இந்த நாயின் "மதிப்பெண்களை"க் குறைத்துவிட்டதுபோல் தெரிகிறது.
தாடியைக் கண்டு தவிர்த்து ஓடிடாமல்
ஓடியென் னைநாடி ஒன்றிக் கொண்டதால்
சின்னக்குட்டி நாய், என்னைக் கட்டிப்பிடித்து
கள்ளம் ஏதுமின்றி உள்ளம் கவர்ந்ததே .
வேண்டுகோள்:
லாயக்கு என்ற சொல்லை அரபு அகரவரிசையில் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களுக்கு அரபு தெரிந்திருந்தால் கண்டுபிடித்து எழுதுங்கள். பின்னூட்டம் இடவும். அரபு அகரவரிசையைக் படம் எடுப்பது நன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக